Home
News

கொஞ்சம் பொறுமை., Google playstore-ல் குவியும் டவுன்லோட்: whatsapp, facebook மிஞ்சும் ஆப்!

கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் வீட்டிலேயே தங்கி வருகின்றனர். இந்த நேரத்தில் ஒரு ஆப் மில்லியன் கணக்கில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி வருகிறது. அதேபோல் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க அறிவுறுத்தி வருகிறது.

டிக்டாக், வாட்ஸ்அப் போன்ற பிரபலமான ஆப்

டிக்டாக், வாட்ஸ்அப் போன்ற பிரபலமான ஆப்

கூகிள் பிளே ஸ்டோரின் இலவச பிரிவின் கீழ் சிறந்த பயன்பாடாக இது மாறியுள்ளது. இந்த பயன்பாடு டிக்டாக், வாட்ஸ்அப் போன்ற பிரபலமான பயன்பாடுகளை மிஞ்சும் அளிவிற்கு அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூம் ஆப் 50 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ கான்பிரன்ஸ் கால்

வீடியோ கான்பிரன்ஸ் கால்

வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் நிறுவனங்களுக்கு சிறந்த உதவியாக இருந்து வருவது ஜூம் ஆப், இதன்மூலம் வீடியோ கான்பிரன்ஸ் கால் மேற்கொள்வதோடு பல்வேறு நேரடி சந்தேகங்களும் வீடியோ கான்பிரன்ஸ் வழியாக தீர்க்கப்பட்டு வருகிறது. இது அனைத்தும் ஜூம் ஆப் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குவியும் வாடிக்கையாளர்கள்

குவியும் வாடிக்கையாளர்கள்

இதில் எச்டி திரையில் வீடியோ கான்பிரன்ஸ் கால் மேற்கொள்ளலாம். இதில் 40 நிமிடங்கள் வரை குழு(குரூப்) கால் வசதி மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்தும் எந்த இடையூறும் இன்றி இலவசமாக வழங்கப்படுவதால் இதற்கு வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப்

வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப்

வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஏற்றபடி பல தொலைத் தொடர்பு நிறுவனங்களும் டேட்டா சலுகைகளை கூடுதலாக வழங்கி அறிவித்து வருகிறது. அதேபோல் வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப் பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் வீட்டில் இருப்பவர்களும் தங்கள் குடும்பத்தாரோடு தொடர்பு கொள்வதற்கு இதை பயன்படுத்துகின்றனர்.

அறிக்கையில் பல்வேறு தகவல்கள்

அறிக்கையில் பல்வேறு தகவல்கள்

ஜூம் ஆப் குறித்து மதர்போர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஜூம் ஆப் IOS பயன்பாடு பயனர்களின் அனுமதியே இல்லாமல் பேஸ்புக்கிற்கு தகவல்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ஜூம் ஆப் பயனர்களுக்கு பேஸ்புக் அக்கவுண்ட் இல்லையென்றாலும் தங்கள் பயனர்களின் தகவலை பேஸ்புக்கிற்கு அனுப்புகிறது.

unique advertisement identifier

unique advertisement identifier

பேஸ்புக் வரைபட தகவல் API உடன் ஜூம் இணைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. இதன்மூலம் (unique advertisement identifier) என்ற அடிப்படையில் பயனர்களுக்கு தேவையான விளம்பரங்களை காண்பிக்க முடியும்.

தனியுரிமைக் கொள்கை ஜூம் ஆப்

தனியுரிமைக் கொள்கை ஜூம் ஆப்

தனியுரிமைக் கொள்கையில் இந்த வகையான பரிமாற்றத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஜூம்-ன் இந்த செயல் அதிர்ச்சி அளிக்கும் வகையில், பாதுகாப்பு அம்சத்தில் இதுகுறித்து தனியுரிமைக் கொள்கையில் எதுவுமே இல்லை என்பது. ஜூம்-ன் தனியுரிமைக் கொள்கையை பகுப்பாய்வு செய்த ஆர்வலர் பாட் வால்ஷ் இதை கண்டறிந்து கூறியுள்ளார்.

ஜூம் எதுவும் விளக்கவில்லை

ஜூம் எதுவும் விளக்கவில்லை

ஜூம் ஆப் பயனர்கள் பேஸ்புக் மூலம் உள்நுழையும் போது தான், இந்த சேவை தகவலை சேகரிக்கும் என குறிப்பிடுகிறது. இதில் ஒருவருக்கு பேஸ்புக் கணக்கு இல்லையென்றாலும் அவர்களின் கணக்கை சேகரிக்கிறதா என்பது குறித்து ஜூம் எதுவும் விளக்கவில்லை.

Best Mobiles in India

English summary
zoom app gets millions of downloand in google playstore beats whatsapp, facebook
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X