Google Workspace Vs Zoho Workplace: ஈமெயில், சாட், மீட்டிங்னு எல்லாமே இருக்கு.. ஆன்-இன்-ஒன் மாற்று!
கூகுள் குரோம் பிரவுசருக்கு போட்டியாக உலா பிரவுசர் (Ulaa Browser) மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகவே கூகுள் ஆப்களுக்கு மாற்றாக ஜோஹோ (Zoho) நிறுவனம், ஈமெயில், சாட், மீட்டிங், ரைட்டர், ஷீட்ஸ் போன்றுவற்றுக்கு மாற்றான ஆப்களின் பண்டில்களை ஜோஹோ வொர்க்பிளேஸ் (Zoho Workplace) மூலம் கொடுக்கிறது. கூகுள் வொர்க்ஸ்பேஸ்-க்கு (Google Workspace) இந்தியாவின் ஆல்-இன்-ஒன் மாற்றாக வந்து இருக்கிறது. இதில் என்னென்ன ஆப்கள் இருக்கின்றன? கூகுளுக்கு மாற்றாக என்ன செய்கின்றன?
கூகுள் வொர்க்ஸ்பேஸ் மூலம் ஜிமெயிலை இன்டிகிரேஷன் செய்தால் போதும், கூகுள் சாட், கூகுள் டாக்ஸ், கூகிள் ஷீட்ஸ், கூகுள் காலண்டர், கூகுள் மீட் போன்ற ஒட்டுமொத்த ஆப்களையும் பயன்படுத்த முடியும். இதையே ஜோஹோ வொர்க்பிளேஸ் செய்துள்ளது. அதிலும், கூகுளைவிட மலிவான விலைக்கும் கொடுக்கிறது. முதலில் என்னென்ன ஆப்கள் என்பதை பார்ப்போம்.

ஈமெயில் & காலண்டர்
* ஜோஹோ மெயில் (Zoho Mail)
* ஜோஹோ காலண்டர் (Zoho Calendar)
கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail) மற்றும் கூகுள் காலண்டர் (Google Calendar) ஆகியவற்றுக்கு மாற்றாக இவை கிடைக்கின்றன. இதிலும் கஸ்டம் டொமைன் (Custom Domain) கிடைக்கிறது. அதேபோல பாதுகாப்பான, ஆட்-ஃப்ரீ ஈமெயில் ஹோஸ்டிங் சேவையை கொடுக்கிறது. அதே நேரத்தில், தனிநபர்களுக்கும் ஜோஹோ மெயில் சேவை கிடைக்கிறது.
பிசினஸ் மற்றும் தனிப்பட்ட இவென்ட்களை செக்டூல் செய்வது, முக்கிய தேதிகள் குறித்த நோட்டிபிகேஷன்கள் மற்றும் ஆன்லைன் மீட்டிங்களை முன்கூட்டியே தெரிவிப்பது போன்ற சேவைகளை ஜோஹோ காலண்டர் கொடுக்கிறது. இதுவும் கிட்டத்தட்ட கூகுள் காலண்டர் போலவே செயல்படுகிறது. பர்சோனல் மற்றும் பிசினஸ்களுக்கும் இலவசமாக கிடைக்கிறது.

டாக்குமெண்ட் எடிடிங்
* ஜோஹோ ரைட்டர் (Zoho Writer)
* ஜோஹோ சீட் (Zoho Sheet)
* ஜோஹோ ஷோவ் (Zoho Show)
கூகுள் நிறுவனத்தின் டாக்ஸ் (Docs), சீட்ஸ் (Sheets) மற்றும் ஸ்லைட்ஸ் (Slides) ஆகிவற்றுக்கு மாற்றாக ஆன்லைன் ஸ்பிரட்ஷீட்கள் (Online Spreadsheet ), ஆன்லைன் வேர்ட் ப்ராசஸர் (Online Word Processor) ஆகியவற்றை ஜோஹோ நிறுவனத்தின் ரைட்டர் மற்றும் ஷீட் கொடுக்கின்றன. அதேபோல ஆன்லைன் ப்ரசன்டேஷன்களுக்கு ஜோஹோ ஷோவ் கிடைக்கிறது.

கிளவுட் ஸ்டோரேஜ்
* ஜோஹோ டிரைவ் (Zoho Drive)
கூகுள் டிரைவ் மூலம் கிளவுட் ஸ்டோரேஜ் சேவை கிடைக்கிறது. அதேபோல ஜோஹோ டிரைவ் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையை அனுக முடிகிறது. இதிலும், ஆன்லைன் ஃபைல் ஸ்டோரேஜ், ஷேரிங் மற்றும் டீம்-பேஸ்டு ஃபைல் மேனேஜ்மெண்ட் சேவையையும் கொடுக்கிறது. இதற்கும் சப்கிரிப்ஷன் இருக்கிறது. கூகுள் நிறுவனத்தைவிட மலிவான விலைக்கு கிடைக்கிறது.
கம்யூனிகேஷன்
* ஜோஹோ கிளிக் (Zoho Cliq)
* ஜோஹோ மீட் (Zoho Meet)
கூகுள் நிறுவனம், அதனுடைய கூகுள் சாட் (Google Chat) மூலம் குரூப் சாட் சேவைகளை கொடுக்கிறது. அதேபோல இதனுடன் கூகுள் மீட் (Google Meet) மற்றும் ஜிமெயில் இன்டிகிரேஷன் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பிசினஸ் மீட்டிங்கள், சாட்டிங்கள் போன்றவற்றை செய்து கொள்ளலாம். இதேபோல ஜோஹோவின் கிளிக் சாட் சேவையையும், ஜோஹோ மீட் ஆன்லைன் மீட்டிங் சேவையை கொடுக்கிறது.

ஜோஹோ வொர்க்பிளேஸ் ஹைட்லைட்ஸ்
பிரைவசி-போகஸ்டு (Privacy-Focused): இந்த சேவையானது தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆகவே, சப்ஸ்கிரிப்ஷன் மாடலாக இருக்கிறது. விளம்பரங்கள் இதில் இருக்காது. அதேபோல டேட்டா மானிடைசேஷன் (Data Monetization) இதில் இருக்காது. ஆகவே, கூகுள் நிறுவனத்தை போலவே தனியுரிமையில் ஜோஹோ நிறுவனம் கவனம் செலுத்தி இருப்பது தெரிகிறது.
ஆப்-இன்டிகிரேஷன் (App-Integration): கூகுள் நிறுவனத்தை போலவே இதிலும் பல்வேறு ஆப்களின் இன்டிகிரேஷன் கிடைக்கிறது. டுடூ (ToDo), வால்ட் (Vault), கனெக்ட் (Connect) போன்ற பல்வேறு ஆப்களின் இன்டி-கிரேஷன் கிடைக்கிறது. ஆகவே, சிங்க் செய்து பயன்படுத்தி கொள்ள முடிகிறது. இதனால், பிசினஸ் ப்ரோபைல்களை எளிதாக பயன்படுத்தலாம்.
விலை குறைவு (Cost-Effective): கூகுள் வொர்க்ஸ்பேஸ் சந்தாவுடன் ஒப்பிடுகையில் ஜோஹோ வொர்க்பிளேஸ் மலிவாக கிடைக்கிறது. அதே நேரத்தில் யூசர்கள் லிமிட், ஆன்லைன் மீட்டிங் பங்கேற்பாளர்கள் லிமிட் ஆகியவற்றில் அதிக அனுகல்களையும் கொடுக்கிறது. கூகுளை போலவே இதிலும் ப்ரீ-வெர்ஷனும் இருக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாகவே மாற்றாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








