#RejectZomato ஹேஷ்டேக் ட்ரெண்ட்: உடனடியாக ஊழியர் நீக்கம்: காரணம் இதுதான்.!

|

பிடித்த உணவுகளை வாங்கி சாப்பிட சொமாட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற செயலிகளை மக்கள் அதிக பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.மேலும் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளோடு உணவுகளை டெலிவரி செய்து வருகின்றன. இந்நிலையில் உணவு டெலிவரி தொடர்பாக புகார் தெரிவித்த ஒருவரிடம் இந்தியில் பேசுமாறு சொமேட்டோ கால்சென்டர் ஊழியர் வற்புறுத்தியதற்கு அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை சற்ற விரிவாகப் பார்ப்போம்.

விகாஷ் என்பவர் சொமாட்டோவில்

அதாவது விகாஷ் என்பவர் சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலவரி
செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே விகாஷ் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து பணத்தை திருப்பிதருமாறு கேட்டுள்ளார்.

சும்மா இல்ல 42% தள்ளுபடியில் ஸ்மார்ட்டிவிகள்: வீட்டையே தியேட்டராக மாற்றலாம்- அமேசான் அதிரடி சலுகை!சும்மா இல்ல 42% தள்ளுபடியில் ஸ்மார்ட்டிவிகள்: வீட்டையே தியேட்டராக மாற்றலாம்- அமேசான் அதிரடி சலுகை!

எதிர்ப்புகள் எழுந்தன

ஆனால் அந்த வாடிக்கையாளர் சேவை முகவரோ இந்தி நமது தேசிய மொழி. நம் தேசிய மொழியை கொஞ்சமாவது கற்றுக்கொள்வது நல்லது என்று கூறியுள்ளார். எனவே இந்த விஷயத்தை ட்விட்டரில் பகிர்ந்தார் விகாஷ். மேலும் சமூக வலைத்தளங்களில் தமிழ் தெரிந்த ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றும், இந்தி நம் நாட்டின் தேசிய மொழி இல்லை என்றும் எதிர்ப்புகள் எழுந்தன.

புது கலர்., வேற லெவல் லுக்: ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் புது மாறுபாடு அக்டோபர் 20- விலை, அம்சங்கள்!புது கலர்., வேற லெவல் லுக்: ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் புது மாறுபாடு அக்டோபர் 20- விலை, அம்சங்கள்!

மாட்டோ நிறுவனம்

அதன்பின்பு சொமாட்டோ நிறுவனத்தை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி Reject_Zomato என்ற ஹேஷ்டாக்ட்விட்டரில் அதிளவில் ட்ரெண்ட் ஆனது. அதன்பிறகு ஒருவழியாக இந்த விவகாரம் குறித்து சொமாட்டோ நிறுவனம் விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டுள்ளது.

Vi நிறுவனத்திற்கு கிடைக்கும் 20,000 கோடி ரூபாய்.. அரசு கொடுக்கும் பணம் மட்டுமே எவ்வளவு தெரியுமா?Vi நிறுவனத்திற்கு கிடைக்கும் 20,000 கோடி ரூபாய்.. அரசு கொடுக்கும் பணம் மட்டுமே எவ்வளவு தெரியுமா?

சொமாட்டோ வெளியிட்ட அறிக்கையில்

அதாவது சொமாட்டோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், வணக்கம் தமிழ்நாடு எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம்.

வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கு 'இந்த' டேட்டா வவுச்சர்கள் தான் பெஸ்ட்.. இனி FUP வரம்பு பற்றி கவலை இல்லைவீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கு 'இந்த' டேட்டா வவுச்சர்கள் தான் பெஸ்ட்.. இனி FUP வரம்பு பற்றி கவலை இல்லை

மக்களின் உணர்வுகளுக்கு எதிராக

அதேபோல் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தை பகிரக்கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்க தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம். பின்பு ஒரு நிறுவனமாக நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். அதேபோல் ஏற்கனவே தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளுர்மயமாக்கியுள்ளோம். அதாவது கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழ் கால்
சென்ட்டர் /சர்வீஸ் சென்ட்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளது சொமாட்டோ.

அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வேண்டுமா? அப்போ இந்த Airtel திட்டத்தை பாருங்கள்.. கண்டிப்பா யூஸ் ஆகும்..அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வேண்டுமா? அப்போ இந்த Airtel திட்டத்தை பாருங்கள்.. கண்டிப்பா யூஸ் ஆகும்..

உணவு மற்றம் மொழி ஒவ்வொரு

குறிப்பாக உணவு மற்றம் மொழி ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம் என்று கூறியுள்ளது சொமாட்டோ நிறுவனம்.

அதேபோல் தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.

Best Mobiles in India

English summary
Zomato apologized for the employee's behavior: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X