Home
News

இந்தியா: சோமேட்டோ ட்ரோன் டெலிவரி அனுமதி: அசத்தல் ஐடியா.!

டெக் ஈகிள் நிறுவனம் சோமோட்டோ -வுக்காக ஐந்து கிலோ அளவு வரையிலான உள்ள உணவுப் பொட்டலங்களை சுமந்து செல்லும் வகையிலான ட்ரோன் உருவாக்கித் தர ஒப்புக்கொண்டது.

சோமேட்டோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், அதன்படி இந்நிறுவனம் புதிய முயற்சியை செயல்படுத்த தற்சமயம் சட்டப்பூர்வமாக அனுமதி வாங்கியுள்ளது. குறிப்பாக இந்த
நடைமுறை வந்தால் அருமையாக தான் இருக்கும்.

சோமேட்டோ நிறுவனம்

சோமேட்டோ நிறுவனம்

தற்சமயம் சோமேட்டோ நிறுவனம் இந்தியாவில் ட்ரோன் பயன்படுத்த சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது, அதன்படி ஆன்லைன் ஆப் மூலம் செய்யப்படும் உணவுகளை ட்ரோன் மூலம் டெலிவரி செய்ய சோமேட்டோ முயற்சி எடுத்து
வருகிறது.

இன்டெர்நெட்  சிக்னல்

இன்டெர்நெட் சிக்னல்

குறிப்பாக இந்த ட்ரோன் பயன்பாட்டுக்கு லக்னோவைச் சேர்ந்த ஒரு தனியார் டெக் நிறுவனத்திடம் சோமேட்டோ நிறுவனம்
ஒப்பந்தம் செய்துள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இன்டெர்நெட் சிக்னல் போல ட்ரோன் சிக்னல்களுக்காக மல்டி ரவுட்டர் பயன்படுத்தி உணவுப் பார்சல்களை டெலிவரி செய்ய முடியும் என அந்த டெக் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

சிஇஒ தீப்பிந்தர் கோயல்

சிஇஒ தீப்பிந்தர் கோயல்

மேலும் ஆர்டர் செய்யப்படும் உணவுகள் இனி ட்ரோன் மூலம் டெலிவரி செய்வதற்கான முயற்சியில் இதை செயல்படுத்த உள்ளதாக சோமேட்டோ நிறுவனத்தின் சிஇஒ தீப்பிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

டெக் ஈகிள்

இந்த ட்ரோன் வசதிகளை செய்து தர ஒப்பந்தம் ஆகியுள்ள நிறுவனம் பெயர் என்னவென்றால் டெக் ஈகிள் என்று தெரவிக்கப்பட்டுள்ளது, லக்னோவை சேர்ந்த இந்நிறுவனம் ஐஐடி கான்பூரில் படித்த விக்ரம் சிங் மீனா என்பவரால் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.

சோதனை அடிப்படையில்

சோதனை அடிப்படையில்

டெக் ஈகிள் நிறுவனம் சோமோட்டோ -வுக்காக ஐந்து கிலோ அளவு வரையிலான உள்ள உணவுப் பொட்டலங்களை சுமந்து செல்லும் வகையிலான ட்ரோன் உருவாக்கித் தர ஒப்புக்கொண்டது. தற்சமயம் சோதனை அடிப்படையில் இது செயல்படுத்தப்படும் என்றும் விரைவில் நடைமுறைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிலிகாப்பர்

ஹிலிகாப்பர்

அப்படி இந்த சோமேட்டோ ட்ரோன் வசதி வந்தால் வெறும் 5 கிலோமீட்டர் தூரத்தை வெறும் நிமிடங்களில் கடந்துவிடும். எதிரே பறவைகள் வந்தால் இதில் உள்ள சென்சார் கணித்து ஒதுங்கி வழிவிடும். ஹிலிகாப்பர் போல மேல் ஏறி, அதேபோல லேண்ட் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Zomato Tests Drone Delivery In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X