டெலிவரிக்கு சென்ற இடத்தில் பாலியல் தொல்லை.. டெலிவரி பாய் கைது! Zomatoவின் பதில் இதோ!

|

புனே பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து Zomato அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தங்களது சான்றளிக்கப்பட்ட விநியோக முகவர் அல்ல என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில் உள்ள தகவலை விரிவாக பார்க்கலாம்.

பலருக்கும் சஞ்சலம் ஏற்படுத்தும் செயல்

பலருக்கும் சஞ்சலம் ஏற்படுத்தும் செயல்

இதுபோன்ற ஒருசிலரின் செயலால் பலருக்கும் சஞ்சலம் ஏற்படுகிறது. இப்படி நடந்துவிட்டதே இனி டெலிவரி வேலை செய்யும் ஊழியர்களை மக்கள் இந்த கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்களா என்றால் அதுதான் இல்லை.

உழைப்புக்கேற்ற ஊதியம்..

உழைப்புக்கேற்ற ஊதியம்..

இதுபோன்ற சம்பவங்களும் நடவடிக்கைகளும் "குற்றம் உள்ள நெஞ்சுகளுக்கு மட்டுமே குறுகுறுக்கும்".

பல்வேறு துறையில் சாதிக்க நினைத்து குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக டெலிவரி தொழிலில் சிக்கியவர்கள் ஏராளம்.

படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்றாலும் குடும்பத்தை காக்க வேண்டுமே என்று டெலிவரி ஊழியர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் பலர்.

நேர்மையாக உழைக்கும் எந்த ஒரு உழைப்புக்கும் சரியான ஊதியம் கிடைத்தே தீரும். சரி, புனேவில் நடந்த அந்த சம்பவத்தை பார்க்கலாம்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புகார்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புகார்

புனேவின் யெவலேவாடி பகுதியில் 19 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 42 வயதான சொமாட்டோ டெலிவரி ஊழியர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து Zomato அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உடனடி நடவடிக்கை..

சொமாட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில், டெலிவரி ஏஜென்ட்டுக்கும் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு சகிப்புத்தன்மை என்பதே கிடையாது என சொமாட்டோ தெரிவித்துள்ளது.

Zomato வெளியிட்ட அறிக்கை

Zomato வெளியிட்ட அறிக்கை

Zomato இதுகுறித்து வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், விசாரணைக்கு ஒத்துழைக்க நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம்.

எங்கள் தளத்தில் எந்தவொரு நபரை இணைக்கும்போதும் மூன்றாம் தரப்பு பின்னணி சரிபார்ப்புகளை மேற்கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

ANI தளத்தில் வெளியான ஒரு தகவலில், சொமாட்டோ நிறுவனத்தை மேற்கோள்காட்டி, குற்றம் சாட்டப்பட்ட நபர் அதன் டெலவரி பார்ட்னரே அல்ல என குறிப்பிட்டுள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 17 ஆம் தேதி நடந்த சம்பவம்..

செப்டம்பர் 17 ஆம் தேதி நடந்த சம்பவம்..

19 வயது சிறுமி அளித்த புகாரின்படி, தான் சொமாட்டோ செயலி மூலம் டெலிவரி செய்ததாகவும், டெலிவரி செய்ய வந்த 42 வயதான Zomato நிர்வாகி தன்னை துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புனேவின் யெவலேவாடி பகுதியில் செப்டம்பர் 17 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

டெலிவரி ஏஜென்ட் கைது

புகாரில் தெரிவித்துள்ளபடி, டெலிவரிக்கு வந்த 42 வயதான Raees Shailj என்பவர், உணவை டெலிவரி செய்துவிட்டு தண்ணீர் கேட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொள்ள முயன்றுள்ளார்.

இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பு படிக்கும் பாதிப்புக்குள்ளான 19 வயது மாணவி இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து அந்த டெலிவரி ஏஜென்ட் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

சரியான நடவடிக்கை தேவை..

சரியான நடவடிக்கை தேவை..

ஆன்லைன் உணவு டெலிவரி ஏஜென்ட்கள் இதுபோன்ற புகாரில் சிக்குவது இது முதன்முறையல்ல.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது உத்தியோகப்பூர்வ டெலிவரி ஏஜென்ட் இல்லை என நிறுவனம் தெரிவித்தாலும். இது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

செயலி மூலம் உணவு ஆர்டர் செய்த நபரின் விலாசம் அந்த நபருக்கு எப்படி கிடைத்தது. எப்படி சரியாக உணவை எடுத்துச் சென்றார் என பல கேள்விகள் இருக்கிறது.

தொடர்பில்லை என்று விலகிக் கொள்வதை விட சரியான நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவம் அடுத்து நடக்காமல் தடுப்பதே முறையான செயல் ஆகும் என பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Zomato issues statement about delivery agent harassment Case: 19 Year Old File Complaint

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X