உஷார்- ஜூம் செயலி மூலம் ஊடுருவும் ஹேக்கர்கள்: ஒரே ஒரு மெசேஜ் தான் மொத்தமும் ஓவர்!

|

ஜூம் செயலியில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டின் மூலம் உங்கள் கணினி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் தீம்பொருளை நிறுவ ஹேக்கர்களை அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூம் செயலியில் உள்ள பாதுகாப்பு குறைபாடு

ஜூம் செயலியில் உள்ள பாதுகாப்பு குறைபாடு

ஜூம் செயலியில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டின் மூலம் உங்கள் கணினி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் தீம்பொருளை நிறுவ ஹேக்கர்களை அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் முதலில் இலக்கு வைக்கப்பட்ட சாதனத்திற்கு ஒரு எளிய செய்தியை அனுப்புகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூம் செயலியானது அதன் பிழையை ஒப்புக் கொண்டிருக்கிறது.

புதிய செயல்பாடுகள் நடைமுறை

புதிய செயல்பாடுகள் நடைமுறை

கொரோனா தொற்று பரவிய காலம் முதல் பல்வேறு புதிய செயல்பாடுகளும் நடைமுறைக்கு வந்தது. இதில் பிரதான ஒன்று வீடியோ அழைப்பு. ஆன்லைன் வகுப்பில் தொடங்கி அலுவலக மீட்டிங் வரை அனைத்துக்கும் வீடியோ அழைப்பு பிரதானமாகிவிட்டது. வீடியோ அழைப்பு மேற்கொள்வதற்கு ஜூம் செயலியை பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால், உடனே தற்போது இந்த செயலியை அப்டேட் செய்ய வேண்டும். காரணம் செயலியில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டின் மூலம் ஹேக்கர்கள் உங்கள் கணினி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் தீம்பொருளை நிறுவ அனுமதித்திருக்கிறது. வெளியான அறிக்கையின்படி, ஹேக்கர்கள் முதலில் இலக்கு வைக்கப்பட்ட சாதனத்திற்கு ஒரு எளிய செய்தியை அனுப்புகிறார்கள், தொடர்ந்து சாதனத்தில் தீம்பொருள் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ளது. ஜூம் தற்போது பிழையை ஒப்புக் கொண்டிருக்கிறது.

மீட்டிங்களுக்கான ஜூம் கிளைண்ட் பதிப்பு

மீட்டிங்களுக்கான ஜூம் கிளைண்ட் பதிப்பு

அறிக்கைகளின்படி, மீட்டிங்களுக்கான ஜூம் கிளைண்ட் பதிப்பு 5.10.0க்கு முன்னாக இருந்த ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், லினக்ஸ், மேகோஸ் மற்றும் விண்டோஸ் சிஸ்டங்களில் இயங்குகிறது. 5.10.0 பதிப்புக்கு முன்னதான பயன்பாடுகளானது ஹோஸ்டர்பெயரை சரியாக சரிபார்க்கத் தவறிவிடுவதாக கூறப்படுகிறது. ஜூம் சேவைகளை பயன்படுத்த முயற்சிக்கும் போது, சந்தேகத்திற்கு இடமில்லாமல் கிளைண்டை ஏமாற்றி தீங்கிழைக்கும் பயன்பாடு மிக நுட்பமான வகையில் பயன்படுத்தலாம் என ஜூம் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. இந்த பிழையை கூகுளின் ப்ராஜெக்ட் ஜீரோ பிழை ஹண்டரான இவான் ஃப்ராட்ரிக் கண்டுபிடித்தார்.

ஒரே ஒரு செய்தி மட்டுமே போதும்

ஒரே ஒரு செய்தி மட்டுமே போதும்

XMPP நெறிமுறையை பயன்படுத்தி ஜூம் செயலி மூலம் ஒரே ஒரு செய்தியை மட்டுமே ஹேக்கர்கள் அனுப்புவது பாதிப்புக்குள்ளாக போதுமானது என ஃப்ராட்ரிக் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பயனர்களை குறிவைத்து பாதிக்கப்பட்டவரின் சாதனத்தில் தீங்கிழைக்கும் குறியீடுகளை பொருத்தும் வகையில் இந்த செய்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் மோஷமான விஷயம் என்னவென்றால் பயனர்கள் அச்சுறுத்தல் செய்தியை அணுகாவிட்டாலும் இந்த தீங்கிழைக்கும் பயன்பாடு சாதனங்களில் செலுத்தப்படும். இந்த மால்வேரை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ் உள்ளி சாதனங்களை எளிதில் குறிவைக்க முடியும் என ஃப்ராட்ரிக் குறிப்பிட்டார். அதேபோல் ஜூம் செயலியை அப்டேட் செய்து சமீபத்திய பதிப்பை பயன்படுத்தி இந்த பாதிப்புகளுக்கு உள்ளாவதில் இருந்து தப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

12 மொழிகளுக்கான நிகழ்நேர மொழிபெயர்ப்பு

12 மொழிகளுக்கான நிகழ்நேர மொழிபெயர்ப்பு

சமீபத்தில் 12 மொழிகளுக்கான நிகழ்நேர மொழிபெயர்ப்பு அம்சங்கள் ஜும் செயலியில் அறிவிக்கப்பட்டன. ஜூம் செயலி என்பது பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. ஜூம் அதன் வருடாந்திர Zoomtopia மாநாட்டில், ஜூம் அழைப்புகளுக்கான நிகழ்நேர பலமொழி டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் மொழிபெயர்ப்பு பயன்பாட்டை இணைப்பதாக அறிவித்தது. புதிய நிகழ்நேர மொழிபெயர்ப்பு அம்சம் ஆனது வீடியோ அழைப்புகளின் போது மொழி தடைகளை குறைக்க உதவுகிறது. இந்த நேரடி மொழிபெயர்ப்பு அம்சம் ஆனது 12 மொழிகளில் இயங்க இருக்கிறது. அதோடு பல புதிய அம்சங்களை அறிவித்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு ஆற்றப்பட்ட வழிமுறைகள்

செயற்கை நுண்ணறிவு ஆற்றப்பட்ட வழிமுறைகள்

ஜூம் பயன்பாடு செயற்கை நுண்ணறிவு ஆற்றப்பட்ட வழிமுறைகள், இயந்திர கற்றல் ஆகியவையின் மூலம் பேச்சாளர்களின் கருத்தை உரையாக மாற்ற அனுமதிக்க இருக்கிறது. மேலும் ஜும் தானியங்கி டிரான்ஸ்கிரிப்ஷனை 30 மொழிகளில் நீட்டிக்க திட்டமிட்டுள்ளோம் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பல மொழிகளில் கலந்துரையாடி கருத்துகளை பரிமாற்ற வேண்டிய சூழல் நிலவி வரும் இந்த சமயத்தில் வீடியோ காலில் லைவர் டிரான்ஸ்லேஷன் மற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன்களை வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. முதற்கட்டமாக 12 மொழிகளில் அறிமுகம் செய்கிறது. தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த அம்சம் ஆனது பயனர்களின் மொழி தடைகளை குறைக்க அனுமதிக்கிறது. இதில் இருக்கும் செயற்கை நுண்ணரிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தின் மூலம் பேசுபவரின் கருத்தை உரையாக மொழிபெயர்த்து காண்பிக்க அனுமதிக்கிறது. ஜூம் செயலியானது சமீபத்தில் கைட்ஸ் என்ற டிரான்ஸ்லேஷன் நிறுவனத்தை வாங்கியது. நிறுவனத்தை வாங்கிய இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Best Mobiles in India

English summary
Zoom Allowed Hackers to Install Malware on Your Computer, smartphones: Update App Soon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X