வயிறு எரியுதா.? புதிய YouTube ரூல்ஸ்.. பிரபல யூடியூபர்களுக்கு பறக்கும் போலி மெயில்..
யூடியூப்பில் (YouTube) அதிக சப்ஸ்கிரைபர்களை கொண்ட யூடியூபர்களின் வளர்ச்சி பிடிக்காத ஒரு கும்பல் அவர்களிடம் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்குடன் இமெயில் மூலம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட முயற்சித்துள்ளது. உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த யூடியூப்பில் இல்லாத வீடியோக்களே கிடையாது என்றே சொல்ல வேண்டும். ஒருகாலத்தில் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட யூடியூப், இப்போது பல லட்சக்கணக்கானோருக்கு மாத சம்பளம் தரும் முதலாளியாக உருவெடுத்துள்ளது. யார் வேண்டுமானாலும் யூடியூப் மூலம் பணம் சம்பாதிக்க முடிகிறது.

இதற்கு திறமை மட்டுமே போதும், முதலீடு தேவையில்லை. இந்த திறமையை வைத்து பல யூடியூப் சேனல்கள் (YouTube channels) மாதம் பல லட்சம் ரூபாய்களை வருவாயாக ஈட்டிவருவதை நீங்களே பார்த்திருப்பீர்கள். இவ்வாறு பணம் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முதலில் நீங்கள் பதிவிடும் வீடியோக்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற வேண்டும்.
உங்களுக்கு சப்ஸ்கிரைபர்களும் அதிகரிக்க வேண்டும். அதோடு உங்கள் வீடியோக்களை மில்லியன் கணக்கானோர் பார்க்க வேண்டும். இப்படி பல்வேறு படிகள் உள்ளன. இந்த படிகளை கடந்து வருமானம் ஈட்டி வரும் யூடியூபர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இமெயில் ஒன்று அனுப்பப்பட்டு வருகிறது.
அதுவும் யூடியூப் பெயரில் வருவதால் யூடியூபர்கள் சற்று அதிர்ச்சியடைந்து உள்ளனர். இந்த மெயிலில், யூடியூப்பின் ரூல்ஸ் மற்றும் பாலிசிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, புதிய மானிடைசேசன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளை ( monetization rules and policies ) தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தை கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆவணத்தை மதிப்பாய்வு செய்துவிட்டு, அதுதொடர்பாக பதில் நீங்கள் அளிக்க வேண்டும். இந்த பதிலை 7 நாள்களுக்குள் அளிக்க வேண்டும். அப்படியில்லை என்றால் உங்களது யூடியூப் சேனல் தடை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து யூடியூப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், இதுவொரு ஆன்லைன் மோசடி கும்பலின் போலியான இமெயிலாகும். ஆகவே, யூடியூபர்கள் இதுபோன்ற மெயில் வந்தால், அதை திறக்க வேண்டாம். அப்படி திறந்தால் உங்களின் தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. அதோடு உங்களின் பணமும் திருடப்படலாம். ஆகவே எச்சரிக்கை உடன் இருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியான மெயில் எப்படி இருக்கும்? : இந்த போலியான மெயில் [email protected] என்னும் பெயரில் வருகிறது. அதில் YouTube Policy Change எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆகவே இதுபோன்ற இமெயில் யூடியூபர்களுக்கு வந்தால், அதை தவிர்த்துவிடுங்கள். அதற்கு எந்த வகையிலும் பதிலளிக்காதீர்கள். இந்த விவகாரம் தொடர்பாக யூடியூப் தொழில்நுட்ப குழு ஆய்வு செய்துவருகிறது.
யூடியூப் வீடியோ மூலம் சம்பாதிக்கும் யூடியூபர்களுக்கு ஆன்லைன் மூலமே பணம் அனுப்பப்படுகிறது. இந்த பணம் உரியவர்களிடம் சென்று சேர பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை யூடியூப் செய்துள்ளது. இதனால் அதன் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் அடிக்கடி சில மாற்றங்களை கொண்டுவருகிறது.
இந்த மாற்றங்களை யூடியூபர்களுக்கு தெரிவிக்க இமெயில் அனுப்பப்படுகிறது. இதனை பயன்படுத்திக்கொண்டு ஆன்லைன் மோசடி கும்பல் போலி இமெயில் அனுப்பியிருக்கிறது. இந்த மெயில் பிரபல யூடியூபர்கள் பலருக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications