இன்னமும் Asus போன் யூஸ் பண்றீங்களா? நாளைக்கு தெரிஞ்சிடும் என்ன கதைனு!

|

"இன்னமுமா Asus ஸ்மார்ட்போனை யூஸ் பண்றீங்க!" என்கிற கேலி பேச்சுக்கு ஆளாகும் வண்ணம் தான் ஆசஸ் நிறுவனத்தின் நிலைமை இருக்கிறது.

கைகொடுத்து காப்பாற்றி வரும் ROG போன்கள்!

கைகொடுத்து காப்பாற்றி வரும் ROG போன்கள்!

என்ன தான் ROG சீரீஸ் ஸ்மார்ட்போன்களை "கையில் வைத்துக்கொண்டு": கேமிங் ஸ்மார்ட்போன் பிரிவை ஒரு கலக்கு கலக்கினாலும் கூட, ஆசஸ் நிறுவனத்தால் பட்ஜெட், மிட்-ரேன்ஜ், பிரீமியம் என எந்த பிரிவிலும், பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை என்பதே உண்மை!

ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?

இவ்வளவு நாள் Asus தாக்குபிடிப்பதே பெரிய விஷயம்!

இவ்வளவு நாள் Asus தாக்குபிடிப்பதே பெரிய விஷயம்!

"நேத்து வந்த பய... இன்னைக்கு பட்டைய கிளப்புறான்!" என்கிற அளவுக்கு, இந்திய ஸ்மார்ப்போன் சந்தை முழுவதும் நிரம்பி வழியும் ரியல்மி ஒருபக்கம் இருக்க..

நிதானமாக மற்றும் நீண்ட காலமாக மக்களின் நன்நம்பிக்கையை பெற்று பலரின் ஃபேவரைட் ஆக இருக்கும் சாம்சங் மறுபக்கம் இருக்க... இது போன்ற நிறுவனங்களின் மத்தியில் ஆசஸ் நிறுவனம் நீடித்து இருப்பதே பெரிய விஷயம்.

அதற்கு ஆசஸ் நிறுவனத்தின் ஆர்ஓஜி போன்கள் பெரிய காரணமாக இருந்தாலும் கூட, நிறுவனத்தின் ஜென்போன் மாடல்களுக்கும் முக்கிய பங்குண்டு.

நாளைக்கு தெரிந்து விடும் ஜென்போனின் கதை என்னவென்று?

நாளைக்கு தெரிந்து விடும் ஜென்போனின் கதை என்னவென்று?

ஆசஸ் ஸ்மார்ட்போன்களின் நிலைமை "இப்படி" அந்தரத்தில் தொங்கும் நிலைப்பாட்டில், நாளை, அதாவது ஜூலை 28ஆம் தேதி மாலை 6:30 (இந்திய நேரப்படி) புதிய ஜென்போன் மாடல் ஒன்று (இந்தியா உட்பட பல நாடுகளில்) அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அது ஆசஸ் ஜென்போன் 9 அல்லது ஆசஸ் 9z மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் Zenfone 8 அல்லது 8z ஸ்மார்ட்போனின் 'அப்கிரேட்டட் வெர்ஷன்' ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!

Asus Zenfone 9 வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி?

Asus Zenfone 9 வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி?

முன்னரே குறிப்பிட்டபடி, ஆசஸ் Zenfone 9 ஆனது ஜூலை 28 அன்று மாலை 6:30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஒரு 'லைவ் ஈவென்ட்' ஆக இருக்கும். அதாவது இதை நீங்கள் Asus நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Youtube சேனல் வழியாக லைவ் ஸ்ட்ரீம் செய்யலாம்.

Zenfone 9 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

Zenfone 9 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ஜென்போன் 9 ஆனது, இந்தியாவில் அறிமுகமாகும் ஆசஸ் நிறுவனத்தின் அடுத்த 'காம்பேக்ட் பிளாக்ஷிப்' ஸ்மார்ட்போனாக இருக்கும்.

நினைவூட்டும் வண்ணம், கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Asus 8z க்கு பின் இந்தியாவில் வரும் ஸ்மார்ட்போன் தான் இந்த - Zenfone 9.

இது ஃபுல்-எச்டி+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான "சிறிய" 5.9-இன்ச் Samsung AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.

இவ்ளோ கம்மி விலைக்கு 50MP கேமரா; 6.6-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி-ஆ!இவ்ளோ கம்மி விலைக்கு 50MP கேமரா; 6.6-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி-ஆ!

எந்த ப்ராசஸர்-ஐ பயன்படுத்தும்?

எந்த ப்ராசஸர்-ஐ பயன்படுத்தும்?

ஆசஸ் ஜென்போன் 9-இல் லேட்டஸ்ட் ஆக அறிமுகமான Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் பயன்படுத்தப்படலாம். இது 16GB வரையிலான LPDDR5 ரேம் மற்றும் 512GB UFS 3.1 அளவிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்க்கப்படலாம்.

ஆனால் மேற்கண்ட ரேம் மற்றும் ஸ்டோரேஜை நாம் இந்தியாவில் எதிர்பார்க்க முடியாது; அது மற்ற சந்தைகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்படலாம்.

இந்தியாவில் குறைந்த ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்களின் கீழ்சி - மற்ற நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் - ஜென்போன் 9 அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கிறோம்.

கேமரா செட்டப் எப்படி இருக்கும்?

கேமரா செட்டப் எப்படி இருக்கும்?

கேமராக்களை பொறுத்தவரை, வரவிருக்கும் இந்த ஆசஸ் ஸ்மார்ட்போனில் 50MP Sony IMX766 மெயின் கேமரா + 12MP அல்ட்ரா-வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம்.

நினைவூட்டும் வண்ணம், ஜென்போன் 9 மாடலின் "முன்னோடி" 64MP + 12MP என்கிற கேமரா செட்டப் உடன் அறிமுகமானது. இருப்பினும், மெயின் சென்சாரில் IMX686 லென்ஸே இடம்பெற்றது. ஆக ஒப்பீட்டளவில் IMX766 சென்சார் சற்றே மேம்படுத்தப்பட்டதாக இருக்கும்.

முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீ எடுப்பதற்கும் வீடியோ கால் செய்வதற்கும் 12எம்பி கேமரா இருக்கும்.

Realme Pad X 5G: சொன்னபடி பட்ஜெட் விலையில் அறிமுகம்; ஆகஸ்ட் 1 முதல் விற்பனை!Realme Pad X 5G: சொன்னபடி பட்ஜெட் விலையில் அறிமுகம்; ஆகஸ்ட் 1 முதல் விற்பனை!

பேட்டரித்திறன் எப்படி இருக்கும்?

பேட்டரித்திறன் எப்படி இருக்கும்?

பேட்டரியை பொறுத்தவரை, இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,300mAh பேட்டரியை பேக் செய்யலாம். இது "முந்தைய" 4,000mAh பேட்டரியை விட மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

கடைசியாக, இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ZenUI கஸ்டம் ஸ்கின் கொண்டு இயக்கப்படும்.

Asus Zenfone 9 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்?

Asus Zenfone 9 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்?

Zenfone 9 அல்லது Asus 9z ஸ்மார்ட்போனின் 16GB + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 64,770 என்று நிர்ணயம் செய்யப்படலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி, இது 16ஜிபி ரேம் உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என்பதால், இந்தியாவில் இதன் விலை சற்றே குறைவாக இருக்கலாம்.

இதுதவிர்த்து குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மூன்லைட் ஒயிட், மிட்நைட் பிளாக், ஸ்டாரி ப்ளூ மற்றும் சன்செட் ரெட் என்கிற 4 கலர் ஆப்ஷன்களின் கீழ் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜென்போன் 9 ஸ்மார்ட்போனின் துல்லியமான விலை நிர்ணயம் மற்றும் அம்சங்களை பற்றி அறிந்துகொள்ள நாளை (ஜூலை 28) மாலை 6.30 மணி வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

Photo Courtesy: Asus

Best Mobiles in India

English summary
Zenfone 9 New Compact Smartphone From Asus All Set to Launch in India on July 28 Check Pric

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X