Just In
- 14 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 16 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 16 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 17 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Zomato புது அம்சம்: டெல்லி டூ குமரி, விமானத்தில் உணவு டெலிவரி.. மொத்த இந்திய உணவும் உங்க கையில்!
Zomato நிறுவனம் இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் என்ற அம்சத்தை தீவிரமாக சோதனை செய்து வருகிறது. இந்த அம்சமானது தெற்கு டெல்லியின் குருகிராமில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பிற நகரங்களுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் அம்சம் என்று விரிவாக பார்க்கலாம்.

இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் அம்சம்
Zomato நிறுவனம் புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது. இந்த அம்சத்தின் பெயர் இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் ஆகும்.
சொமாட்டோவின் புதிய அம்சமானது நாடு முழுவதும் உள்ள உணவை இருந்த இடத்தில் இருந்தே ஆர்டர் செய்தால் 24 மணிநேரத்துக்குள் விமானம் மூலமாக டெலிவரி செய்ய வழிவகுக்கிறது. இதற்கான மாதிரி நடவடிக்கையில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

24 மணிநேரத்துக்குள் உணவு டெலிவரி
24 மணிநேரத்துக்குள் உணவு டெலிவரி என்றால் கெட்டுப்போகாதா? எந்த உணவகம் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாமா? நாடு முழுவதும் இந்த சேவை கிடைக்குமா? போன்ற பல்வேறு கேள்விகள் உங்களுக்கு வரலாம். அதற்கான பதிலை சொமாடேடோவின் தலைமை நிர்வாக அதிகாரியே தெரிவித்துள்ளார்.

மொபைல் குளிர்பதன தொழில்நுட்பம்
தற்போது சொமாட்டோவில் சில கிலோமீட்டர்களுக்குள் இருக்கும் உணவங்களில் மட்டுமே உணவை ஆர்டர் செய்ய முடியும்.
தற்போது அறிமுகம் செய்யும் புது அம்சத்தின் மூலம் சென்னையில் இருந்தபடி டெல்லியில் உள்ள புகழ்பெற்ற உணவுகளை கூட ஆர்டர் செய்யலாம்.
அப்படி ஆர்டர் செய்யப்படும் உணவுகள் உறையவிடாமல் பாதுகாக்க, மொபைல் குளிர்பதன தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக Zomato தெரிவித்துள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் விளக்கம்
Zomato நிறுவனம், வரவிருக்கும் இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸை சோதிக்கத் தொடங்கி இருக்கிறது.
இந்த அம்சம் நாடு முழுவதும் உள்ள பிற பகுதிகளில் இருந்தும் உணவுகளை ஆர்டர் செய்ய பயனர்களை அனுமதிக்கும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் தெரிவித்தார்.
குருகிராம் மற்றும் தெற்கு டெல்லியின் சில பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை கிடைக்கிறது.
அடுத்தடுத்த வாரங்களில் நாட்டின் பிற நகரங்களுக்கும் இந்த சேவை சென்றடையும் சொமாட்டோ தெரிவித்துள்ளது.

விமானம் மூலம் உணவு டெலிவரி
நிறுவனம் தற்போது வரை வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருந்து மட்டுமே ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது.
சொமாட்டோ நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் இருந்து பிரபலமான உணவுகளை வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
"இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்" மூலம் நீங்கள் எங்கிருந்தாலும் இந்தியாவின் ஃபேவரைட் ஃபுட்களை இருந்த இடத்திலேயே ஆர்டர் செய்யலாம். இந்த உணவு விமானம் மூலம் எடுத்து வந்து டெலிவரி செய்யப்படும்.

இருந்த இடத்திலேயே இந்திய உணவுகள்
கொல்கத்தாவின் ரசகுல்லாக்கள், ஐதராபாத் பிரியாணி, பெங்களூர் மைசூர் பாக், லக்னோ கபாப், டெல்லி பட்டர் சிக்கன், ஜெயப்பூர் பியாஸ் கச்சோரி போன்ற பழம்பெரும் உணவுகளை ஆர்டர் செய்து இருந்த இடத்திலேயே ருசிக்கலாம் என சொமாட்டோ தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டார்.

Zomato செயலி மூலம் iconic dishes
இந்த அம்சத்திற்கு என நிறுவனம் அதன் ரெஸ்டாரண்ட் பார்ட்னர்கள் மற்றும் டெலிவரி பார்ட்னர்களின் நெட்வொர்க்கை பயன்படுத்துகிறது.
நீங்கள் எந்த இடத்தில் இருந்தும் எந்த மாநில உணவை ஆர்டர் செய்தாலும் அடுத்த 24 மணிநேரத்துக்குள் டெலிவரி செய்யப்படும் என கோயஸ் விளக்கினார்.
இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், Zomato செயலி மூலம் "iconic dishes" ஆர்டர் செய்து சுவைக்கலாம்.
சேதமடையாத வகையிலும் கெட்டுப் போகாத வகையிலும் மொபைல் குளிர்சாதன தொழில்நுட்பத்தின் மூலம் உணவுகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துவரப்பட இருக்கிறது.

விரைவில் அனைத்து நகரங்களிலும் அறிமுகம்
இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் தற்போது குருகிராம் மற்றும் தெற்கு டெல்லியின் சில பகுதிகளில் சோதனை கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் அடுத்தடுத்த நகரங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470