இனிமேல் இந்த லேப்டாப்களில் Zoom App வேலை செய்யாது! ஏன்? மாற்றுவழி என்ன?

|

ஜூம் ஆப் (Zoom App) - ஓவர் நைட்டில் சக்ஸஸ் ஆன ஒரு வீடியோ கான்பரன்சிங் தளமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் உண்மை என்னவென்றால், இந்த உலகத்தில் எதுவுமே அதிர்ஷத்தை அடிப்படையாக கொண்டு நடப்பதில்லை; அதற்கு பின்னால் பல ஆண்டுகள் கடின உழைப்பு உள்ளதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த உழைப்பின் விளைவாகவே ஜூம் ஆப், கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மற்றும் பேசப்பட்ட ஆப்களில் ஒன்றாக உருமாறியுள்ளது.

சரியான நேரத்தில், சரியான தகுதியுடன்

சரியான நேரத்தில், சரியான தகுதியுடன் "இருந்த" ஜூம் ஆப்!

திடீரென்று ஒட்டுமொத்த உலகையும் முடக்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம், வீடியோ கால்களின் தேவை அபரிமிதமாக உயர்த்தியது. அந்த தேவையை சரியான நேரத்தில், சரியான தகுதியுடன் பூர்த்தி செய்த ஜூம் ஆப்பிற்கு கிடைத்த வரவேற்பும், வருமானமும் இருக்கிறதே, அடடா.. அது வேற லெவல்!

ஜூம் ஆப்பை உச்சத்திற்கு கொண்டு சென்ற அதே கொரானா தொற்றுநோய் தான், க்ரோம்புக்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கும் வழிவகுத்தது.

க்ரோம்புக்ஸ் - அப்போது தேவை, இப்போது இல்லை!

க்ரோம்புக்ஸ் - அப்போது தேவை, இப்போது இல்லை!

பெருந்தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன்களின் விளைவாக பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் வழியாகவே கல்வி கற்க வேண்டும் என்கிற அவசியத்திற்குள்ளும், அலுவலக பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் என்கிற கட்டாயத்திற்குள்ளும் தள்ளப்பட்டனர்.

இதன் விளைவாக, மக்கள் மலிவு விலையிலான லேப்டாப்களை தேட, க்ரோம்புக்களின் தேவையும் அதிகரித்தது. அதெல்லாம் பழைய கதை; லேட்டஸ்ட் நியூஸ் என்னவென்றால், 9to5Google வழியாக வெளியான ஒரு அறிக்கையானது க்ரோம்புக்களுக்கான ஜூம் ஆப் ஆதரவு விரைவில் நிறுத்தப்படும் என்கிற பகீர் தகவலை வெளிப்படுத்தி உள்ளது.

க்ரோம்புக்களில் ஜூம் ஆப்பிற்கான ஆதரவு எப்போது நிறுத்தப்படும்?

க்ரோம்புக்களில் ஜூம் ஆப்பிற்கான ஆதரவு எப்போது நிறுத்தப்படும்?

வெளியான அறிக்கையில், க்ரோம்புக்களின் வழியாக ஜூம் ஆப்பை பயன்படுத்துபவர்கள் வருகிற ஆகஸ்ட் 2022 க்குப் பிறகு அதை அணுக முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.

நல்ல செய்தி என்னவென்றால், க்ரோம்புக்கில் தொடர்ந்து ஜூம் ஆப்பை பயன்படுத்துவதற்கான மாற்று வழியையும் அது வழங்குகிறது. அது குறித்த விவரங்களை கடைசியாக பார்க்கலாம். அதற்கு முன், க்ரோம்புக்கில் ஜூம் ஆப் ஏன் நிறுத்தப்படுகிறது என்கிற காரணத்தை பற்றி சுருக்கமாக பேசுவோம்.

இனிமேல் அவ்ளோ ஈஸியாக ஒரு WhatsApp க்ரூப்பில் சேர முடியாது; பீதியை கிளப்பும் புது Update!இனிமேல் அவ்ளோ ஈஸியாக ஒரு WhatsApp க்ரூப்பில் சேர முடியாது; பீதியை கிளப்பும் புது Update!

க்ரோம்புக்களில் இருந்து ஜூம் ஆப்பின் ஆதரவை நீக்க என்ன காரணம்?

க்ரோம்புக்களில் இருந்து ஜூம் ஆப்பின் ஆதரவை நீக்க என்ன காரணம்?

ஜூம் ஆப், க்ரோம்புக்களில் கடந்த சில வருடங்களாகவே இருக்கும் போதிலும் கூட, அதன் செயல்பாடு மிகவும் குறைவாகவே உள்ளதாக வெளியான அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும், சிறிது காலமாகவே இந்த ஆப் குறிப்பிடத்தக்க அப்டேட்களையும் பெறவில்லை.

ஒட்டுமொத்தமாக, க்ரோம்புக்களில் இந்த ஆப் வேலை செய்யாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம் - இது ஒரு பழைய ஆப் ஆக மாறிவிட்டது என்பதே ஆகும்.

எனவே தான் கூகுள் நிறுவனம், க்ரோம்புக்களில் இருந்து இந்த ஆப் வருகிற ஆகஸ்ட் 2020 க்கு பிறகு படிப்படியாக நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் க்ரோம்புக்களுக்கான ப்ரொக்ரெஸிவ் வெப் ஆப்களை (Progressive Web Apps) தயார் செய்யும்படியும் டெவெலப்பர்களை வலியுறுத்தி உள்ளது.

ப்ரொக்ரெஸிவ் வெப் ஆப்ஸ் என்றால் என்ன?

ப்ரொக்ரெஸிவ் வெப் ஆப்ஸ் என்றால் என்ன?

ப்ரொக்ரெஸிவ் வெப் ஆப்கள், அடிப்படையில் வெப்சைட்களை போலவே செயல்படுகின்றன, ஆனால் ஆப் போன்ற அனுபவத்தை வழங்குகின்றன. அதாவது இதன் கீழ் ஆப்களை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது, மாறாக இவைகள் வழக்கமான வெப்சைட்களை போலவே செயல்படுகின்றன.

இதனொரு பகுதியாக, கூகுள் நிறுவனம் க்ரோம்ஓஎஸ்- க்கான (ChromeOS) ப்ரொக்ரெஸிவ் வெப் ஆப்களை சிறிது காலமாக விளம்பரப்படுத்தி வருகிறது. மேலும் வருகிற ஜூன் 2022 முதல், க்ரோம்ஓஎஸ்-இல் உள்ள எல்லா க்ரோம் ஆப்களையும் கூகுள் "இழுத்து மூடுகிறது". அந்த பட்டியலில் ஜூம் ஆப்பும் உள்ளது. கூகுளின் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே ஜூம் ஆப் அதன் க்ரோம்புக் செயல்பாட்டை இழக்க உள்ளது.

ஆகஸ்ட் 2022 க்கு பிறகு க்ரோம்புக்கில் ஜூம் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?

ஆகஸ்ட் 2022 க்கு பிறகு க்ரோம்புக்கில் ஜூம் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?

அறியாதோர்களுக்கு கடந்த ஆண்டு, ஜூம் நிறுவனம் க்ரோம்புக்களுக்கான அதன் ப்ரொக்ரெஸிவ் வெப் ஆப்பை (PWA) அறிமுகப்படுத்தியது. மேக்ஓஎஸ்-இல் (MacOS) ஜூம் எவ்வாறு செயல்படுகிறதோ, அதேபோலவே தான் இதுவும் செயல்படுகிறது.

மேலும் ஜூம் நிறுவனம் தொடர்ந்து அதன் ப்ரொக்ரெஸிவ் வெப் ஆப்பை அப்டேட் செய்து வருகிறது. எனவே கூகுள் அறிவித்துள்ளபடி, வருகிற ஆகஸ்ட் 2022 க்கு பிறகு, அதாவது க்ரோம்புக்கில் ஜூம் ஆப் செயலிழந்த பிறகு, உங்கள் க்ரோம்புக்கில் ஜூம் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் ப்ரொக்ரெஸிவ் வெப் ஆப்பை பயன்படுத்த வேண்டும்; அவவ்ளவுதான்!

Photo Courtesy: Google

Best Mobiles in India

English summary
Google Announced that Zoom app will stop working on Chromebooks after August 2022. Here is Why and What is the alternative option to keep use Zoom app in ChromeOS

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X