வெறும் ரூ.89 விலையில் வீட்டுக்கே வரும் வீட்டு சாப்பாடு! Zomato-வின் புதிய சேவை! என்ன மேட்டர்?
அலுவலகம் சென்று வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய சிக்கல் மதிய உணவு தான். என்னதான் விதவிதமாக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டாலும், வீடு உணவைச் சாப்பிட்ட திருப்தி இருப்பதில்லை. இதை உணர்ந்த சோமோட்டோ (Zomoto) நிறுவனம் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் பிரபலமான உணவு விநியோக செயலியான Zomato, இப்போது 'Zomato Everyday' என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உங்களுக்கு ஹோட்டலில் இருந்து உணவை வழங்காமல், வாடிக்கையாளர்கள் தங்கள் உணவை ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. வீட்டு உணவைத் தயாரிக்கும் சமையல்காரர்களிடம் இருந்து நேரடியாக ஆர்டர் செய்ய இது அனுமதிக்கிறது.

Zomato Everyday சேவை என்றால் என்ன?
இந்த முறைப்படி, வீட்டு உணவை அதிகமாக விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவை Zomato டெலிவரி பாய்ஸ் மூலம் டெலிவரி செய்யுமென்று நிறுவனம் கூறியுள்ளது. Zomato எவ்ரிடே மூலம், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டில் சமைத்த உணவை அணுக இப்போது அனுமதிக்கிறது. உங்கள் ஆர்டர் பிளேஸ் செய்த பிறகு தான் உணவு புதிதாகத் தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியாக தயாரிக்கப்படும் வீட்டு உணவிற்கான விலை என்ன?
Zomato இன் புதிய சேவை பற்றி நாம் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும் இங்கே. Zomato எவ்ரிடே என்பது, நிறுவனம் வழங்கும் புதிய சேவையாகும். இது வாடிக்கையாளர்களுக்குப் புதிதாக வீட்டில் சமைக்கப்பட்ட சுத்தமான உணவை, மலிவு விலையில் ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. இனி மக்கள் வீடு உணவை வெறும் ரூ.89 முதல் ஆர்டர் செய்யத் தொடங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. உங்கள் ஆர்டரைப் பொறுத்து கட்டணம் மாறும்.
எவ்வளவு நேரத்தில் வீட்டு உணவு டெலிவெரி செய்யப்படும்?
வீடு உணவை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. மிகச்சிறந்த பொருட்களைப் பயன்படுத்தி இந்த உணவுகள் தயாரிக்கப்படும் என்று Zomato கூறுகிறது, இதனால் உணவு சுவையுடன் மிக உயர்ந்த தரத்தில் உங்களுக்கு டெலிவெரி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த சேவை முதல் கட்டமாகக் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாம்.
விரைவில், இது இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டு உணவிற்கான தனி கேட்டகிரியை நிறுவனம் உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. நீங்கள் விரும்பும் வீட்டு உணவை ஆர்டர் செய்து, பணம் செலுத்தி 15 முதல் 20 நிமிடங்களில் டெலிவரியை பெறலாம் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வீட்டு உணவாக இருந்தாலும் விரைவில் டெலிவரி செய்யப்படுமாம்.

எத்தனை மணி வரை சோமோட்டோ எவ்ரிடே சேவை இயங்கும்?
சோமோட்டோ வெளியிட்டுள்ள தகவலின் படி, வீட்டில் சமைக்கப்படும் மதிய உணவு வகைகள், மதியம் 3:30 மணி வரை மட்டுமே கிடைக்கும் என்று கூறியுள்ளது. அதற்கு மேல் ஆர்டர்கள் எடுக்கப்படாது, சோமோட்டோ எவ்ரிடே சேவை மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நேரத்தைப் பொறுத்து மெனுவில் குறிப்பிட்ட உணவு வகைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, குர்கானின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே Zomato எவ்ரிடே சேவை கிடைக்கிறது.
Zomato Gold சேவை என்றால் என்ன? இது எப்படி சிறப்பானது?
Zomato விரைவில் இந்த சேவையை மற்ற இடங்களிலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
Zomato இன் புதிய சேவை உண்மையில் புதியதல்ல, இது நீண்ட காலமாக நமது ஊரில் இருக்கிறது. ஆனால், ஒரு பிரபலமான நிறுவனம் இந்த சேவையை அறிமுகப்படுத்துவதால், இது நிறைய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. சோமோட்டோ நிறுவனம், சமீபத்தில் Zomato Gold என்ற புதிய சந்தா சேவையையும் அறிமுகப்படுத்தியது.
இது மாதத்திற்கு ரூ.149 என்ற அறிமுக விலையில், சிறந்த உணவு விநியோக சேவையை வழங்குகிறது. சோமோட்டோ கோல்ட் மெம்பர்ஷிப்பின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று டெலிவரி செய்யும் இடத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள எந்த உணவகத்திற்கும் நிறுவனம் இலவச டெலிவரியை வழங்குகிறது. இருப்பினும், உங்களுடைய குறைந்தபட்ச ஆர்டர் தொகை ரூ.199 ஆக இருக்க வேண்டும். வீடு உணவை எதிர்பார்ப்பவர்களுக்கு இது சூப்பர் அம்சம் தான்.


Click it and Unblock the Notifications








