Home
News

Zomato பெயரை Eternal என மாற்றம்.. இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும் பரமா.. Zomato ஆப்ஸ் பெயர் மாறுமா? இல்லையா?

சோமாடோ லிமிடெட் (Zomato Ltd.) என்ற நிறுவனம் அதன் பெயரை எட்டர்னல் லிமிடெட் (Eternal Ltd.) என்று மாற்றியுள்ளதாக அந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான தீபிந்தர் கோயல் (Zomato founder and CEO Deepinder Goyal) இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது நிறுவனத்தின் அடையாளத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த பெயர் மாற்றம் காரணமாக இனி உணவு ஆர்டர் (food order) செய்யும் Zomato மொபைல் ஆப்ஸ் பெயர் மாறுமா என்ற சந்தேகம் பயனர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தெரியாதவர்களுக்கு, சோமாடோ நிறுவனத்தின் ஆரம்ப கால பயணம் 2008 ஆம் ஆண்டில் ஃபுடிபே (Foodiebay) என்ற நிறுவனமாக தொடங்கி, 2010 இல் அது சோமாடோவாக (Zomato) மாறி, இப்போது எட்டர்னல் லிமிடெட் (Eternal Ltd) என மிகப்பெரிய ஜாம்பவானாக உருமாறியுள்ளது. இது சோமாடோ நிறுவனத்தின் ஒவ்வொரு கட்ட பரிணாம வளர்ச்சியை நமக்கு எடுத்து காண்பிக்கிறது. அதேபோல், இதன் வளர்ச்சி தற்போது உணவு டெலிவரியோடு நின்றுவிடவில்லை.

Zomato பெயரை Eternal என மாற்றம்.. இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும் பரமா

Zomato பெயரை Eternal என மாற்றம்.. இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும் பரமா:

உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி சேவையை தாண்டி, சோமாடோவின் சேவைகள் தற்போது பறந்து விருந்து வளர்ந்து வருகிறது என்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. எட்டர்னல் என்ற பெயருடன் சோமாடோவின் புதிய சகாப்தம் பல்வேறு பணியகங்களை ஒரே தட்டின் கீழ் உள்ளடக்கியுள்ளது என்பதை காண்பிக்கிறது. புதிய எட்டர்னல் லிமிடெட் கீழ் இனி சோமாடோவின் உணவு டெலிவரி சேவை முக்கிய தளமாக இயங்க போகிறது.

இதற்கு அடுத்தபடியாக, பிளிங்கிட் (Blinkit), டிஸ்ட்ரிக்ட் (District) மற்றும் ஹைப்பர்பியூர் (Hyperpure) ஆகியவை இனி எட்டர்னல் லிமிடெட் நிறுவனத்தின் பெயரின் கீழ் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. எட்டர்னல் என்ற பெயரை பரிந்துரைத்த போது, சோமாடோ நிறுவனத்தின் வாரியம் அதை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. என்று கோயல் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த பெயர் மாற்றத்திற்கான காரணம் குறித்து அவர் கூறியதாவது,

Zomato தளத்தை திடீரென பெயர் மாற்ற காரணம் என்ன? Zomato மொபைல் ஆப்ஸ் பெயர் மாறுமா?

"நாங்கள் பிளிங்கிட் நிறுவனத்தை வாங்கியபோது, நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் நிறுவனத்தின் பயன்பாட்டையும் வேறுபடுத்துவதற்காக இன்டர்னல் தளங்களில் சோமாடோ என்ற பெயருக்கு பதிலாக 'எட்டர்னல்' என்ற பெயரை நாங்கள் பயன்படுத்தத் தொடங்கினோம். சோமாடோவைத் தாண்டி, எதிர்காலத்தில் இந்த நிறுவனம் பெரிய அளவில் உருமாறும் போது, இந்த நிறுவனத்தின் பெயரை எட்டர்னல் என பொதுவாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது என்று கோயல் தெரிவித்திருக்கிறார்.

இன்று, பிளிங்கிட் உடன், நாங்கள் எதிர்பார்த்த இலக்கை அடைந்திருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்." இந்த சந்தோஷமான தருணத்தில், எங்கள் நிறுவனத்தின் பெயரை மட்டும் எட்டர்னல் லிமிடெட் என்று மாற்றுகிறோம். சோமாடோ மொபைல் ஆப்ஸ் மற்றும் தளங்களின் பெயரில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வலைத்தளம் மட்டும் zomato.com என்ற முகவரியில் இருந்து இனி eternal.com என்ற இணையதள முகவரிக்கு மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த திடீர் மாற்றத்தை சோமாடோவின் பங்குதாரர்களும் ஆதரிக்குமாறு தீபிந்தர் கோயல் அவர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Zomato Ltd name changed to Eternal Ltd Will the Zomato app name change or not
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X