Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்!
அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்களுக்கு உதவும் வகையில் இந்தியா முழுவதும் 80 க்கும் மேற்பட்ட நகரங்களில் மளிகை பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளதாக சொமேட்டோ அறிவித்துள்ளது.

வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது
சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.

இந்தியாவில் 4,421 கொரோனா வைரஸ்
இந்தியாவில் 4,421 கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 115 இறப்புகளைப் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு
இதையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

80-க்கும் மேற்பட்ட நகரங்களில் மளிகை பொருட்கள் விநியோகம்
கொரோனா வைரஸ் காரணமாக ஊரங்கு உத்தரவினால் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வகையில் மக்களுக்கு உதவும்படியான இந்தியா முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நகரங்களில் மளிகை பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளதாக சொமேட்டோ அறிவித்துள்ளது.

சொமேட்டோ சந்தை வர்த்தகத்தின் புதிய சேவை
கடந்த மாதம் இறுதியில் கேரளா மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் சொமேட்டோ சந்தை வர்த்தகத்தின் புதிய சேவையை செய்யத் தொடங்கியது. சொமேட்டோவை போன்றே அதன் போட்டி நிறுவனமான ஸ்விகியும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு மளிகை பொருள் விநியோகத்தை தொடங்கியது.

சொமேட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல்
அதேபோல் மக்கள் வீட்டில் இருந்தபடியே Paytm ஆகியவைகளை மூலம் மளிகை பொருட்களை விநியோகிக்கத் தொடங்கியது. இதுகுறித்து சொமேட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் கூறுகையில், தங்கள் நிறுவனம் மளிகை பொருட்கள் விநியோகத்தை வாடிக்கையாளர்களுக்கு தொடங்கியுள்ளது. உள்ளூர் மற்றும் எஃப்எம்சிஜி நிறுவனங்களுடன் பல்வேறு தொடக்க நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்கு சேவை செய்வதற்கு தாங்கள் முழு பயன்பாடுகளை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மளிகை விநியோகத்தை வாங்கலாம்
சொமேட்டோ பயனர்கள் அதன் ஹோம்ஸ்கிரீனின் மூலம் கிடைக்கும் சொமேட்டோ சந்தை பிரிவு வழியாகச் சென்று அதன் பயன்பாட்டின் மூலம் மளிகை விநியோகத்தை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொமேட்டோ கோல்ட் மெம்பர்ஷிப் நீட்டிப்பு
மளிகை பொருட்கள் விநியோகத்துடன் சொமேட்டோ கோல்ட் மெம்பர்ஷிப் நீட்டிப்பானது இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், லெபனான், துருக்கி, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் கத்தார் போன்ற பகுதிகளில் அடுத்த 2 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விகியும் நாட்டின் பல பகுதிகளில் மளிகை விநியோக சேவை
சொமேட்டோவை போலவே, ஸ்விகியும் நாட்டின் பல பகுதிகளில் மளிகை விநியோக சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது. சில நகரங்களில் மளிகைப் பொருள்களை வழங்குவதற்கென பிரத்யேமாக ஸ்விகி ஸ்டோர்களை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலேயே மளிகை பொருட்கள் தற்போது விநியோகிக்கப்படுமா என முழுத் தகவல் தெரியவில்லை.

Paytm உடன் இணைந்து சேவை
ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ, Paytm உடன் இணைந்து தனது பயன்பாட்டின் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. சொமேட்டோ குருகிராமில் முழுமையாக ஆர்டர்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் இருப்பினும் நாட்டின் 80 நகரங்களில் மளிகை பொருட்கள் விநியோக சேவைகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மக்கள் வெளியே சென்று வாங்க முடியாத நிலை
காய்கறிகள், மருந்துகள் முதலியவற்றை மக்கள் வாங்குவதற்கு கடைகள் திறந்திருக்கும் என்று அரசு அறிவித்தப்பின்னும் மக்கள் வெளியே சென்று வாங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மூலம் சென்னையிலும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் காய்கறிகளை இந்த டெலிவரி நிறுவனங்கள் மூலம் வாங்கும் வகைியல் ஏற்பட்டு செய்யப்பட்டு வருவதாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமச் செயலாளர் கார்த்திகேயன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
source: livemint.com


Click it and Unblock the Notifications