Home
News

அவரே சொல்லி மாட்டிகிட்டாரு.. Arattai இல் ஓட்டை? கணவன் மனைவி குறித்த ரகசிய கேள்வியால் வந்த வினை!

ஜோஹோ (ZOHO) நிறுவனத்தின் அரட்டை ஆப் (Arattai App) ஆனது "வாட்ஸ்அப் கில்லர்" என்கிற தலைப்பின் கீழ், அதாவது "வாட்ஸ்அப்பை காலி செய்ய வந்த ஆப்" என்கிற பல செய்தி தலைப்புகளின் கீழ் கடந்த 2 வாரங்களாக மிகவும் பிரபலமடைந்து உள்ளது.

அரட்டை ஆப் ஆனது மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப்பை போலவே செயல்படுகிறது. அதாவது இதன்கீழ் மெசேஜ்கள், போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை அனுப்ப முடியும்; வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் செய்ய முடியும். ஸ்டோரீஸ்களை ஷேர் செய்ய முடியும், சேனல்களை நிர்வகிக்கவும் முடியும்.

Arattai: கணவன் மனைவி குறித்த ரகசிய கேள்வியால் வந்த வினை!

இதெல்லாம் சேர்ந்து அரட்டை ஆப்பை "வாட்ஸ்அப் கில்லர்" ஆக்கிவிட முடியுமா என்று கேட்டால் - முடியாது!ப்ரைவஸி அம்சங்கள் (Privacy Features) தான் - அதாவது பயனர்களிடன் தரவுகளை மற்றும் பயனர்களை பற்றிய தகவல்களை பாதுகாக்கும் தனியுரிமை அம்சங்கள் தான், எந்தவொரு மெசேஜிங் ஆப்பையும் வாட்ஸ்அப் கில்லர் ஆக மாற்றும்!

அரட்டை ஆப் ஆனது ஒரு ஸ்பைவேர்-ப்ரீ மெசஞ்சர் ஆப் (Spyware‑free Messenger App) ஆக அறியப்படுகிறது. இது தனியுரிமை உணர்வுள்ள பயனர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. ஆனால் அரட்டை ஆப்பில் மிகவும் முக்கியமான ஒரு தனியுரிமை அம்சம் இல்லை என்கிற தகவல் வெளிப்பட்டுள்ளது.

அது இ2இஇ (E2EE) என்கிற எண்ட் டூ என்ற என்க்ரிப்டட் (End-to-end encrypted) அம்சமாகும். ரத்தின சுருக்கமாக விளக்கம் அளிக்க வேண்டுமென்றால் - இந்த அம்சத்தின் கீழ் ஒரு மெசேஜை அனுப்பிய அனுப்புநரும், அந்த மெசேஜை பெறும் பெறுநரும் மட்டுமே அந்த மெசேஜ்களை படிக்க முடியும் - வேறு யாரும், மெசேஜிங் சேவை வழங்குநர் கூட அதை படிக்க முடியாது.

இப்படிப்பட்ட ஒரு முக்கியமான அம்சம் அரட்டை ஆப்பில் இல்லை என்கிற விஷயம், எக்ஸ் பயனர் ஒருவர் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

தனியுரிமை பிரச்சினையை மையமாக கொண்டு, ரவி என்கிற எக்ஸ் பயனர் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவிடம் அரட்டை ஆப்பின் தனியுரிமை பாதுகாப்புகள் குறித்து கேள்வி எழுப்பினார். "அரட்டை ஆப் மூலம் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் "நெருக்கமான படங்களை" பகிர்ந்து கொள்ளலாமா என்று அவர் ஸ்ரீதர் வேம்புவிடம் கேட்டார்.

குறிப்பாக ஜோஹோவில் பணிபுரியும் எவராலும் அந்த படங்களை அணுக முடியுமா என்று அவர் கேட்டார். அதற்கு பதில் அளித்த ஸ்ரீதர் வேம்பு, ரகசிய கிளர்ச்சியாளர்கள் - சட்டவிரோத அல்லது தேச விரோத நடவடிக்கைகளுக்கு அரட்டை ஆப்பை பயன்படுத்தும் நபர்கள் - சட்டரீதியான விளைவுகளிலிருந்து விடுபடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்று கூறியிருந்தார்

தான் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்பதால் - ரகசிய காதலர்களை விடுங்கள். ஒரு கணவன் மனைவி தங்களுக்குள் நெருக்கமான படங்களை பரிமாறிக்கொள்ள முடியுமா? ஜோஹோவில் உள்ள அனைவருக்கும் இந்த படங்களுக்கான அணுகல் உள்ளதா? தயவுசெய்து நேரடியான பதில் அளிக்கவும்" என்று மேலுமொரு கேள்வி கேட்டார் ரவி.

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது "எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன்" இன்னும் அரட்டை ஆப்பில் கிடைக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். இருப்பினும், அது விரைவில் கிடைக்கும் என்று அவர் கூறினார். ஜோஹோ ஊழியர்கள், வாடிக்கையாளர் தகவல்களை அணுக மாட்டார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் தனது வணிகம் இருப்பதாகவும் ஸ்ரீதர் வேம்பு கூறினார்.

எங்கள் முழு எஸ்ஏஎஸ் வணிகமும் வாடிக்கையாளர் தரவை அணுக மாட்டோம், மேலும் அவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வதற்காக அதை பயன்படுத்த மாட்டோம் என்கிற நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தொழில்நுட்ப அம்சம், அது வரப்போகிறது. நம்பிக்கை மிகவும் விலைமதிப்பற்றது. உலக சந்தையில் அந்த நம்பிக்கையை நாங்கள் தினமும் சம்பாதித்து வருகிறோம். எங்கள் தயாரிப்பின் ஒவ்வொரு பயனரின் நம்பிக்கையையும் எல்லா இடங்களிலும் நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று ஜோஹோ நிறுவனர் கூறினார்.

ஸ்ரீதர் வேம்புவின் இந்த பதிலுக்கு சில எதிர்ப்புகளும் எழுந்தன. அவரது பதில், அடிப்படையில் ஜோஹோ ஊழியர்கள் வாடிக்கையாளர் தரவை அணுக மாட்டார்கள் என்று நம்ப வேண்டும் என்று கூறுவதாகும், ஆனால் அவர்கள் அணுக மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இருப்பினும், பயனர்கள் குறித்த தரவு ஜோஹோ ஊழியர்களுக்கு அணுக முடியாத "என்கிரிப்ட்ட டிஸ்க்கில் (encrypted disk) சேமிக்கப்படுகிறது என்று வேம்பு தெளிவுபடுத்தினார். எந்த ஊழியருக்கும் அதை அணுக முடியாது. எண்ட் டு எண்ட் குறியாக்கம் வெளியிடப்படும்போது, ​​அந்த கிளவுட் ஸ்டோரேஜ் அகற்றப்படும். அது டிவைஸில் மட்டுமே இருக்கும் என்றும் ஸ்ரீதர் வேம்பு பதிலளித்துளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ZOHO Sridhar Vembu Admitted that end to end encryption is not yet available on Arattai App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X