ஏறிய வேகத்துல பாதாளத்துக்கு போயாச்சு.. ZOHO Arattai ஆப் ஸ்ரீதர் வேம்பு இந்த நிலைமையில் செய்த அந்த ஒரு காரியம்!
கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் டாப் 100 ஆப்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய வேகத்தில் ஜோஹோ அரட்டை ஆப் (ZOHO Arattai App) ஆனது பர்சனல் சாட் மற்றும் குரூப் சாட் ஆகியவற்றுக்கு இ2இஇ (e2ee) என்னும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் (end to end encrypted) பாதுகாப்பை கொடுத்துள்ளது.
ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை ஆப் ஆனது வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக களமிறங்கியது. உள்நாட்டின் தயாரிப்பாக இருந்ததால், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வரையில் அதை டவுன்லோட் செய்தது மட்டுமல்லாமல், அரட்டை ஆப் மீதான ஆதரவை தெரியப்படுத்தினர்.

இந்த ஆதரவால் கடந்த செப்டம்பர் நடுப்பகுதியில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் 3,000 ஆக இருந்த புதிய சைன்-அப்கள் (Sign-Ups) அக்டோபர் தொடக்கத்தில் 1.5 லட்சமாக மாறியது. கிட்டத்தட்ட 100 மடங்கு வளர்ச்சியை கொடுத்தது. ஆனால், அடுத்த ஒரு மாதத்தில் டாப் 100 ஆப்களின் பட்டியலில் இருந்து வெளியேறிவிட்டது.
அரட்டை ஆப் ஆனது எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் என்கிற தனியுரிமை அம்சத்தை கொண்டிருக்கவில்லை. இதனாலேயே இந்த வீழ்ச்சியை பார்த்துள்ளதாக அறியப்படுகிறது. ஆனால், அப்படி ஏதும் கிடையாது என்பதை ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) நேரடியாக எக்ஸ் தளம் மூலமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். அனைத்து பர்சனல் சாட்களுக்கும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் இருக்கிறது.
அதே நேரத்தில் குறிப்பிட்ட அளவிலான குரூப் சாட்களுக்கும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் கொடுக்கப்பட இருக்கிறது என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். ஆகவே, அரட்டை ஆப் ஆனது தனியுரிமை பாதுகாப்பை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த இ2இஇ பாதுகாப்பில் இரண்டு ஆப்ஷன்களை அரட்டை ஆப் ஆனது கொண்டிருக்கிறது.
(ஆப்ஷன் 1) எந்தவொரு அரட்டை ஆப் யூசரும் தங்களது ஒன்-டு-ஒன் சாட்கள் அனைத்துக்கும் இ2இஇ பாதுகாப்பை டீபால்ட்டா மாற்றி கொள்ளலாம் அல்லது இ2இஇ மோட் (e2ee mode) மூலமாக ஒரு குறிப்பிட்ட சாட்டுக்கு மட்டும் மாற்றி கொள்ளலாம். இந்த இ2இஇ பாதுகாப்புக்கு மாறிய யூசர் யாருக்கு சாட் செய்தாலும் அவருக்கும் அது பொருந்தும்.
அதாவது, ஒரு யூசர் இ2இஇ பாதுகாப்பை பயன்படுத்தி மற்றொரு யூசருக்கு சாட் செய்தால், அந்த மற்றொரு யூசர் இ2இஇ பாதுகாப்பை பயன்படுத்தவில்லை என்றாலும், அவரது சாட்களும் இ2இஇ பாதுகாப்பை உறுதிப்படுத்தும். ஆகவே, இ2இஇ பாதுகாப்பு ஆனது ஒன்-டு-ஒன் சாட்களில் தனியுரிமை கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
(ஆப்ஷன் 2) அனைத்து ஒன்-டு-ஒன் சாட்களிலும் அரட்டை சிஸ்டம் ஆனது இ2இஇ டீபால்ட்டை (e2ee Default) கொண்டுவர இருக்கிறோம். ஆகவே, இ2இஇ மோட் (e2ee Mode) மூலம் மட்டுமே ஒன்-டு-ஒன் சாட்களை செய்ய முடியும். குரூப் சாட்களில் மட்டும் இ2இஇ மோட் டீபால்ட்டாக இருக்காமல் கிடைக்கும். குரூப் சாட்டுக்கான இ2இஇ மோட் பின்னர் கிடைக்க இருக்கிறது.
சிலர் தங்களது குறிப்பிட்ட சாட்களுக்கு கிளவுட் பேஸ்டு சாட் ஆப்ஷனை விரும்புகிறார்கள். ஆகவே, நாங்கள் ஆப்ஷன் 1-ஐ பற்றி யோசித்து வருகிறோம், ஆனால், ஆப்ஷன் 2-ஐ எளிதாக ஏற்று கொள்ள முடியும். விருப்பம் 2 எங்களுக்கு மலிவானதும் கூட என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். ஆகவே, அரட்டை ஆப் ஆனது எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட்டை உறுதி செய்துள்ளது.
நவம்பர் 4 ஆம் தேதியில் அரட்டை ஆப் ஆனது கூகுள் நிறுவனத்தின் பிளே ஸ்டோரில் 105 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் 123 ஆவது இடத்துக்கு சென்றுள்ளது. வாட்ஸ்அப் கோடிக்கணக்கான யூசர்களை ஏற்கனவே பெற்றுவிட்டது. ஆகவே, இதில் புதிய யூசர்களின் வருகை குறைவாகவே தெரியும்.


Click it and Unblock the Notifications








