அரட்டை அடிக்கலாமா- ஜோஹோ அறிமுகம் செய்த அரட்டை: வாட்ஸ்அப் Vs அரட்டை!

|

வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வந்த புதிய தனியுரிமை கொள்கையை கட்டாயம் பயனர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ஒரு கெடுவை முன்வைத்தது. இதனால் கடுப்பான பயனர்கள் வாட்ஸ்அப்பிற்கு மாற்று பயன்பாட்டை தேடி வருகின்றனர்.

ஜோஹோ அறிமுகம் செய்த அரட்டை

ஜோஹோ அறிமுகம் செய்த அரட்டை

வாட்ஸ்அப்பிற்கு பதிலாக பாதுகாப்பான மெசேஜிங் தளத்தை பயன்படுத்த பயனர்கள் தேடிவரும் நிலையில், சென்னையை தளமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனமான "ஜோஹோ" அரட்டை பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களோடு அரட்டை பயன்பாடு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு தளமாக அரட்டை பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரட்டை என்பது தமிழ் சொல் ஆகும். அரட்டை பயன்பாடு தற்போது நண்பர்கள் மற்றும் குடும்ப சோதனை (Friends and Family Trail) வெளியீடாக உள்ளது. மேலும் அடுத்த சில வாரங்களில் இது முறையாக தொடங்கப்படும் என ஜோஹோ தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

பீட்டா சோதனையில் இருந்த அரட்டை

பீட்டா சோதனையில் இருந்த அரட்டை

அரட்டை பயன்பாடு சில வாரங்களாகவே ஊழியர்களுக்கு பீட்டா சோதனையில் இருந்தது. தற்போது அரட்டை பயன்பாடு கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் என இரண்டிலும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.

10,000-த்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கம்

10,000-த்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கம்

கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் அரட்டை பயன்பாடு 10,000-க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களை கொண்டுள்ளதாக காட்டுகிறது. அரட்டை பயன்பாடு வாட்ஸ்அப் போன்றே சுயவிவரப் பெயர், நாட்டின் குறியீட்டு தொலைபேசி எண், முகவரி, சுயவிவரப்படம் மற்றும் தொடர்புகள் போன்ற பிற விருப்பத் தகவல்களை கேட்கும் என கூறப்படுகிறது.

தனியுரிமை கொள்கை விதிகள்

தனியுரிமை கொள்கை குறித்து பார்க்கையில், பயன்படுத்தும் ஸ்மார்ட்போனின் வகை, சாதனத்தின் ஐடி, சாதனத்தின் ஐபி முகவரி, இணைய உலாவி உள்ளிட்டவைகளை கண்டறியலாம். End to End Encryption அரட்டை பயன்பாடு செய்யப்படவில்லை. மேலும் இதற்கான பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் முறையான அறிமுகத்தில் இது இருக்கும் எனவும் ஸ்ரீதர் வேம்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் தரப்பினரிடம் தகவல் பகிரப்பட மாட்டாது

மூன்றாம் தரப்பினரிடம் தகவல் பகிரப்பட மாட்டாது

அதேபோல் பயனரின் முன் அனுமதியின்றி மூன்றாம் தரப்பினரால் உங்கள் செய்திகளை அணுகவோ படிக்கவோ முடியாது. சேகரிக்கும் தகவல்கள் பயனரின் முன் அனுமதியின்றி மூன்றாம் தரப்பினருடன் பகிரவோ வெளியிடவோ இல்லை என அரட்டை பயன்பாடு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சேவைகளை வழங்குவதற்கு உதவ அதன் பணியாளர்கள், வணிக கூட்டாளர்கள் உள்ளிட்ட மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்களிடம் தரவை பகிர வேண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

கூடுதல் சிறப்பம்சங்களை இணைக்க செயலில் உள்ள நிறுவனம்

கூடுதல் சிறப்பம்சங்களை இணைக்க செயலில் உள்ள நிறுவனம்

பயன்பாட்டின் பயன்பாடு தொடர்பாக சேகரிக்கும் தகவல்களை விற்கவோ அல்லது வர்த்தகம் செய்யவோ இல்லை என அரட்டை தரப்பில் உறுதியாக கூறப்படுகிறது. ஜோஹோ பயன்பாடு பிற செய்தி பகிர்வு பயன்பாட்டிற்கு ஒத்ததாகவே இருக்கும். இது சுமார் 1000 பயனர்கள் வரையில் குழு அரட்டைகளையும், 6 பேர் வரை வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட டுவிட்

ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட டுவிட்

இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட டுவிட்டில், இன்னும் நிறைய அம்சங்கள் உள்ளன. இதில் ரகசிய அரட்டைகள், கட்டண இணைப்புகள், செலவுகள் நிர்வகித்தல் உள்ள அம்சங்களை சேர்க்க ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Source: thenewsminute.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Zoho Launched its Secure Messaging App 'Arattai'

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X