சொமேட்டோ ஆன் டைம் அல்லது ஃப்ரீ டெலிவரி! இலவசமாக உணவு வேண்டுமா இதை கிளிக் செய்யுங்கள்!

|

டோமினோஸ் செய்த காரியத்தின் விளைவா இது? ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ நிறுவனம், சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக 'ஆன் டைம் அல்லது ஃப்ரீ' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. என்னப்பா இது புதுசா இருக்கு?

 புதிய ஆன் டைம் அல்லது ஃப்ரீ டெலிவரி சேவை

புதிய ஆன் டைம் அல்லது ஃப்ரீ டெலிவரி சேவை

பல ஆண்டுகளாக டோமினோஸ் நிறுவனம் தனது பயனர்களுக்கு 30 நிமிடங்களில் ஆர்டர் செய்த பீஸ்ஸா டெலிவரி செய்யப்படவில்லை என்றால் பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளலாம் என்ற அம்சத்தை நடைமுறையில் வைத்துள்ளது. அதேபோல் தற்பொழுது சொமேட்டோ நிறுவனமும் தற்பொழுது இந்த புதிய ஆன் டைம் அல்லது ஃப்ரீ டெலிவரி சேவையை அறிமுகம் செய்துள்ளது.

செலுத்திய பணம் வாபஸ்

செலுத்திய பணம் வாபஸ்

சொமேட்டோ அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சேவையின் படி, நீங்கள் ஆர்டர் செய்த உணவு, சரியான நேரத்தில் உங்களுக்கு டெலிவரி செய்யப்படவில்லை என்றால், உணவிற்காக நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்குத் திரும்பித்தரப்படும் என்று சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனி அதற்கு 3 நாள்தான்: வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்திய டிராய்இனி அதற்கு 3 நாள்தான்: வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்திய டிராய்

ஆர்டர் டெலிவரி நேரம் எவ்வளவு

ஆர்டர் டெலிவரி நேரம் எவ்வளவு

டொமினோஸ் நிறுவனம் 30 நிமிடங்களில் தனது ஆர்டரை செய்யவில்லை என்றால் பணத்தைத் திருப்பிக்கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் சொமேட்டோ நிறுவனம் இந்த அம்சத்திற்கான கால அவகாசம் என்ன என்பதைக் குறிப்பிடாமல் பொதுவாக ஆர்டர் டெலிவரி நேரம் என்று மட்டும் தற்பொழுது கூறியுள்ளது.

இலவசமாக உணவு வேண்டுமா?

இலவசமாக உணவு வேண்டுமா?

சொமேட்டோ நிறுவனம் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது வாடிக்கையாளர்களிடம், உங்கள் இலவசமாக உணவு வேண்டுமென்றால் என்ன என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்டது. வாடிக்கையாளர்கள் பலரும் பல வேடிக்கையான பதில்களைப் பதிவு செய்து வந்தனர். மிகவும் வேடிக்கையான பதில்களை இந்த ட்வீட்டில் பார்க்கலாம்.

இணையத்தில் பெண்கள் அதிகம் தேடுபவை எவை தெரியுமா? புதிய சர்வே வெளியீடுஇணையத்தில் பெண்கள் அதிகம் தேடுபவை எவை தெரியுமா? புதிய சர்வே வெளியீடு

'ஆன் டைம் அல்லது ஃப்ரீ' டெலிவரி' ட்வீட்

இறுதியில் சொமேட்டோ நிறுவனம் பதிவு செய்திருந்த ட்வீட்டிற்கு பதிலளித்த பயனர்களை நோக்கி, நீங்கள் இது எதையும் செய்ய வேண்டாம், உங்கள் உணவு ஆர்டர் தாமதமாக டெலிவரி செய்தால் மட்டும் போதும் என்று வேண்டிக்கொண்டால் என்று ட்வீட் செய்து 'ஆன் டைம் அல்லது ஃப்ரீ' டெலிவரி சேவையை அறிமுகம் செய்துள்ளது.

கிளிக் செய்ய மறக்காதீங்க

கிளிக் செய்ய மறக்காதீங்க

உணவு ஆர்டர் செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் ஆன் டைம் அல்லது ஃப்ரீ ஆப்ஷனை கிளிக் செய்ய மறக்க வேண்டாம். நீங்கள் கிளிக் செய்தால் மட்டும் போதுமானது, அப் இல் குறிப்பிட்டுள்ள நேரத்தில் உங்களுக்கு உணவு டெலிவரி செய்யப்படவில்லை என்றால் உங்களுடைய பணம் திரும்பத் தரப்படும்.

பாதுகாப்பான டெலிவரிக்காக இதையும் செய்யும் சொமேட்டோ

பாதுகாப்பான டெலிவரிக்காக இதையும் செய்யும் சொமேட்டோ

நீங்கள் ஆன் டைம் அல்லது ஃப்ரீ' டெலிவரி ஆப்ஷனை கிளிக் செய்து ஆர்டர் செய்துள்ளீர்கள் என்று உங்களுடைய சொமேட்டோ டெலிவரி பார்ட்னருக்கு தெரியாது என்பது கூடுதல் சிறப்பு. இதற்கான முக்கிய காரணம், குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்ய வேண்டும் என்ற அழுத்தம் இல்லாமல், டிராபிக் விதிமுறைகளை மீறாமல் பாதுகாப்பாக உணவை டெலிவரி பார்ட்னர்கள் டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் என்று சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Zomato On Time Or Free Get Free Food If The Delivery Gets Late : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X