Home
News

அடிச்சான் பாரு.. டெலிவரி பாய்ஸ் பயன்படுத்தும் ஹெல்மெட்டில் ப்ளூடூத்தை வைத்த Zomato CEO.. ஏன் தெரியுமா?

ஃபுட் டெலிவரி நிறுவனமான சோமேட்டோ (Zomato) தனது டெலிவரி பார்ட்னர்களுக்கு (அதாவது உணவை விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு) ப்ளூடூத் ஆதரவு உடனான ஹெல்மெட்களை (Helmets with Bluetooth) வழங்க உள்ளது. ஏன் இந்த நடவடிக்கை? இதனால் என்ன பயன்? இதோ விவரங்கள்:

இதுகுறித்த பேசிய சோமேட்டோ ஃபுட் டெலிவரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன ராகேஷ் ரஞ்சன் "கடந்த சில மாதங்களில், 10000 டெலிவரி பார்ட்னர்களுக்கு முதலுதவி (First-aid) மற்றும் சிபிஆர் (CPR) உட்பட தங்களுக்கு ஏற்படும் அவசரநிலை சூழ்நிலைகளை கையாள உதவும் பர்ஸ்ட் ரெஸ்பான்டர் ட்ரெயினிங் (First-responder training) அளிக்கப்பட்டுள்ளது.

டெலிவரி பாய்ஸ் பயன்படுத்தும் ஹெல்மெட்டில் ப்ளூடூத்தை வைத்த Zomato CEO!

இதன் தொடர்ச்சியாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட டெலிவரி பார்ட்னர்களுக்கு ப்ளூடூத் எனேபிள்டு ஹெல்மெட்களை விநியோகம் செய்ய உள்ளதாகவும் ராகேஷ் ரஞ்சன் கூறியுள்ளார். இந்த ஹெல்மெட்களின் வழியாக டெலிவரி செய்பவர்கள் தங்களுடைய ஹெல்மெட்டை அணிந்து உள்ளார்களா என்பதை ஹெல்மெட் வியர் டிடெக்ஷன் (Helmet wear detection) வழியாக சரிபார்க்க முடியும்.

கூடவே டெலிவரி பார்ட்னர்கள் அணிந்து இருக்கும் ப்ளூடூத் ஹெல்மெட்டின் சின்-ஸ்ட்ராப் ஆனது 'லாக்' செய்யப்பட்டு உள்ளதா என்பதை கண்காணிக்கும் சின்-ஸ்ட்ராப் லாக் ஸ்டேட்டஸ் மானிட்டரிங்கையும் (Chin-strap lock status monitoring) செய்ய முடியும். இந்த அதிநவீன செயல்பாடுகள் எல்லாமே ஏஐ-எனேபிள்டு ஹைபிரிட் சிஸ்டமை (AI-powered hybrid system) பயன்படுத்தி கண்காணிக்கப்படும்.

டெலிவரி பாய்ஸ் பயன்படுத்தும் ஹெல்மெட்டில் ப்ளூடூத்தை வைத்த Zomato CEO!

இந்த ப்ளூடூத் ஹெல்மெட்டை இயக்க, டெலிவரி பார்ட்னர்கள் அதை ஆன் செய்து, அப்ளிகேஷனுடன் கனெக்ட் செய்து, பின்னர் அதை பாதுகாப்பாக அணிய வேண்டும். இந்த ப்ளூடூத் ஹெல்மெட்டிற்குள் பொதிந்துள்ள அட்வான்ஸ்டு சென்சார் தொழில்நுட்பமானது மனித தலையின் இருப்பை கண்டறிந்து, எல்லாமே பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.

இந்த புதுமையான சிஸ்டம், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்வதோடு சேர்த்து டெலிவரி ஊழியர்களின் செயல்பாட்டு திறனையும் மேம்படுத்தும் என்று சோமேட்டோ நிறுவனம் நம்புகிறது. "ப்ளூடூத் ஹெல்மெட் மூலம் எங்களுடைய டெலிவரி பார்ட்னர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை இன்னும் வலுப்படுத்தி உள்ளோம். டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் அவர்கள் சேவை செய்யும் சமூகங்கள் ஆகிய இருவரின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான புதுமையான வழிகளை தொடர்ந்து ஆராய்வோம்" என்றும் ராகேஷ் ரஞ்சன் கூறியுள்ளார்.

டெலிவரி பாய்ஸ் பயன்படுத்தும் ஹெல்மெட்டில் ப்ளூடூத்தை வைத்த Zomato CEO!

மேலும், 2023 நிதியாண்டில், டெலிவரி பார்ட்னர்களுக்கு 250,000 க்கும் மேற்பட்ட அணியக்கூடிய சொத்துக்களை (Wearable assets) வழங்கியதாகவும் சோமேட்டோ நிறுவனம் கூறியுள்ளது. இதில், இரவு நேர நடவடிக்கைகளின் போது விசிபிலிட்டியை (Visibility) அதிகரிக்க உதவும் ரெஃப்லெக்டர்ஸ் ஸ்டராப்ஸ் பொருத்தப்பட்ட ஜாக்கெட்டுகளும் (Jackets fitted with reflector strips) அடங்கும்.

இதுதவிர்த்து (பிரசவ செலவுகள் உட்பட கர்ப்பம் தொடர்பான செலவுகளை உள்ளடக்கிய) பெண் டெலிவரி பார்ட்னர்களுக்காக வடிவமைக்கப்பட்ட விரிவான மகப்பேறு காப்பீட்டு திட்டத்தையும் (Maternity insurance scheme) சோமேட்டோ அறிமுகப்படுத்தியது. எல்லாவற்றை விட முக்கியமாக சோமேட்டோ நிறுவனமானது 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை தனது பணியாளர்களாக சேர்த்துக் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Zomato to give Bluetooth Helmets to delivery partners monitoring wear detection chin strap lock
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X