ஜூம் செயலியை கண்டுபிடித்தவர்கள் ஸ்டாலினுக்கு ராயல்டி தர வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்- காரணம் தெரியுமா?
ஜூம் செயலியை கண்டுபிடித்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ராயல்டி தர வேண்டும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக பொதுக்குழு கூட்டம்
திமுக பொதுக்குழு கூட்டம் ஜூம் செயலி காணொளி மூலம் நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் 67 இடங்களில் இருந்து சுமார் 3500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் காணொளி மூலமே எடுக்கப்பட்டது.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அதில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஜூம் செயலியை கண்டுபிடித்தவர்கள் ராயல்டி கொடுக்க வேண்டும் ஏனெனில் பொதுக்குழு கூட்டத்தையே அவர் ஜூமில் நடத்தி முடித்துள்ளார் என கூறினார்.

களத்தில் இறங்காமலேயே பணியாற்ற ஜூம்
கொரோனா காலத்தில் களத்தில் இறங்காமலேயே பணியாற்ற ஜூம் செயலி உதவியதாகவும், சில மாதங்களாக ஜூம் செயலியை தான் பயன்படுத்தி அதன் மூலம் களநிலவரத்தை தெரிந்துக் கொள்வதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு ராயல்டி வழங்க வேண்டும்
தான் தலைவர் ஸ்டாலினிடம் பேசியதன் மூலம், இதுவரை அவர் 250-க்கும் மேற்பட்ட ஜூம் மீட்டிங்குகளில் பேசியுள்ளார் என்பதை அறிந்துக் கொண்டதாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். ஜூம் செயலி கண்டுபிடித்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ராயல்டி வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பு
கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பில் தொடங்கி பல்வேறு பயன்பாட்டுக்கும் ஜூம் செயலி பிரதானமாக இருந்து வருகிறது. ஜூம் செயலிக்கு இணை போட்டியாக கூகுள் மீட் போன்ற செயலிகள் பல்வேறு அம்சங்களை தங்களது பயன்பாட்டில் இணைத்து வருகின்றன.

அலுவலக மீட்டிங்களுக்கு ஜூம் செயலி
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் படிப்பு கெட்டுப்போகிவிடக் கூட்டது என ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வீட்டில் இருந்த வேலை செய்ய அறிவுறுத்தி வரும் நிறுவனங்கள் அலுவலக மீட்டிங்களை ஆன்லைன் வீடியோகால் மூலமாக நடத்தி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சி செயல்பாடுகளுக்கும் ஆன்லைன் வீடியோகால் செயலி பிரானமாக இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications