கம்மி விலையில் அட்டகாசமான புரோஜெக்டர் அறிமுகம்: ஜெப்ரானிக்ஸ் அசத்தல்.!

|

ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் சில சாதனங்களை கம்மி விலையில் அறிமுகம் செய்கிறது. இந்நிலையில் ZEB-PixaPlay 11 எனும் பெயரில் புதிய புரொஜெக்டர்-ஐ அறிமுகம் செய்துள்ளது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம். இப்போது இந்த சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ந்த அனுபவத்தை வழங்கும்.

குறிப்பாக ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்த புரொஜெக்டர் ஆனது தியேட்டர் அனுபவத்தை வழங்குகிறது என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்த புரொஜெக்டர் கொண்டு 381cms அளவுள்ள பெரிய திரையில் நீங்கள் பார்க்கும் படம் சிறந்த அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இதில் தெளிவானகாட்சிகள், உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் பிடித்த படங்கள், கேம்கள் மற்றும் தொடர்கள் என பலவற்றை பார்க்கலாம்.

பிளிப்கார்ட் விவோ டர்போ கார்னிவல் விற்பனை: விவோ டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!பிளிப்கார்ட் விவோ டர்போ கார்னிவல் விற்பனை: விவோ டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!

குறைவான எடை கொண்ட

அதேபோல் குறைவான எடை கொண்ட புரொஜெக்டர்-ஐ எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று பயன்படுத்த முடியும். குறிப்பாக ZEB-PixaPlay 11 புரொஜெக்டரில் 720பிக்சல் எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 1080பிக்சல் ஃபுல் எச்டி ஆதரவும் உள்ளது. எனவே இதன் மூலம் நீங்கள் தெளிவான படங்களை பார்க்க முடியும்.

இந்த 10 தப்பான சார்ஜிங் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா? நிலைமை மோசமாவதற்குள் உடனே மாற்றுங்கள்..இந்த 10 தப்பான சார்ஜிங் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா? நிலைமை மோசமாவதற்குள் உடனே மாற்றுங்கள்..

இதற்கு ரிமோட் கண்ட்ரோலும் உள்ளது.

குறிப்பாக இதற்கு ரிமோட் கண்ட்ரோலும் உள்ளது. பின்பு இதில் உள்ள கூடுதல் சிறப்பு என்னவென்றால், இன்பில்ட் ஸ்பீக்கர் உள்ளது. எனவே காட்சிகளுடன்சிறந்த ஆடியோ அனுபவத்தையும் பெற்று மகிழலாம். அதேபோல் ஹோம் தியேட்டர் அனுபவத்திற்கு, நீங்கள் கூடுதல் ஸ்பீக்கரை கூட வாங்கிக்கொள்ளலாம். குறிப்பாக இந்நிறுனவம் பல அட்டகாசமான ஸ்பீக்கர்களை வைத்துள்ளது.

நீங்கள் மர்மமாக இறந்தால் டுவிட்டரை எனக்கு கொடுப்பீர்களா?- டுவிட்டர் பயனருக்கு மஸ்க் சொன்ன நீங்கள் மர்மமாக இறந்தால் டுவிட்டரை எனக்கு கொடுப்பீர்களா?- டுவிட்டர் பயனருக்கு மஸ்க் சொன்ன "ஓகே": பதறிய தாய்!

B-PixaPlay 11 எல்இடி புரொஜெக்டர் ஆனது

ZEB-PixaPlay 11 எல்இடி புரொஜெக்டர் ஆனது யுஎஸ்பி, எச்டிஎம்ஐ, மைக்ரோஎஸ்டி, AV-இன்/AUX அவுட் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. குறிப்பாக யுஎஸ்பி பென் டிரைவ் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டுவசதி உள்ளது, அதேபோல் வீடியோ உள்ளீடு எச்டிஎம்ஐ மூலம்
கொடுக்கப்பட முடியும்.

தம்பி படிச்சது 10-வது தான்: இந்தியா முழுவதும் 1352 சைபர் திருட்டு வழக்குகள்: வசமாக சிக்கியது எப்படி தெரியுமா?தம்பி படிச்சது 10-வது தான்: இந்தியா முழுவதும் 1352 சைபர் திருட்டு வழக்குகள்: வசமாக சிக்கியது எப்படி தெரியுமா?

ள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் இது பவர் பேங்க்குடன் இணக்கமாக இருப்பதால் சந்தையில் உள்ள மற்ற ப்ரொஜெக்டர்களில் இருந்து இது தனித்து நிற்கிறது. குறிப்பாக இந்த புரொஜெக்டர் மலிவு விலையில் கிட்டத்தட்ட பிரீமியம் அனுபவத்தை கொடுக்கும் வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இது சோனி எக்ஸ்பீரியா பாஸ்: இரண்டு ஸ்மார்ட்போன் அறிமுகம்- 4கே ஓஎல்இடி டிஸ்ப்ளே, டிரிபிள் 12எம்பி சோனி கேமரா!இது சோனி எக்ஸ்பீரியா பாஸ்: இரண்டு ஸ்மார்ட்போன் அறிமுகம்- 4கே ஓஎல்இடி டிஸ்ப்ளே, டிரிபிள் 12எம்பி சோனி கேமரா!

புரொஜெக்டர் ஆனது அமேசான்

ZEB-PixaPlay 11 புரொஜெக்டர் ஆனது அமேசான் வலைத்தளத்தில் ரூ.6,299-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் விரைவில் பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Zebronics introduced the low-cost projector: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X