இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.. சொமேட்டோ நிறுவனர் நெற்றியில் சிறிய சாதனம்.. எதற்கு தெரியுமா?
இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சொமேட்டோவின் (Zomato) நிறுவனர் தீபிந்தர் கோயல் (Deepinder Goyal) பயன்படுத்தும் டிவைஸ் (device) தற்போது இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது சில மாதங்களுக்கு முன்பு தீபிந்தர் கோயல் 'Gravity Aging Hypothesis' என்ற புதிய கருத்தொன்றை முன்வைத்திருந்தார். அதன்படி மனித வாழ்நாளில் ஈர்ப்பு விசை (gravity) காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் படிப்படியாகக் குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும், இதுவே முதுமை ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தான் சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தீபிந்தர் கோயல், தனது வலது நெற்றிப் பகுதியில் சிறியதாக தங்க நிறத்தில் டிவைஸ் ஒன்றை பொருத்தியிருந்த படங்களும், வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாகி பேசுபொருளாகி இருக்கின்றன.
இந்த டிவைஸ் பெயர் டெம்பிள் (Temple) என்று கூறப்படுகிறது. இது மூளையில் ரத்த ஓட்டத்தை துல்லியமாக அளிவிட உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதை கடந்த ஒரு வருடமாகப் பயன்படுத்தி வருகிறேன் என்று கூறினார் தீபந்தர் கோயல். மேலும் இந்த சாதனத்தை விரைவில் பொதுமக்களுக்கும் அறிமுகம் செய்ய இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது தீபந்தர் கோயல் பயன்படுத்தும் இந்த டிவைஸ்க்கு மருத்துவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது டெல்லி டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரும் ரேடியாலஜிஸ்டுமான டாக்டர் சுவரங்கர் தத்தா Temple என்று அழைக்கப்படும் இந்த டிவைஸைப் பயன்படுத்தலாம் என்பதற்கு எந்த அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் இது பணத்தை வீணடிக்கும் நினைக்கும் கோடீஸ்வரர்களுக்கான fancy toy தான் என்றும், முதுமைக்கும் ஈர்ப்பு விசைக்கும் ஒரு காரணம் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் மருத்துவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதேபோல் இந்தியா முழுவதும் உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி பார்ட்னர்களாக கிடைக்கும் வேலை பலரது குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறது. அதுவும் ஸ்விக்கி, சோமேட்டோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களில் எல்லாம் கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிநீக்கம் காரணமாக வேலை இழந்த நபர்கள், பெண்கள் என பலரும் டெலிவரி பார்ட்னர்களாக வேலை செய்வதையும் நாம் பார்க்க முடிகிறது.

குறிப்பாக சோமேட்டோ ஆனது இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி செயலியாக உள்ளது. இது 1.5 மில்லியனுக்கும் அதிகமான உணவகங்களை இணைக்கிறது. தீபிந்தர் கோயல் தலைமையிலான இந்நிறுவனம், குரூப் ஆர்டர்கள், வெஜ் மோட் போன்ற புதிய அம்சங்களுடன் உணவக மதிப்பாய்வுகள் மற்றும் விரைவான டெலிவரி சேவைகளை வழங்குகிறது. இது உணவகங்களைக் கண்டறியவும் வீட்டு வாசலில் உணவைப் பெறவும் உதவுகிறது.
சோமேட்டோ, ஸ்விக்கியுடன் (Swiggy) இணைந்து உணவு டெலிவரி சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. பசி நேரத்தில் தங்களுக்கு விருப்பமான உணவை எளிதாக ஆர்டர் செய்ய இந்த செயலிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சோமேட்டோ இந்த ஆண்டு பல புதிய சேவைகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
photo credits: @deepigoyal , Instragram


Click it and Unblock the Notifications








