இருக்கு., நமக்கு செம்மையான ஆஃபர் இருக்கு: Zomato அடுத்த டார்கெட்- இதை செய்தால் ஆஃபரோ., ஆஃபர் தான்!

|

Zomato நிறுவனம் தனது அடுத்த புது முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பல்வேறு ஆஃபர்களும் கிடைக்க உள்ளது.

சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற சொமேட்டோ

சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற சொமேட்டோ

சொமேட்டோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், அதன்படி இந்நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய முயற்சி ஒன்றை செயல்படுத்த தற்சமயம் சட்டப்பூர்வமாக அனுமதி வாங்கியது.

ட்ரோன் மூலம் டெலிவரி

ட்ரோன் மூலம் டெலிவரி

சொமேட்டோ நிறுவனம் இந்தியாவில் ட்ரோன் பயன்படுத்த சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது, அதன்படி ஆன்லைன் ஆப் மூலம் செய்யப்படும் உணவுகளை ட்ரோன் மூலம் டெலிவரி செய்ய சொமேட்டோ முயற்சி எடுத்து வருகிறது.

இனி தினசரி 1.5 ஜிபி இல்ல 3 ஜிபி டேட்டா., அதே விலையில்: Vodafone அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் குஷி!இனி தினசரி 1.5 ஜிபி இல்ல 3 ஜிபி டேட்டா., அதே விலையில்: Vodafone அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் குஷி!

ட்ரோன் மூலம் உணவுப் பார்சல்கள் டெலிவரி

ட்ரோன் மூலம் உணவுப் பார்சல்கள் டெலிவரி

இன்டெர்நெட் சிக்னல் குறிப்பாக இந்த ட்ரோன் பயன்பாட்டுக்கு லக்னோவைச் சேர்ந்த ஒரு தனியார் டெக் நிறுவனத்திடம் சொமேட்டோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இன்டெர்நெட் சிக்னல் போல ட்ரோன் சிக்னல்களுக்காக மல்டி ரவுட்டர் பயன்படுத்தி உணவுப் பார்சல்களை டெலிவரி செய்ய முடியும் என அந்த டெக் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

சிஇஒ தீப்பிந்தர் கோயல்

சிஇஒ தீப்பிந்தர் கோயல்

மேலும் ஆர்டர் செய்யப்படும் உணவுகள் இனி ட்ரோன் மூலம் டெலிவரி செய்வதற்கான முயற்சியில் இதை செயல்படுத்த உள்ளதாக சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஒ தீப்பிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

டெக் ஈகிள்

டெக் ஈகிள்

இந்த ட்ரோன் வசதிகளை செய்து தர ஒப்பந்தம் ஆகியுள்ள நிறுவனம் பெயர் டெக் ஈகிள், லக்னோவை சேர்ந்த இந்நிறுவனம் ஐஐடி கான்பூரில் படித்த விக்ரம் சிங் மீனா என்பவரால் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் நடைமுறை

சோதனை அடிப்படையில் நடைமுறை

டெக் ஈகிள் நிறுவனம் சொமேட்டோவுக்காக ஐந்து கிலோ அளவு வரையிலான உணவுப் பொட்டலங்களை சுமந்து செல்லும் வகையிலான ட்ரோன் உருவாக்கித் தர ஒப்புக்கொண்டது. தற்சமயம் சோதனை அடிப்படையில் இது செயல்படுத்தப்படும் என்றும் விரைவில் நடைமுறைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவித்தது.

இப்படி செய்தால் சேவையை நிறுத்துவோம்: பாகிஸ்தானுக்கு Google, facebook, twitter எச்சரிக்கைஇப்படி செய்தால் சேவையை நிறுத்துவோம்: பாகிஸ்தானுக்கு Google, facebook, twitter எச்சரிக்கை

கிரெடிட் கார்ட் துறையில் சொமேட்டோ

கிரெடிட் கார்ட் துறையில் சொமேட்டோ

இந்த நிலையில் சொமேட்டோ நிறுவனம் அடுத்ததாக கிரெடிட் கார்டு துறையில் கால் பதிக்கவிருக்கிறது. சொமேட்டோ நிறுவனம் ஆர்பிஎல் வங்கியுடன் இணைந்து கிரெடிட் கார்டு வழங்கும் முறையைத் தொடங்கவிருக்கிறது.

விமான நிலையங்கள் காத்திருப்பு முறை இலவசம்

விமான நிலையங்கள் காத்திருப்பு முறை இலவசம்

ஆர்பிஎல் வங்கியின் இந்த கிரெடிட் கார்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து உள்நாட்டு விமான நிலையங்களிலும், காத்திருப்பு முறை இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எடிஷன் கார்டு என்ற பெயரில் அறிமுகம்

எடிஷன் கார்டு என்ற பெயரில் அறிமுகம்

இந்த கார்டுக்கு எடிஷன் கார்டு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கார்டு சொமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கவும் திட்டமிட்டு இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

10% கேஷ்பேக் ஆஃபர்

10% கேஷ்பேக் ஆஃபர்

இந்த கார்டு வாங்குவதில் கூடுதல் நன்மைகளும் உள்ளது. சொமேட்டோ ஆப் வழியாக ஒவ்வொரு முறை உணவு ஆர்டர் செய்யும் போது 10% கேஷ்பேக் ஆஃபர் கிடைக்கும். அதுமட்டுமின்றி ஆன்லைன் வழி பணப்பரிமாற்றம் செய்தால் 2 சதவீத எடிஷன் கேஷ் கிடைக்கும்.

முடிஞ்சது கதை: 1 ஜிபி இனி 35 ரூபாய்., Vodafone 7 மடங்கு கட்டண உயர்வு?- அப்போ Airtel, Jio நிலை?முடிஞ்சது கதை: 1 ஜிபி இனி 35 ரூபாய்., Vodafone 7 மடங்கு கட்டண உயர்வு?- அப்போ Airtel, Jio நிலை?

200 புள்ளிகள் இருந்தால் 200 ரூபாய்

200 புள்ளிகள் இருந்தால் 200 ரூபாய்

அது எடிசன் கேஷ் என்று குழப்பிக் கொள்ள வேண்டாம். எடிசன் கேஷ் என்பது புள்ளிகள் அடிப்படையிலானது ஆகும். 200 எடிசன் புள்ளிகள் பெற்றிருந்தால், அந்த புள்ளிகளை 200 ரூபாயாக செலவழித்துக் கொள்ளலாம். ஆர்பிஎல் வங்கியின் கீழ் 25 லட்சம் கிரெடிட் கார்டு பயனாளர்கள் இந்தியா முழுவதும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Zomato launches co branded credit card

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X