Home
News

Google Pay, PhonePe கதை முடிஞ்சது.. இனி 200 ரூபாயோ 2000 ரூபாயோ.. வந்தது ஜீரோ-சார்ஜ் UPI பண பரிவர்த்தனை!

யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) சேவையானது.. பெருநகரம் முதல் தொலைதூர மாநிலத்தில் உள்ள சிறிய கிராமம் வரையிலாக மிகவும் சகஜமாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் யுபிஐ ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

இதை சரியாக உணர்ந்த பஜாஜ் ஃபின்சர்வ் (Bajaj Finserv) நிறுவனமானது, டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கான ஜீரோ-சார்ஜ் யுபிஐ பரிவர்த்தனைகளை (Zero Charge UPI Transactions) அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் யுபிஐ லைட் பேமெண்ட் ஆப்ஸ், யுபிஐ பே இந்தியா சேவை மற்றும் பீம் யுபிஐ (BHIM UPI) ஒருங்கிணைப்புகளையும் செய்து, பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனமானது மற்ற யுபிஐ ஆப்களுக்கான புதிய போட்டியாளராக உருமாறிவருகிறது.

இனி 200 ரூபாயோ 2000 ரூபாயோ.. வந்தது ஜீரோ-சார்ஜ் UPI பண பரிவர்த்தனை!

பஜாஜ் ஃபின்சர்வ் அதன் யுபிஐ லைட் பேமெண்ட் ஆப்பின் (Bajaj Finserv UPI Lite App) முக்கிய நன்மைகளில் ஓன்று - இது பரிவர்த்தனைகளுக்காக எந்த விதமான கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. அதாவது மளிகை சாமான்களை வாங்குதல், மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்தல் அல்லது மின்சார கட்டணத்தை செலுத்துதல் போன்ற சிறிய அளவிலான தொகைகளை அடிக்கடி பரிவர்த்தனை செய்யும் பயனர்கள்ளுக்கு, பரிவர்த்தனை கட்டணங்கள் இல்லாததால் அவர்களால் நிறைய சேமிக்க முடியும்.

பஜாஜ் ஃபின்சர்வ் யுபிஐ லைட்டின் மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இதன் கீழ் குறைந்தபட்ச காத்திருப்பு நேரங்களுடன் விரைவான பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை இன்னும் வசதியாக்குகிறது. மேலும் இந்த ஆப்பின் இன்டர்பேஸ் ஆனது குறைவான இணைய வசதி உள்ள பகுதிகளில் கூட வேகமாக செயல்படஅனுமதிக்கிறது மற்றும் உங்களுடைய பணப்பரிவர்த்தனை நாடு முழுவதும் எளிதில் சென்றடையும்.

பஜாஜ் ஃபின்சர்வின் யுபிஐ லைட் ஆப் ஆனது பீம் யுபிஐ உடன் முழுமையாக இணக்கமானது. இதன்கீழ் பயனர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்ட் மற்றும் ஏற்கனவே உள்ள யுபிஐ ஐடிகளுடன் கனெக்ட் ஆக முடியும். பயனர்கள் தங்களுக்கு விருப்பமான வங்கி கணக்கை இணைக்க முடியும், இது அவர்களின் அனைத்து கட்டணத் தேவைகளுக்குமான ஒரே தளமாக இருக்கும்.

மேலும் பஜாஜ் ஃபின்சர்வின் யுபிஐ லைட் ஆப்பில் பாதுகாப்பிற்கான முன்னுரிமை மிகவும் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. மல்டி லேயர் ஆத்தன்டிகேஷன் மற்றும் என்கிரிப்ஷன் உடன், பரிவர்த்தனைகள் மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. கடைசியாக பஜாஜ் ஃபின்சர்வின் யுபிஐ லைட் ஆப் ஆனது மிகவும் எளிமையான மற்றும் உள்ளுணர்வு மிக்க வடிவமைப்புடன் வருகிறது. இந்த ஆப்பின் நேவிகேஷனில் எந்த அசௌகரியமும் இருக்காது

இதேபோல சமீபத்தில் ஜென்வைஸ் (GenWise) நிறுவனமானது மூத்த குடிமக்களுக்கான யுபிஐ தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, முற்றிலும் வயதானோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட யுபிஐ பேமெண்ட்டை அறிமுகப்படுத்தி இருந்தது. ஜென்வைஸ் யுபிஐ ஆனதும் கூட வயதானவர்கள் பயன்படுத்தும்படியான மிகவும் எளிமையான யூஸர் இன்டர்பேஸை கொண்டுள்ளது.

மேலும் ஜென்வைஸ் யுபிஐ ஆனது ஜியோ-ஃபென்சிங் (Geo-fencing), பயோமெட்ரிக் அங்கீகாரம் (Biometric authentication) மற்றும் ஆடியோ அடிப்படையிலான நேவிகேஷன் (Audio-based navigation) போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி கடந்த அக்டோபர் மாதத்தில், யுபிஐ சேவையின்கீழ், 400 மில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் யூசர்கள் மற்றும் 16.5 பில்லியனுக்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும் கூட இந்தியாவில் உள்ள 250 மில்லியன் முதியவர்கள் யுபிஐ சேவையை அதிகம் பயன்படுத்துவது இல்லை. இதற்கு கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற யுபிஐ பேமண்ட் ஆப்களில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் தான் காரணம். சீனியர் சிட்டிசன்கள் மேற்குறிப்பிட்ட ஆப்களின் வழியாக பணம் அனுப்ப அல்லது பெற தயங்குகின்றனர். ஆனால் இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களிடையேயான ஸ்மார்ட்போன் பயன்பாடு 65% க்கும் அதிகமாக இருக்கிறது. இந்த இடைவெளியை நிரப்பவே ஜென்வைஸ் யுபிஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Zero Charge UPI Transactions BHIM UPI Integration And More in Bajaj Finserv UPI Lite App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X