Home
News

எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?

ஃபுட் டெலிவரி நிறுவனமான சோமேட்டோ (Zomato) தொடர்ந்து புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சேவையும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சோமேட்டே நிறுவனம் தனது சேவையை 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் விரிவாக்கம் செய்து வருகிறது. மேலும் இந்த சோமேட்டே ஆப் வசதியை இந்தியா முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்நிலையில் சோமேட்டே புதிய சேவை ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

சோமேட்டோ அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?

அதாவது பார்ட்டிகள் மற்றும் வீட்டில் நடக்கும் சிறு நிகழ்வுகளுக்கான பெரிய ஆர்டர்களை கையாள்வதற்காக, சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபின்தர் கோயல், இந்தியாவில் முதல் முறையாக லார்ஜ் ஆர்டர் ஃப்ளீட் (large order fleet) எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

சோமேட்டோ கொண்டுவரும் இந்த புதிய சேவைக்கு வேண்டி டெலிவரி வாகனம் அனைத்தும் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த உள்ளதாகவும், இது சுற்றுச்சூழல் ஏற்புடையதாக இருக்கும் என்று தீபின்தர் கோயல் தெரிவித்தார். இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஃப்ளீட் ஆனது 50 பேர் வரை கொண்ட விருந்துகளுக்காகப் பெரிய ஆர்டர்களை கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சோமேட்டோ அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?

மேலும் இதுகுறித்து சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபின்தர் கோயல் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்தது என்னவென்றால், நாங்கள் இந்தியாவின் முதல் பெரிய ஆர்டர் ஃப்ளீட் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக இது உங்கள் அனைத்து பெரிய குழு, பார்ட்டி, வீட்டில் நடைபெறும் சிறிய நிகழ்வு ஆர்டர்களை எளிதாகக் கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இது முழு மின்சார வாகன ஃப்ளீட் ஆகும். இது 50 பேர் வரை கொண்ட நிகழ்ச்சிக்கான ஆர்டர்களை கையாள்வதற்காகவே உருவாக்கப்பட்டது என்றும் கோயல் தெரிவித்தார். குறிப்பாக இந்த பெரிய ஆர்டர்-க்கான டெலிவரிக்கும் பயன்படுத்தும் வாகனங்களின் படங்களை கூட அவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் பெரிய ஆர்டர்கள் சாதாரண இரு சக்கர வாகன ஃப்ளீட்-ஐ பயன்படுத்தி டெலிவரி செய்யப்பட்டன. ஆனால் இதில் வாடிக்கையாளர்கள் திருப்தி அடையாத நிலையில், எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யமுடியவில்லை. எனவே தான் பெரிய ஆர்டர் ஃபளீட் இந்த குறைபாடுகளை திறம்பட சமாளிக்கும் வகையில் தனிப்பட்ட சேவை கொண்டுவரப்பட்டு உள்ளதாக சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபின்தர் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் இந்த பெரிய மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த புதிய சேவை சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் என்று கூறப்படுகிறது. சோமேட்டோ கொண்டுவந்துள்ள இந்த புதிய சேவை கணடிப்பாக பயனர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய நிகழ்வுகளுக்கு எளிதாகவும், திறமையாகவும் ஆர்டர் செய்யவும் இது உதவும்.

சோமேட்டோ அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?

அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த தீபிந்தர் கோயல், டெல்லி ஐஐடியில் பட்டம்பெற்று, அவருடன் படித்த மாணவர்களுடன் 2008ஆம் ஆண்டு ஃபுடீபே (Foodiebay) என்னும் ஃபுட் டெலிவரி நிறுவனத்தைத் தொடங்கினார்.

இந்த நிறுவனம் நஷ்டத்தில் சென்றபோதும், தீபிந்தர் கோயலின் விடாமுயற்சி மெல்ல மெல்ல லாபத்தை பெற வைத்தது. அதன்பின்பு 2010ஆம் ஆண்டில் ஃபுடீபே என்ற பெயரை சொமேட்டோ என்று மாற்றினார். சொமோட்டோ ஆப் ( Zomato App) மூலம் ஃபுட் டெலிவரி தொடங்கியது. இதற்குப் பின்பு, அவருக்கு தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. அதேபோல் இந்த ஆப் வசதியில் பல்வேறு புதிய சேவைகளும் கொண்டுவரப்பட்டன.

Photo courtesy: Zomato

More from GizBot

Best Mobiles in India

English summary
Zomato introduced large order fleet to cater to groups of 50 people: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X