இனியும் தாமதம் வேண்டாம்.. அரட்டை செயலியை அப்டேட் செய்யுங்க.. ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தல்.. ஏன்?
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலியில் (Arattai app)தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அரட்டை செயலி குறித்து ஒரு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அரட்டை அப்டேட்
அதாவது அரட்டை சமூக வலைதள செயலியில் End to End என்கிரிப்ஷன் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே அப்டேட் செய்யுமாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் அரட்டை செயலியை அப்டேட் செய்யுங்கள். இன்று (செவ்வாய்) இரவு முதல் End to End என்கிரிப்ஷன் வசதி செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த அப்டேட் இன்னும் குரூப்பிற்கு செயல்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. இதனை நாங்கள் சில வாரங்களில் அப்டேட் செய்வோம். இன்னும் பல அருமையான அம்சங்கள் செய்யப்பாட்டில் உள்ளன. விரைவில் அவை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில் என்ட் டு எண்ட் என்க்ரிப்சன் அம்சம் ஏற்கனவே உள்ளது. தற்போது அரட்டை செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்த புதிய அம்சம் அரட்டை செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய அம்சம்
அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு மெசேஜிங் செயலிகள் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கக்கூடிய (Cross-compatibility) தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு (Zoho founder Sridhar Vembu) கூறிய நிலையில், தற்போது அதன் முக்கியப் போட்டியாளரான வாட்ஸ்அப் அதே அம்சத்தைச் சோதித்து வருவது தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் WaBetaInfo-வின் தகவலின்படி, வாட்ஸ்அப் தற்போது பயனர்கள் பிற மெசேஜிங் தளங்களில் உள்ளவர்களுக்கு நேரடியாகச் செய்திகளை அனுப்பக்கூடிய ஒரு புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தற்போது ஐரோப்பாவில் உள்ள பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது.
குறிப்பாக இந்த புதிய அம்சம் மட்டும் செயல்பாட்டுக்கு வந்தால் வாட்ஸ்அப்-ல் இருந்தபடியே அரட்டை செயலியைப் பயன்படுத்தும் ஒருவருடன் உரையாடலைத் தொடங்கவும், தொடர்ந்து பேசவும் அனுமதிக்கும். அதுவும் வாட்ஸ்அப்பைப் போல மூடப்பட்ட அமைப்புகளாக இல்லாமல், யுபிஐ மற்றும் மின்னஞ்சல் போலச் செயல்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் தான் வாட்ஸ்அப் தற்போது பயனர்கள் பிற மெசேஜிங் தளங்களில் உள்ளவர்களுக்கு நேரடியாக செய்திகளை அனுப்பக்கூடிய அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது.

ஆனாலும் இந்த புதிய அம்சத்தை வாட்ஸ்அப் சோதிப்பதற்கு முக்கிய காரணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைச் சட்டம் (Digital Markets Act - DMA) தான். இந்த சட்டம் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்குடன், வாட்ஸ்அப் போன்ற பெரிய மெசேஜிங் தளங்கள் மற்றும் சேவைகளுக்கு திறந்த தகவல் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இதனால் தான் தற்போது வாட்ஸ்அப் இந்த புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது.
இந்த புதிய அம்சம் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி இந்தியா மற்றும் பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருவேளை இந்தியாவுக்கு இந்த அம்சம் வந்தால் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








