Home
News

பாதி விலைக்கு பிரீமியம் ஆண்டு சந்தா: பலே சலுகையை அறிவித்த ZEE5.!

ZEE5 பிரீமியம் சந்தாவை வாங்க விரும்பும் பயனர்களுக்கு இது கண்டிப்பாக ஒரு நற்செய்தி என்றுதான் கூறவேண்டும். அண்மையில் வெளிவந்த தகவலின்படி ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வீடியோ-ஆன்-டிமாண்ட் சேவையான ZEE5 அதன் மூன்றாம் ஆண்டு நிறைவை கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நிறைவு செய்தது.

விதமாக ZEE5 தனது

எனவே இதை கொண்டாடும் விதமாக ZEE5 தனது வருடாந்திர சந்தாவின் விலையை 50 சதவிகிதம் குறைத்து ரூ.499 ஆக மாற்றியுள்ளது. கண்டிப்பாக இந்த சலுகை மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

 12 மாதங்களுக்கு ரூ.999-க்கு அணுக கிடைக்கிறது

அதாவது இந்த சேவை வழக்கமாக 12 மாதங்களுக்கு ரூ.999-க்கு அணுக கிடைக்கிறது. தற்சமயம் அறிவிக்கப்பட்ட சலுகையின்படி ZEE5 பிரீமியத்தின் விலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரூ.499 ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதம் மற்றும் மூன்று மாத சந்தாக்களுக்கான விலைகள்

ஒரு மாதம் மற்றும் மூன்று மாத சந்தாக்களுக்கான விலைகள்

ஆனால் ஒரு மாதம் மற்றும் மூன்று மாத சந்தாக்களுக்கான விலைகள் முறையே ரூ.99 மற்றும் ரூ.299 ஆகவே உள்ளன. அதில் எந்தமாற்றமும் இல்லை என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28-ம் தேதி காலாவதியாகிறது

பிப்ரவரி 28-ம் தேதி காலாவதியாகிறது

மேலும் ZEE நிறுவனம் அறிவித்துள்ள இந்த அட்டகாசமான சலுகை வரும் பிப்ரவரி 28-ம் தேதி காலாவதியாகிறது. அதபோல் நீங்கள் ZEE5 பிரீமியம் சந்தாவை வாங்க நினைத்தால் நிறுவனத்தின் வலைத்தளத்திற்கு செல்லுங்கள் அல்லது மொபைல் ஆப் வசதியை பதிவிறக்கி செயல்முறையை தொடங்கவும்.

ஒரிஜினல்ஸ் டிவி நிகழ்ச்சி

சன்என்எக்ஸ்டியை போன்று ZEE5 பிராந்திய சந்தைகளிலும் வலுவான இடத்தைப் பெறுகிறது. இந்த ஆண்டு ZEE5 ஆனது பல ஒரிஜினல்ஸ் டிவி நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சலுகையை

இந்நிறுவனம் 50 சதவிகிதம் சலுகையை வழங்கியது உடன் மனோஜ் பாஜ்பாயின் 'Silence... Can You Hear It?' திரில்லர் மார்ச் 26 அன்று வெளியிடப்படும் என்றும்' கூறியுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ZEE5 மூன்று ஒரிஜினல் திரைப்படங்களை 2021 இல் வெளியிட்டது. Jeet Ki Zid, Nail Polish, Kaagaz போன்றவை ஆகும்.

தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா

தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா

ZEE5 நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறியது என்னவென்றால், இந்த ஆண்டு மேலும் பல ஒரிஜனல்கன்டென்ட் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். ZEE5 பிரீமியம் சந்தாவை ஏர்டெல்லின் ரூ.289 ப்ரீபெய்ட் திட்டம் அல்லது வோடபோன் ஐடியாவின் பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களை உடன் தேர்வு செய்யலாம். இந்த திட்டங்கள் இலவசமாக ZEE5 பிரீமியம் சந்தாவுடன் தொகுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
ZEE5 Premium Annual Subscription with 50% discount: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X