ஜூம் ஆப் விண்டோஸ் பாஸ்வேர்டுகளை ஹேக் செய்யுமா?- வெளியான அதிர்ச்சி தகவல்

|

கொரோனா அச்சம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி வருகிறது. அதேபோல் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க அறிவுறுத்தி வருகிறது.

வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப்

வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப்

வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஏற்றபடி பல தொலைத் தொடர்பு நிறுவனங்களும் டேட்டா சலுகைகளை கூடுதலாக வழங்கி அறிவித்து வருகிறது. அதேபோல் வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப் பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அறிக்கையில் பல்வேறு தகவல்கள்

அறிக்கையில் பல்வேறு தகவல்கள்

ஜூம் ஆப் குறித்து மதர்போர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் ஜூம் ஆப் IOS பயன்பாடு பயனர்களின் அனுமதியே இல்லாமல் பேஸ்புக்கிற்கு தகவல்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ஜூம் ஆப் பயனர்களுக்கு பேஸ்புக் அக்கவுண்ட் இல்லையென்றாலும் தங்கள் பயனர்களின் தகவலை பேஸ்புக்கிற்கு அனுப்புகிறது.

unique advertisement identifier

unique advertisement identifier

பேஸ்புக் வரைபட தகவல் API உடன் ஜூம் இணைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. இதன்மூலம் (unique advertisement identifier) என்ற அடிப்படையில் பயனர்களுக்கு தேவையான விளம்பரங்களை காண்பிக்க முடியும்.

தனியுரிமைக் கொள்கை

தனியுரிமைக் கொள்கை

ஜூம் ஆப் தனியுரிமைக் கொள்கையில் இந்த வகையான பரிமாற்றத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஜூம்-ன் இந்த செயல் அதிர்ச்சி அளிக்கும் வகையில், பாதுகாப்பு அம்சத்தில் இதுகுறித்து தனியுரிமைக் கொள்கையில் எதுவுமே இல்லை என்பது. ஜூம்-ன் தனியுரிமைக் கொள்கையை பகுப்பாய்வு செய்த ஆர்வலர் பாட் வால்ஷ் இதை கண்டறிந்து கூறியுள்ளார்.

ஜூம் எதுவும் விளக்கவில்லை

ஜூம் எதுவும் விளக்கவில்லை

ஜூம் ஆப் பயனர்கள் பேஸ்புக் மூலம் உள்நுழையும் போது தான், இந்த சேவை தகவலை சேகரிக்கும் என குறிப்பிடுகிறது. இதில் ஒருவருக்கு பேஸ்புக் கணக்கு இல்லையென்றாலும் அவர்களின் கணக்கை சேகரிக்கிறதா என்பது குறித்து ஜூம் எதுவும் விளக்கவில்லை.

சபாஷ்: ரயில், விமான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்., ஆனா ஒரு நிபந்தனை!சபாஷ்: ரயில், விமான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்., ஆனா ஒரு நிபந்தனை!

கூகிளின் Hangouts

கூகிளின் Hangouts

கூகிளின் Hangouts சந்திப்பு மற்றும் மைக்ரோசாஃப்ட் ஸ்கைப்பிற்கு போட்டியாக ஜூம் ஆப் தற்போது தலையெடுத்து வருகிறது என்பதில் ஆச்சரியம் இல்லை.

பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்

பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்

பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் பெலிக்ஸ் சீலே வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஜூம் ஆப் ஏபி வகை இதன் மூலம் தற்போதைய நிர்வாகக் குழுவில் இருப்பவர்கள் ரூட் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து ஜூம் ஆப் விண்டோஸ் பாஸ்வேர்டுகளை ஹேக் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூடுதல் அறிவுறுத்தல்கள்

கூடுதல் அறிவுறுத்தல்கள்

அதேபோல் "கூடுதல் அறிவுறுத்தல்கள் எதுவும் காட்டப்படாது, மேலும் உட்செலுத்தப்பட்ட குறியீடு தன்னிச்சையாக ஆடியோ மற்றும் வீடியோவை பதிவு செய்ய முடியும்" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
zoom app may attacks to access windows passwords reports said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X