ஜூம் செயலியில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?- இத்தனை நாளா தெரியாம போச்சே!

|

ஜூம் செயலியில் பலரும் அறிந்திருக்காத அட்டகாச அம்சம் ஒன்று உள்ளது. அது டச்-அப் எனபிள் மோட் ஆகும். இதை கிளிக் செய்வதன் மூலம் தாராளமாக வீடியோகால் ஆன் செய்து தங்களது முகத்தை அழகாக காண்பிக்கலாம்.

மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல்

மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல்

கொரோனா பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தியது. அதேபோல் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க அறிவுறுத்தியது.

டேட்டா சலுகைகள் கூடுதலாக வழங்கும் நிறுவனங்கள்

டேட்டா சலுகைகள் கூடுதலாக வழங்கும் நிறுவனங்கள்

வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஏற்றபடி பல தொலைத் தொடர்பு நிறுவனங்களும் டேட்டா சலுகைகளை கூடுதலாக வழங்கி அறிவித்து வருகிறது. அதேபோல் வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப் பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதான தேவையாக ஜூம் ஆப்

பிரதான தேவையாக ஜூம் ஆப்

வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் நிறுவனங்களுக்கு சிறந்த உதவியாக இருந்து வருவது ஜூம் ஆப், இதன்மூலம் வீடியோ கான்பிரன்ஸ் கால் மேற்கொள்வதோடு பல்வேறு நேரடி சந்தேகங்களும் வீடியோ கான்பிரன்ஸ் வழியாக தீர்க்கப்பட்டு வருகிறது. இது அனைத்தும் ஜூம் ஆப் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குவியும் வாடிக்கையாளர்கள்

குவியும் வாடிக்கையாளர்கள்

இதில் எச்டி திரையில் வீடியோ கான்பிரன்ஸ் கால் மேற்கொள்ளலாம். இதில் 40 நிமிடங்கள் வரை குழு(குரூப்) கால் வசதி மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்தும் எந்த இடையூறும் இன்றி இலவசமாக வழங்கப்படுவதால் இதற்கு வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஆர்டர் செய்த மொபைல் வீட்டுக்கு வந்தது: திறந்து பார்த்தா?-ஒரு மனசாட்சி வேண்டாமா?ஆர்டர் செய்த மொபைல் வீட்டுக்கு வந்தது: திறந்து பார்த்தா?-ஒரு மனசாட்சி வேண்டாமா?

வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப்

வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப்

வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஏற்றபடி பல தொலைத் தொடர்பு நிறுவனங்களும் டேட்டா சலுகைகளை கூடுதலாக வழங்கி அறிவித்து வருகிறது. அதேபோல் வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப் பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் வீட்டில் இருப்பவர்களும் தங்கள் குடும்பத்தாரோடு தொடர்பு கொள்வதற்கு இதை பயன்படுத்துகின்றனர்.

முன்புற கேமரா ஆஃப்

முன்புற கேமரா ஆஃப்

சிலரது முகம் நேரில் பார்ப்பதற்கும் கேமராவின் மூலம் பார்ப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கும். தங்களது முகத்தை வீடியோ காலில் காட்டுவதற்கு சங்கோஜப் படும் பலரும், தங்களது முன்புற கேமரா ஆஃப் செய்துவிட்டு குரலழைப்பை மேற்கொள்கின்றனர்.

ஜூம் ஆப்பில் சிறந்த அம்சம்

ஜூம் ஆப்பில் சிறந்த அம்சம்

அவர்களுக்காக ஜூம் ஆப்பில் சிறந்த அம்சம் ஒன்று உள்ளது. அது டச் அப் மை அப்பியரனஸ், இதை கிளிக் செய்தால் தங்களது முகத்தை அழகாகவும் மென்மையாகவும் காட்சிப்படுத்தும். இந்த அம்சம் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

டச் அப் மை அப்பியரன்ஸ்

டச் அப் மை அப்பியரன்ஸ்

தங்களது சாதனத்தில் ஜூம் ஆப் ஓபன் செய்து, மேல் வலது புறத்தில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் வீடியோ ஆப்ஷனை தேர்வு செய்து, டச் அப் மை அப்பியரன்ஸ் என்பதை எனபிள் செய்யவும். இதை செய்தவுடன் தாங்கள் வீடியோகால் மேற்கொள்ளும் போதெல்லாம் தங்களது முகத்தை அழகாக காண்பிக்கும். இந்த அமைப்பை வீடியோகாலில் இருக்கும் போதுகூட ஆன் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Zoom App Have Touch Up My Appearance Mode To Look Good on VideoCall

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X