யு கருவிகள் நேரடி விற்பனை அறிவிப்பு..!!

Written By:

பண்டிகை கால விற்பனையை முன்னிட்டு ஸ்னாப்டீல் மற்றும் அமேசான் தளங்களில் யு ஸ்மார்ட்போன்கள் நேரடி விற்பனை செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவ் சேல் விற்பனை அக்டோபர் 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த விற்பனையில் யுஃபோரியா மற்றும் யுரேகா ப்ளஸ் கருவிகளை வாடிக்கையாளர்கள் நேரடியாக வாங்கி கொள்ள முடியும்.

யு கருவிகள் நேரடி விற்பனை அறிவிப்பு..!!

மேலும் ஸ்னாப்டீல் தளத்தின் எலெக்ட்ரானிக்ஸ் போனாஸா சேல் விற்பனையில் இந்த கருவிகள் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் நேரடி விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்தாண்டு தீபாவளி சமயங்களில் சுமார் 5 லட்சம் கருவிகளை விற்பனை செய்ய யு திட்டமிட்டிருக்கின்றது.

ரூ.4,999 விலையில் யுனிக் கருவியானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் சிறந்த கிராஃபிக்ஸ் வழங்க அட்ரினோ 306 ஜிபியு மற்றும் 2000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

யு கருவிகள் நேரடி விற்பனை அறிவிப்பு..!!

யு யுஃபோரியா கருவியானது 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தின் ப்ளாஷ் விற்பனை மூலம் இது வரை சுமார் 10 லட்சம் கருவிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கருவியன் விலை ரூ.6,499 என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Read more about:
English summary
YU devices will be available on open sale via Snapdeal and Amazon. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot