சென்னையில் விற்பனையை துவங்கிய ஜெப்ரானிக்ஸ்.!

ஆல்வேஸ் அஹெட்" - என்ற கொள்கையை இந்த நிறுவனத்தின் தொடக்கத்தில் இருந்தே முன்னோடியாக கொண்டதின் காரணமாகவே, நிறுவனத்தின் முதல் சில்லறை விற்பனையகத்தை குடியரசு தினத்தில் திறப்பதற்கு காரணமாக இருந்தது. சில்லறை

|

தகவல் தொழில் நுட்பத் துறையில் தனது தயாரிப்புகளான தொழில் நுட்ப சாதனங்கள், ஒலி அமைப்பு, மொபைல் / வாழ்க்கை துணை உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் என தயாரித்து முத்திரை பதித்த இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை சென்னையில் ஃபோரம்" மாலில் திறக்கிறது.

சென்னையில் விற்பனையை துவங்கிய ஜெப்ரானிக்ஸ்.!


"ஆல்வேஸ் அஹெட்" - என்ற கொள்கையை இந்த நிறுவனத்தின் தொடக்கத்தில் இருந்தே முன்னோடியாக கொண்டதின் காரணமாகவே, நிறுவனத்தின் முதல் சில்லறை விற்பனையகத்தை குடியரசு தினத்தில் திறப்பதற்கு காரணமாக இருந்தது. சில்லறை விற்பனை அணுகுமுறை என்பது பயனர்களுக்கு தான் விரும்பும் பொருட்களை தொட்டு பார்த்து பொருட்களின் தன்மையை அறிந்துகொண்டு கொள்முதல் செய்வதற்கும் ஒட்டுமொத்த பிராண்டின் திருப்தியை அதிகரிப்பதற்கும் ஒரு வாய்ப்பை தருகிறது.

விற்பனை துவங்கியது: இந்த நிறுவனம் மக்களின் ஊடே புகுந்து ஒரு பிராண்ட் தர அடையாள மாற்றத்தினை விளைவித்தது மட்டுமின்றி மெதுவாக நவீன உற்பத்திகள் மூலம், முக்கிய பகுதிகளில் தனது கால் தடத்தினை
பதித்தும் வருகிறது.

சென்னையில் விற்பனையை துவங்கிய ஜெப்ரானிக்ஸ்.!

80 விருதுகளை தன்வசம் கொண்டுள்ளது மேலும் ஒவ்வொரு பிரிவிலும் பிரமாண்டமான சாதனை விருதுகளைப் பெற்று மேலும் பிராண்ட் தூதராகவும், செயல்திறன் மற்றும் ஸ்டைல் துறையின் அங்கமாகவும் உள்ள ஹிருத்திக் ரோஷன் போன்ற முன்னணி திரைப்பட நடிகரையும் பெற்றுள்ளது.

துவக்க விழா: தமது புதிய சில்லறை விற்பனையக தொடக்க விழாவில் பேசிய ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் , ராஜேஷ் தோஷி கூறுகையில் - " சென்னையே அனைத்தின் தொடக்கமாகும். இந்த நிறுவனம் தொடக்கம் முதல் ஏறத்தாழ இருபது வருட அனுபவத்திற்கு பிறகு, எங்களின் சொந்த ஊரான சென்னையில் உள்ள "ஃபோரம் மாலில்" எங்களுடைய முதல் சில்லறை விற்பனையகத்தை துவக்கி வைப்பதில் நான் மிகவும் பெருமையடைகிறேன்.

சென்னையில் விற்பனையை துவங்கிய ஜெப்ரானிக்ஸ்.!

வழங்க விரும்புகின்றோம்: அதிக அளவிலான சாதனங்கள் மற்றும் வகைகளைக்கொண்ட நிறுவனம், அதிக மக்களை அடைந்த நிறுவனம், மனதை கவரும் டிசைன்கள் மற்றும் செயல்திறன் போன்ற அதிக அம்சங்களை பெற்றுள்ள போதிலும், மலிவான விலையை கொண்டது. எங்களுடைய அணைத்து வாடிக்கையாளர்களுக்கும், எங்களுடைய அனைத்து ரக பயனாளிகளுக்கு அறிமுகம் இல்லாத ஸ்பீக்கர்கள் மற்றும் மொபைல் உபகரணங்கள் தொட்டு பார்த்து பயனடையும் வாய்ப்பினை வழங்க விரும்புகிறோம்.

டிஜிட்டல் ஹப்: இந்த முயற்சி என்பது பிராண்டின் நம்பகத்தன்மையை மட்டும் வலுப்படுத்துவது இல்லாமல் மறக்கமுடியா ஒரு அனுபவத்தை தருகிறது. மேலும், இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எங்களது நீண்ட கால எங்கள் பிராண்டின் தூண்களாக உள்ள எங்கள் வியாபார கூட்டாளிகளின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
இதுபோன்ற அதிக சில்லறை விற்பனையகங்களை "ஜெப்ரோனிக்ஸ் டிஜிட்டல் ஹப்" என்ற பெயரில் பிரான்சைஸ் திட்டத்தில் அதிக கடைகளை திறந்து எங்கள் பிராண்டின் விழிப்புணர்வை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு திரு. தோஷி கூறினார்.

Best Mobiles in India

English summary
zebronics opens its first retail store chennai : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X