Home
News

நக்கல் செய்து அசிங்க படுத்திய அமெரிக்க CEO.. சபதம் போட்ட ZOHO ஸ்ரீதர் வேம்பு.. கழுவி ஊத்திய நெட்டிசன்கள்!

கனடிய-அமெரிக்க முதலீட்டாளர் மற்றும் ஒய் காம்பினேட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆன கேரி டான் (Y Combinator CEO Garry Tan), இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ (ZOHO) நிறுவனத்தை கடுமையாக விமர்சனம் செய்ததன் விளைவாக ஸ்ரீதர் வேம்புவும், இந்திய நெட்டிசன்களும் வெகுண்டு எழுந்துள்ளனர்.

ஏஐ அடிப்படையிலான வைப்-கோடிங் (Vibe-coding) ஆனது, இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோவைத்தான் (ZOHO) முதலில் "வழக்கற்றதாக" மாற்றும் என்று ஒய் காம்பினேட்டர் சிஇஓ-வான கேரி டான் கடுமையாக சாடினார். வைப்-கோடிங் என்பது சாப்ட்வேர் என்ஜினீயர்களால் செய்யப்படும் பாரம்பரிய கோட்டிங்-க்கு பதிலாக, குறிப்பிட்ட பணிகளுக்கான கோட்டிங்-ஐ உருவாக்க செயற்கை நுண்ணறிவு டூலை பயன்படுத்தும் அமெச்சூர் நடைமுறை ஆகும்.

அசிங்க படுத்திய அமெரிக்க CEO.. சபதம் போட்ட ZOHO ஸ்ரீதர் வேம்பு!

@Replit @emergentlabs மற்றும் @Taskade-ஐ பயன்படுத்தி சொந்தமான கஸ்டம் சாப்ட்வேரை உருவாக்குபவர்களால் தான் ஜோஹோவின் வணிகம் முதலில் பாதிக்கப்படும்" என்று டான் ஒரு எக்ஸ் தள பதிவில் கூறினார். மேலும் சாதாரண மக்களால் வைப்-கோட் வழியாக ஆப்களை உருவாக்க முடியும் போது, ஓவர்-பண்டல் செய்யப்பட்ட SaaS-க்கு ஏன் $30/இருக்கை/மாதம் செலுத்த வேண்டும்?" என்றும் கேரி கேள்வி எழுப்பினார்.

ஜோஹோ நிறுவனம் மீதான கேரியின் இந்த "வார்த்தை தாக்குதல்" காரணம் இல்லாமல் வரவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஆன ஸ்ரீதர் வேம்பு, வைப்-கோடிங்கிற்கு எதிராகப் பேசியதை தொடர்ந்தே ஒய் காம்பினேட்டர் சிஇஓ-வான கேரி டான் ஜோஹோவை தாக்கி பேசியுள்ளார்.

எல்லா கோட்களுமே மேஜிக் தான். கம்பைளரால் அந்த கோட்டிங் தாழ்த்தப்படும் வரை அனைத்து கோட்டிங்களும் மேஜிக் தான்.. மேஜிக் எப்போதுமே இருக்கும். அதுபோன்ற ஒரு மேஜிக்கை கட்டவிழ்க்க முயற்சிக்கிறேன் என்று ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த கடுப்பில் தான் கேரி ஜோஹோ நிறுவனத்தை நக்கலாக பேசியுள்ளார்

சும்மா விருவாரா ஸ்ரீதர் வேம்பு! கேரி டானின் கருத்துக்களுக்கு பதிலளித்த ஸ்ரீதர் வேம்பு, ஒய் காம்பினேட்டர் சிஇஒ உடன் நேரடி பந்தயம் ஒன்றை கட்டினார். கேரி டானுடன் ஒரு பந்தயம் கட்டுகிறேன்: நாங்கள் அவரது வைப் கோடிங் நிறுவனங்களை மிஞ்சுவோம், வீழ்த்துவோம் என்று ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் எங்கள் வணிகம் வைப்-கோட்டிங் ஆப்களால் முதலில் "வழக்கற்றதாக" மாறும் வணிகமாக இருந்தால், இப்போது ஏன் இவ்வளவு விரைவான வாடிக்கையாளர் வளர்ச்சியை (50% ஐ விட அதிகமாக) காண்கிறோம்? மேலும் வைப்-கோட்டிங் இமெயில் அல்லது ஸ்ப்ரெட்ஷீட் அல்லது அக்கவுண்டிங் ஆப் அல்லது மெசேஜிங் ஆப்களை நாம் ஏன் இன்னும் பார்க்கவில்லை? என்றும் வேம்பு கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்னும் ஒரு படி மேலே சென்று - அவரை போன்றவர்களுக்கு (டான்), தொழில்நுட்பக் கடன் சந்தேகத்திற்கு இடமில்லாத கையகப்படுத்துபவர்களிடம் அடகு வைக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீதர் வேம்பு கேரியை கடுமையாக சாடியுள்ளார். கேரியை ஸ்ரீதர் வேம்பு மட்டுமல்ல நெட்டிசன்களும் பொளந்து கட்டி வருகின்றனர்.

தொழில்நுட்பம் மற்றும் ஏஐ சுற்றுச்சூழல் அமைப்பின் கீழ் உள்ள ஏராளமான எக்ஸ் பயனர்கள் ஸ்ரீதர் வேம்புவை ஆதரித்து, அமெரிக்க துணிகர முதலீட்டாளரை விமர்சனம் செய்தும், எதிர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு எக்ஸ் தள பயனர் - ஜோஹோ மீதான கேரியின் கருத்துகளை ஒரு "மாயை" என்று குறிப்பிட்டுள்ளார்.

"நீங்கள் வைப்-கோடிங்கை மிகைப்படுத்துகிறீர்கள்" என்று மற்றொரு எக்ஸ் தள பயனர் பதிவிட்டு உள்ளார். "இது எண்டர்ப்பைரஸ் எஸ்ஏஏஎஸ் மற்றும் அதன் உள்ளார்ந்த சிக்கல்கள் பற்றிய மிகவும் மோசமான பார்வையாகும். ஒய்சி நன்றாக அறிந்திருக்க வேண்டும். முழு நிறுவனத்தையும் ஆபத்தில் ஆழ்த்தும் இந்த வைப் கோட்டிங் ஆப்களால் என்னென்ன பயங்கரமான பாதுகாப்பு சிக்கல்கள் எழுகின்றன என்பதை பார்ப்பது எனக்கு பிடிக்கவில்லை" என்று கூகுளில் பணிபுரியும் எக்ஸ் தள பயனர் கூறியுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ZOHO Sridhar Vembu bet with Y Combinator CEO Garry Tan Regarding Vibe Coding
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X