உலகின் மிகச் சிறிய மொபைல் : ஸான்கோ டைனி டி1.!

By Prakash
|

தற்சமயம் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர், ஆனால் சிலர் வடிவத்தில் மிகச்சிறிய மொபைல்போனை பயன்படுத்துவதற்கு ஆர்வமாக உள்ளனர். பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மிகச் சிறிய தொலைபேசியைக் கொண்டுவருவதற்கு பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றனர்.

ஸான்கோ டைனி டி1 இப்போது உலகின் மிகச் சிறிய மொபைல் போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. மேலும் இந்த சிறிய மொபைல்போன் 2ஜி ஆதரவை மட்டும் கொண்டுள்ளது. ஸான்கோ டைனி டி1 மொபைல் போன் ஒரு நாணயத்தைக் காட்டிலும், மனிதனின் கட்டைவிரல் காட்டிலும் மிகச்சிறியது.

ஸான்கோ டைனி டி1:

ஸான்கோ டைனி டி1:

ஸான்கோ டைனி டி1 மொபைல் போனில் 50எஸ்எம்எஸ் மற்றும் 50 அழைப்பு பதிவுகள் வரை சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த மொபைல் போன்.

  13 கிராம் எடை:

13 கிராம் எடை:

ஸான்கோ டைனி டி1 மொபைல் போன் பொதுவாக 46.7x21x12 மிமீ பரிமாணமும் 13கிராம் எடைகொண்டுள்ளது, இந்த மொபைல்
போனில் விளையாட்டு அம்சங்கள் எதுவுமில்லை, ஆனால் எண்ணெழுத்து விசைப்பலகை இவற்றில் இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 0.49-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (32x64)என்ற பிக்சல் தீர்மானம் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது. மேலும் இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும் இந்த சிறிய மொபைல்போன்.

மீடியாடெக்:

மீடியாடெக்:

ஸான்கோ டைனி டி1 மொபைல் போன் பொறுத்தவரை மீடியாடெக் எம்டிகே6261டி செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
மைக் மற்றும் ஒரு ஒலிபெருக்கி இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த சிறிய மொபைல் போன் மாடல் 32எம்பி ரேம் மற்றும் 32எம்பி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் டி1 மொபைல் போன்
ஒற்றை நானோ சிம் மற்றும் 2 ஜி, ப்ளூடூத், மற்றும் மைக்ரோ- யுஎஸ்பி போன்ற இணைப்பு விருப்பங்களை கொண்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

ஸான்கோ டைனி டி1 மொபைல் போனில் 200எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இவற்றின் விலை மதிப்பு ரூ.2,280-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Zanco Tiny T1 Claimed to Be the Worlds Smallest Mobile Phone ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X