Home
News

அண்ணே டீ கேன்சல்.. பேக் அடிச்ச ZOHO Arattai ஆப்.. CEO ஸ்ரீதர் வேம்புவே ஓப்பன்-ஆ சொல்லிட்டாரு!

வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் பிற மெசேஜிங் ஆப்கள் எதிர்கொண்ட ஒழுங்குமுறை சிக்கல்களை (Regulatory problems) தொடர்ந்து, யூசர்நேம் அடிப்படையிலான அக்கவுண்ட் அம்சத்தை (username based account feature) நீக்க உள்ளதாக ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை ஆப் (Zoho Arattai App) உறுதிப்படுத்தி உள்ளது.

இணைய மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் தொடர்பான கவலைகளை சுட்டிக்காட்டி, வாட்ஸ்அப் கொண்டு வந்த யூசர்நேம் அம்சம் (WhatsApp username feature) குறித்து மத்திய அரசு மெட்டா நிறுவனத்திற்கு அறிவிப்பு அனுப்பிய மறுநாளே, ஜோஹோ அரட்டை ஆப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அண்ணே டீ கேன்சல்.. பேக் அடிச்ச ZOHO Arattai ஆப்.. CEO ஸ்ரீதர் வேம்பு!

எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியும், முன்னாள் சிஇஓ-வுமான ஸ்ரீதர் வேம்பு, புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு (New regulatory requirements) இணங்க அரட்டை ஆப் ஆனது, தனது யூசர்நேம் அடிப்படையிலான அக்கவுண்ட் முறையை நிறுத்திக்கொள்ளும் என்று தெரிவித்தார்.

"ஒழுங்குமுறை மாற்றத்திற்கு இணங்க, அரட்டை ஆப்பில் யூசர்நேம் அடிப்படையிலான அக்கவுண்ட் அம்சத்தை நாங்கள் முடக்கவுள்ளோம்," என்று சுரேந்தர் வேம்பு கூறியுள்ளார். இருப்பினும் யூசர்நேம் அம்சம் தொடர்பாக இந்திய அரசிடம் இருந்து தங்களுக்கு ஏதேனும் கோரிக்கை வந்ததா என்பது குறித்து ஸ்ரீதர் வேம்பு விளக்கமளிக்கவில்லை.

இந்திய அரசின் கவலை: ஒரு அரசாங்க கடிதத்தை மேற்கோள் காட்டி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இந்த அம்சம் தொடர்பாக ஏன் ஒழுங்குமுறை நடவடிக்கை தொடங்கக்கூடாது என்பதற்கு மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு வாட்ஸ்அப்பிற்கு உத்தரவிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஃபிஷிங் தாக்குதல்கள், டிஜிட்டல் கைது மோசடிகள், நிதி மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் ஆகியவற்றை இது எளிதாக்கக்கூடும் என மத்திய அரசு கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. வங்கிகள், அரசு நிறுவனங்கள் அல்லது பிரபலங்களின் பெயர்களை போன்ற யூஸர் நேம்கள், பயனர்களை ஏமாற்ற தவறாக பயன்படுத்தப்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த விளக்கத்தை கோரியதுடன், இந்த புதிய வசதியை வெளியிடும் நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறும் வாட்ஸ்அப்பிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பின் விளக்கம்: வாட்ஸ்அப் நிறுவனமானது பயனர்கள் "ஆப்பில் அவர்கள் எவ்வாறு தோன்றுகிறார்கள்" (How they show up in the app) என்பது குறித்த கூடுதல் ப்ரைவஸி ஆப்ஷன்களை வழங்குவதற்கான "சமீபத்திய நடவடிக்கை" (Latest step) தான் இந்த யூஸர் நேம்ஸ் என்று சந்தைப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப்பை பொறுத்தவரை இது ஒரு கூடுதல் தனியுரிமை அடுக்கு ( additional privacy layer) ஆகும். இதன் கீழ் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களை ஒரு தனித்துவமான பயனர் பெயர் குறியீட்டை (unique username key) அமைக்க அனுமதிக்கிறது. இதன் மூலம், அவர்களை யாரெல்லாம் தொடர்பு கொள்ளலாம் என்பதில், பயனர்களுக்கு அதிக கட்டுப்பாடு கிடைக்கும் என்று வாட்ஸ்அப் நம்புகிறது

மத்திய அரசின் கவலைகளுக்கு பதிலளித்த வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஒருவர், யூசர் நேம் வசதி இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் "வாட்ஸ்அப்பில் தங்களுக்கு விருப்பமான யூசர் நேமை முன்பதிவு செய்வதற்கான வசதியை மட்டுமே நாங்கள் அறிவித்துள்ளோம். யூசர் நேமை பயன்படுத்தும் வசதி இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை; இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் படிப்படியாக வெளியிடப்படும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அம்சத்தின் கீழ் - மற்றொருவரின் அடையாளத்தை போல தங்களை காட்டிக்கொள்ளும் (impersonation) அபாயத்தை குறைக்கப் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. பொது பிரமுகர்கள், அரசு நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட மெட்டா அக்கவுண்ட்களுக்கான யூசர் நேம்களை அந்நிறுவனம் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளது. அத்தகைய பெயர்களை போன்ற தோற்றமளிக்கும் பெயர்கள் பதிவு செய்யப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Zoho Arattai App confirmed removing username based account feature following new regulatory
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X