Home
News

ஒரே நேரத்தில் வெவ்வேறு உணவகங்களில் ஆர்டர்! ஆனால், ஒரு ட்விஸ்ட் இருக்கு! இன்ப அதிர்ச்சி கொடுத்த சொமேட்டோ!

ஒரே நேரத்தில் வெவ்வேறு உணவகங்களில் ஃபுட் ஆர்டர் செய்யும் வகையில், புதிய அம்சத்தை கொண்டுவந்த சொமேட்டோ (Zomato) நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆனால், இதற்கு சில விதிமுறைகளை வைத்திருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்ய விரும்பினால், ஒரு நேரத்தில் ஒரு உணவகத்தில் மட்டுமே ஆர்டர் எடுக்க முடியும். வெவ்வேறு உணவகத்தில் ஆர்டர் செய்ய விரும்பினால் கூட, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்களை எடுத்தால் மட்டுமே அது முடியும். இதனால், டெலிவரி கட்டணம் சற்று அதிகமாகவே இருக்கும்.

ஒரே நேரத்தில் வெவ்வேறு உணவகங்களில் ஆர்டர்! ஆனால், ஒரு ட்விஸ்ட் இருக்கு

ஆகவே, ஒரே நேரத்தில் ஒரு டெலிவரி பாய் மூலம் வெவ்வேறு உணவகங்களில் ஆர்டர் எடுக்கும் வசதியை கொண்டுவர வேண்டும் என்று சோமேட்டோ, ஸ்விகி ஆகிய முன்னணி ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால், சர்வீஸ் டாக்ஸ் குறைந்துவிடுமே என்று அந்தந்த நிறுவனங்கள் அதை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தன. ஆனால், இப்போது, ஆன்லைன் ஃபுட் டெலிவரி மார்க்கெட் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டி வருகிறது. ஒரு நாளைக்கு 10 லட்சம் பேர் ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்யும் பழக்கத்துக்கு வந்துவிட்டனர்.

இதனால், அதுசார்ந்த நிறுவனங்களிடையே கடும் போட்டிகள் நிலவிவருகின்றன. ஏன், மத்திய அரசு கூட ஓஎன்டிசி (ONDC) மூலம் குறிப்பிட்ட உணவங்களை வைத்துக்கொண்டு தள்ளுபடி விலையில் ஃபுட் டெலிவரி செய்யத் தொடங்கிவிட்டது. இதனால், சோமேட்டோ, ஸ்விகி நிறுவனங்களும் வேறு வழியில்லாமல், சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்து வருகின்றன.

ஆனால், சோமேட்டோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை அள்ளித்தூக்கும் வகையில், மிகப்பெரிய வசதியை வழங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் வெவ்வேறு உணவகங்களில் ஆர்டர் செய்து கொள்ளும் வகையில், சொமேட்டோ மல்டி கார்ட் அம்சத்தை (Zomato Multi Cart Feature) கொண்டுவந்துள்ளது. இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்ற விவரங்கள் பின்வருமாறு.

நீங்கள் சோமேட்டோ ஆப் வைத்திருந்தால், அதை அப்டேட் செய்து கொள்ளுங்கள். அதன்பின் வழக்கம்போல, பிடித்தமான உணவகங்களின் பக்கங்களுக்கு சென்று, ஃபுட் ஆர்டர் செய்யுங்கள். ஆனால், ஆட் (ADD) மட்டும் செய்ய வேண்டும், பணம் செலுத்தக்கூடாது. அதன்பின், வெளியே வந்து, வேறு உணவக பக்கத்துக்கு சென்று மற்றொரு ஆர்டரையும் ஆட் செய்யுங்கள்.

இப்போது, இரண்டு வெவ்வேறு உணவகங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆர்டர்களின் மொத்த விலை பட்டியல் தோன்றும். அதன்பின் பணம் செலுத்தியோ அல்லது கேஸ் ஆன் டெலிவரி கொடுத்தோ அவற்றை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்த உணவகங்கள் ஒரே பின்கோட் கொண்ட ஏரியாவில் இருக்க வேண்டும்.

இது உங்களின் உணவின் தரம், தாமதத்தால் கெட்டுப்போகாமல் இருக்க உதவும். இந்த புதிய அம்சம் டெலிவரி செலவை சற்று குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Zomato Multi Cart Feature Allows Order Food From Multiple Restaurants At The Same Time
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X