Home
News

தேல் பத்ரி சிங்.. ரூ.2,000 நோட்டுக்களை மாத்தனுமா? Zomato இருக்கு!

ரூ.2000 நோட்டுக்களை மாற்ற சோமேட்டோவில் (Zomato) ஆர்டர் போடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரேவொரு மீம் போட்ட காரணத்தால், இப்போது சோமேட்டோ நிறுவனம் கிட்டத்தட்ட மணி எக்சேஞ்ச் நிறுவனம்போல மாறியிருக்கிறது. இதுகுறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைன் ஃபுட் டெலிவரி (Online Food Delivery) நிறுவனமான சோமேட்டோ, வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்டது என்றே சொல்ல வேண்டும். ரூ.2000 நோட்டுக்கள் குறித்து சோமேட்டோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட ஒரு ட்வீட் மக்களிடையே மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

தேல் பத்ரி சிங்.. ரூ.2,000 நோட்டுக்களை மாத்தனுமா? Zomato இருக்கு!

மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்து, ரூ.2,000 நோட்டுக்களை (Rs 2000 notes) புழக்கத்தில் விட்டது. அதன்பின் 2018ஆம் ஆண்டில் ரூ.2,000 நோட்டுக்கள் அச்சடிப்பை நிறுத்தியது. இந்த சூழலில் கடந்த மே 19ஆம் தேதி ரூ.2,000 நோட்டுக்களை திரும்பப்பெறப் போவதாக அறிவித்தது.

அதோடு ரூ.2000 நோட்டுகளை மாற்ற 4 மாதங்கள் அவகாசம் கொடுத்துள்ளது. வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்துவிட்டு தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. பெரும்பாலான மக்களிடம் ரூ.2,000 நோட்டுக்கள் இல்லையென்றாலும், அதை வைத்திருப்போர் விரைவில் மாற்ற வேண்டும் என்று அவரசரப்பட்டுவரும் நிலையில், சோமேட்டோ நிறுவனம் ஒரு ட்வீட்டை போட்டது.

அதாவது, மே 19ஆம் தேதி, ரூ. 2,000 நோட்டுக்களை மாற்ற எங்களது நிறுவனத்தில் கேஷ் ஆன் டெலிவரியை (Cash On Delivery) பயன்படுத்தி ஆர்டர் செய்யுங்கள் என்று ட்வீட் செய்திருந்தது. இதைப்பார்த்த மக்கள் "இது நல்ல யோசனையா இருக்கே" என்று வழக்கமாக போடும் ஆர்டர்கள் அனைத்துக்கும் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தாமல், கேஷ் ஆன் டெலிவரியை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் சோமேட்டோ நிறுவனத்துக்கு நாடு முழுவதும் ஆர்டர்கள் குவிந்தன. ஆனால், இரண்டு நாட்களுக்கு பின்பே சோமேட்டோ நிறுவனம், தான் செய்தது தவறு என்பதை புரிந்துகொண்டது. அதாவது, ஏராளமான மக்கள் ரூ.200 முதல் ரூ.300 வரையில் போடும் ஆர்டர்களுக்கு ரூ.2,000 நோட்டுக்களை மட்டுமே கொடுக்கின்றனர். இதனால், ஃபுட் டெலிவரி ஏஜெண்ட்டுகள் சில்லறை கொடுக்க நோட்டுக்கள் இல்லாமல், தவிக்கின்றனர்.

அப்படி, மே 19ஆம் தேதி முதல் நேற்று வரையில் மட்டும் சோமேட்டோ நிறுவனத்துக்கு 72 சதவீத கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்களுக்கு ரூ.2,000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இது இன்றும் நிற்கவில்லை, இப்போதும் சோமேட்டோ நிறுவனத்துக்கு ரூ.2,000 நோட்டுக்கள் வருகின்றன. இதனால், சில்லறையில்லாமல் சோமேட்டோ நிறுவனம் தவித்துவருகிறது. யாராவது ரூ.2,000 நோட்டுக்களை மாற்ற வேண்டும் என்றால் "தேல் பத்ரி சிங்" சோமேட்டோ நிறுவனம் இருக்கிறது என்று பலர் மீம்ஸ் போடவே தொடங்கிவிட்டனர்.

அதை வெளியில் சொல்ல முடியாமல், சோமேட்டோ நிறுவனம், நாசுக்காக ஃபுட் டெலிவரி ஏஜெண்ட்டுகள் மூலம் ரூ.2,000 நோட்டுக்களை வாங்க மறுப்பு தெரிவித்துவருவதாக கூறப்படுகிறது. இதனால் அவதிப்படுவது என்னமோ ஃபுட் டெலிவரி ஏஜெண்ட்டுகள் மட்டுமே. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Zomato says most of cash on delivery orders paid with Rs 2,000 notes since the RBI announcement
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X