JioPhone Next-ஐ விட குறைவான விலை.. ஆண்ட்ராய்டு 11 உடன் வந்த மிரட்டல் ஸ்மார்ட்போன்.. விலை என்ன தெரியுமா?

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் குறைந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு தான் அதிக வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் அதன் மவுசு நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே இருக்கிறது. இந்த யுக்தியைக் கையில் எடுத்து வெற்றி கண்ட நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ் ஜியோ என்றாலும் கூட, ஜியோவின் யுக்தியை முறியடிக்கும் வகையில் ZTE நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடலை மிகவும் மலிவான விலையில் அறிமுகம் செய்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புதிய ZTE Blade L9 ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகமா?

புதிய ZTE Blade L9 ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகமா?

ZTE நிறுவனம் ஒரு சீன தொழில்நுட்ப நிறுவனமாக இருந்தாலும், பல புதிய சாதனங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. தற்போது ZTE நிறுவனம் நுழைவு நிலை விவரக்குறிப்புகளுடன் கூடிய ZTE பிளேட் L9 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை மெக்சிகோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ZTE Blade L9 ஸ்மார்ட்போன் 5' இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 8 மெகாபிக்சல் கேமராவுடன் பொக்கே எஃபெக்ட் கொண்ட போர்ட்ரெய்ட் புகைப்படங்களை ஆதரிக்கும் ஆதரவுடன் வருகிறது.

ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனில் ZTE Blade L9 ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனில் ZTE Blade L9 ஸ்மார்ட்போன்

இந்த புதிய ZTE Blade L9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனில் இயங்குகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தடிமனான பெசல்களைக் கொண்டுள்ளது. மேலும் இது செவ்வக பின்புற கேமரா தொகுதியைக் கொண்டுள்ளது. ZTE Blade L9 ஸ்மார்ட்போனின் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் பட்டன்கள் போனின் வலது விளிம்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நிறுவனம் ரஷ்யாவில் ZTE Blade A31 என்ற பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?

ZTE பிளேட் L9 ஸ்மார்ட்போனின் அறிமுக விலை என்ன?

ZTE பிளேட் L9 ஸ்மார்ட்போனின் அறிமுக விலை என்ன?

இந்த சாதனமும் Android 11 Go Edition இல் இயங்கும் வல்லமை கொண்டது. இது Unisoc சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ZTE Blade A31 ஸ்மார்ட்போன் 8 மெகாபிக்சல் கொண்ட பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. சரி, இது இருக்கட்டும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ZTE பிளேட் L9 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிப் பார்க்கலாம். ZTE பிளேட் L9 ஸ்மார்ட்போன் இப்போது வெறும் MXN 1.699 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இதன் விலை சுமார் ரூ. 6,100 மட்டுமே.

ஜியோபோன் நெக்ஸ்டை விட கம்மி விலையில் புது ஸ்மார்ட்போனா?

ஜியோபோன் நெக்ஸ்டை விட கம்மி விலையில் புது ஸ்மார்ட்போனா?

உண்மையைச் சொல்லப் போனால், இது ஜியோபோன் நெக்ஸ்டை விட மிகவும் குறைவான விலை என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் இந்தியச் சந்தையில் ரூ. 6,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டு, இப்போது விற்பனைக்கு வாங்குவதற்குக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனும் ஆண்ட்ராய்டு இல் இயங்கும் பிரத்தியேக பிரகதி ஓஎஸ் உடன் செயல்படுகிறது. JioPhone Next ஆனது 5.45' இன்ச் HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது.

தினமும் வந்த 'குட் மார்னிங்' மெசேஜ்.. 5.91 லட்சம் அபேஸ்.. உஷார் மக்களே.. இந்த தப்ப நீங்க செய்யாதீங்க..தினமும் வந்த 'குட் மார்னிங்' மெசேஜ்.. 5.91 லட்சம் அபேஸ்.. உஷார் மக்களே.. இந்த தப்ப நீங்க செய்யாதீங்க..

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 சிப்செட் மூலம் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 512 ஜிபி வரை சேமிப்பக விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் இது கொண்டுள்ளது. JioPhone Next ஆனது 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. இது 3,500mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இது டூயல் சிம் வசதியைக் கொண்டுள்ளது. இது ப்ளூடூத், 3.5 ஆடியோ ஜாக் போன்ற எண்ணற்ற முக்கிய அம்சங்களுடன் வெளிவருகிறது.

ZTE பிளேட் L9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச விபரம்

ZTE பிளேட் L9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச விபரம்

ZTE Blade L9 ஆனது Android 11 (Go Edition) இல் இயங்குகிறது மற்றும் 18:9 விகிதத்துடன் கூடிய 5' இன்ச் WVGA கொண்ட 480x960 பிக்சல்கள் உடைய டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 1 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட Unisoc SC7731e குவாட் கோர் சிப்செட் மூலம் செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 128 ஜிபி வரை விரிவாக்க கூடிய ஸ்டோரேஜ் விருப்பமும் வழங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அவதாருடன் மெட்டாவர்ஸில் களமிறங்கும் ஆண்டவர் கமல் ஹாசன்: உலகநாயகனின் சொந்த 'உலகம்' தயார்.!டிஜிட்டல் அவதாருடன் மெட்டாவர்ஸில் களமிறங்கும் ஆண்டவர் கமல் ஹாசன்: உலகநாயகனின் சொந்த 'உலகம்' தயார்.!

ZTE பிளேட் L9 போனின் கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

ZTE பிளேட் L9 போனின் கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

ZTE Blade L9 ஆனது பொக்கே போன்ற படங்களை எடுக்கக்கூடிய ஒற்றை 8-மெகாபிக்சல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது.முன்பக்கத்தில் செல்ஃபி எடுப்பதற்கும் வீடியோ அழைப்பதற்கும் 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போன் 2,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் அதிக ஆற்றல் நுகர்வுகளைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதாகக் கூறப்படும் அறிவார்ந்த ஆற்றல் சேமிப்பு பயன்முறையைக் கொண்டுள்ளது. ZTE பிளேட் L9 இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் மைக்ரோ USB போர்ட், 3G, புளூடூத் v4.2 மற்றும் பல உள்ளன.

ZTE Blade L9 vs ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்

ZTE Blade L9 vs ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்

இந்த புதிய ZTE Blade L9 ஸ்மார்ட்போனின் அளவு 137.5x67.5x10 மிமீ மற்றும் 143 கிராம் எடை கொண்டது. இது, ப்ளூ மற்றும் கிரே வண்ணங்களில் மெக்ஸிக்கோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்னதான் இந்த ஸ்மார்ட்போன் ஜியோபோன் நெக்ஸ்டை விட கம்மியான விலையில் இருந்தாலும், ஜியோபோன் நெக்ஸ்ட்டில் இருக்கும் சில அம்சங்கள் இந்தZTE Blade L9 போனை விட சற்று மேம்படுத்தலுடன் இருக்கிறது என்பதே உண்மை.

JioPhone Next எதிர்பார்த்த விலையில் வராததற்கு இதான் காரணமா? EMI விலை கம்மியாக இருந்தும் தயக்கம் ஏன்?JioPhone Next எதிர்பார்த்த விலையில் வராததற்கு இதான் காரணமா? EMI விலை கம்மியாக இருந்தும் தயக்கம் ஏன்?

மாதம் ரூ. 300 மட்டும் இருந்தால் போதும்.. ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்கலாம்

மாதம் ரூ. 300 மட்டும் இருந்தால் போதும்.. ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்கலாம்

ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் விலை ரூ.6,499 ஆக இருந்தாலும், வெறும் ரூ. 1,999 மட்டும் முன் பணமாக நீங்கள் செலுத்தி இந்த சாதனத்தை வாங்கிக்கொள்ள முடியும். மீதம் எஞ்சியுள்ள பணத்தை நீங்கள் ஜியோ நிறுவனம் வழங்கும் நான்கு EMI திட்டங்களில் ஏதேனும் ஒரு திட்டத்தை தேர்வு செய்து அதன் மூலம் 24 மாதங்கள் அல்லது 18 மாதங்களில் பணத்தை திருப்பி செலுத்திவிடலாம். ஜியோ வழங்கும் ஆரம்ப EMI திட்டத்தின் விலை வெறும் ரூ. 300 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
ZTE Blade L9 Entry Level Smartphone Launched With Lesser Price Than JioPhone Next : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X