இப்படி ஒரு ஸ்பீக்கர் எல்லார் வீட்லயும் இருக்கனும்.. மொத்த ஏரியாவே அலறும் சவுண்ட்.. ஹை-டெக் டிசைன்.. ஆனா விலை க
ஜெப்ரானிக்ஸ் (Zebronics) நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சவுண்ட்பார் ஸ்பீக்கரை வெளியிட்டுள்ளது. இந்த புதிய சவுண்ட்பார் மாடல் ஜெப்-ஜுக் பார் 1000 (Zeb-Juke Bar 1000) என்ற பெயருடன் வெளியிடப்பட்டுள்ளது. இது தரமான ஆடியோ குவாலிட்டியை வழங்கும் 150W சவுண்ட்பார் ஆகும்.
இது சில குறிப்பிடத்தக்க விவரக்குறிப்புகள் மற்றும் ஒப்பீட்டளவில் மலிவு விலையைக் கொண்டுள்ளது. இதில் என்னென்ன சிறப்பெல்லாம் இருக்கிறதென்று பார்க்கலாம் வாங்க. ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புத்தம் புதிய ஜெப்-ஜுக் பார் 1000 (Zeb-Juke Bar 1000) சாதனம் ஆனது பல தரமான அம்சங்களை பேக் செய்துள்ளது.

ஜெப்ரானிக்ஸ் ஜெப்-ஜுக் பார் 1000 : (Zebronics Zeb-Juke Bar 1000) சிறப்பம்சம்
புதிய ஜெப்ரானிக்ஸ் ஜெப்-ஜுக் பார் 1000 (Zebronics Zeb-Juke Bar 1000) ஒரு நீளமான சவுண்ட்பார் ஸ்பீக்கர் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்தம் 150W சவுண்ட் அவுட்புட்டை வெளியீடக் கூடியது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது 5' இன்ச் அளவைக் கொண்ட 90W சப்வூப்பரை கொண்டுள்ளது. அதன் இரண்டு இயக்கிகளிலிருந்து 60W ஐ வெளியிடும் சவுண்ட்பார் மூலம் இது இயக்கப்படுகிறது.
இந்த சவுண்ட்பார் அமைப்பு 2.1 சேனல் அரேஞ்மென்டை வழங்குகிறது. இது மிகவும் அதிவேகமான ஆடியோ அனுபவத்திற்காக டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவை ஆதரிக்கிறது. இது HDMI (eARC), ஆப்டிகல் IN, யுஎஸ்பி (USB) மற்றும் ஆக்ஸ் (AUX) உள்ளிட்ட பிற இணைப்பு விருப்பங்களுடன், இந்த சவுண்ட்பார் ஸ்பீக்கர் புளூடூத் 5.3 வழியாக வயர்லெஸ் முறையில் இணைக்க அனுமதிக்கிறது.
இந்த ஸ்பீக்கரில் எல்இடி டிஸ்ப்ளே உள்ளது. இது சுவரில் பொருத்தக் கூடிய வால் மவுண்ட் அம்சத்தையும் கொண்டுள்ளது. இதன் தரம் எப்படி இருக்குமென்ற கவலை உங்களுக்கு வேண்டவே வேண்டாம், காரணம் இது ஒரு வருட உத்தரவாத காலத்துடன் வருகிறது. இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப்-ஜுக் பார் 1000 சவுண்ட் பார் சாதனத்தை கண்ட்ரோல் செய்ய இது ஒரு பிரத்தியேகமான ரிமோட் கண்ட்ரோலருடன் வருகிறது.

ஜெப்ரானிக்ஸ் ஜெப்-ஜுக் பார் 1000 (Zebronics Zeb-Juke Bar 1000) சவுண்ட்பார் ஸ்பீக்கர்கள் ஒற்றை பிளாக் வெறியன்ட் வண்ண மாடலில் மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வடிவமைப்பு மற்றும் டிசைன் பார்ப்பதற்கே சற்று வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப்-ஜுக் பார் 1000 சவுண்ட் பார் சாதனத்துடன் வரும் சப்வூப்பர் டிவைஸ் கண்களை கவர்கிறது.
காரணம் இது பார்ப்பதற்கு மைக்ரோசாப்ட் கேமிங் கன்சோலின் பிளாக் நிற எடிஷன் ஆன எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் போன்று காட்சியளிக்கிறது. இப்படி மிரட்டலான டிசைன் உடன், அட்டகாசமான அம்சங்களை பேக் செய்துள்ள சவுண்ட்பார் சாதனத்தின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம். இந்த சாதனம் இந்தியாவில் அறிமுக சலுகையுடன் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த புதிய ஜெப்ரானிக்ஸ் ஜெப்-ஜுக் பார் 1000 சாதனம் ரூ. 9,999 என்ற சிறப்பு அறிமுக விலையில் கிடைக்கும். இதன் முதல் விற்பனை செப்டம்பர் 5, 2023 அன்று மதியம் 12 மணிக்குத் தொடங்கும். அதை நீங்கள் பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பிராந்தியத்தில் பிரபலமான இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் (Flipkart) இலிருந்து வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








