Home
News

(வீடியோ) அதிவேகத்தில் காரை மோதிய யூடியூபர்.. iPhone 14 சோதனை செய்ய நூதன முயற்சி!

பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு புது மாடல்களிலும் புதுமைகளை புகுத்துவது வழக்கம்.

அதன்படி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 14 சீரிஸ்களில் பல்வேறு புது அம்சங்களை புகுத்தி இருந்தது. அதில் ஒன்று செயற்கைக்கோள் இணைப்பு. இந்த அம்சம் குறித்து அனைவரும் அறிந்ததே.

இதைவிட நிறுவனம் ஐபோன் 14 மாடலில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை புகுத்தி இருக்கிறது.

விபத்தில் உதவும் ஐபோன் 14..

விபத்தில் உதவும் ஐபோன் 14..

ஆப்பிள் ஐபோன் 14 மாடல்களில் நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை புகுத்தி இருக்கிறது. அதில் ஒன்று தான் விபத்து கண்டறிதல் அம்சம்.

பெயர் குறிப்பிடுவது போல், இந்த விபத்து கண்டறிதல் அம்சமானது நீங்கள் கடுமையான கார் விபத்தில் சிக்கியிருக்கும் போது உங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஐபோன் 14 உங்களுடன் இருக்கும்போது நீங்கள் விபத்துக்கு உள்ளானால் தானாக கண்டறிந்து அவசர சேவைகளுக்கு டயல் செய்யும்.

லைவ் சோதனை நடத்திய யூடியூபர்..

லைவ் சோதனை நடத்திய யூடியூபர்..

அந்த செயல்திறன் இருக்கிறது, அப்படி செயல்படும், இப்படி செயல்படும் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். நம்பியும் வாங்குவோம். ஆனால் அதை யாரும் அவ்வளவு துல்லியமாக சோதித்துப் பார்த்திருக்க மாட்டோம்.

மேலோட்டமாக சோதித்து பார்த்து ஓஹோ இது இப்படி தான் செயல்படுமா என்று யூகித்துக் கொள்வோம்.

ஆனால் இங்கு ஒரு தரப்பினர் நேரடியாக விபத்து ஏற்படுத்தி ஐபோன் 14 இன் அம்சத்தை சோதனை செய்திருக்கின்றனர்.

விபத்து கண்டறிதல் அம்சம்..

விபத்து கண்டறிதல் அம்சம்..

ஆப்பிள் ஐபோன் 14 இல் விபத்து கண்டறிதல் அம்சம் இருக்கிறது என நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து யூடியூபர் ஒருவர் ஆப்பிள் விபத்து கண்டறிதல் அம்சத்தை நேரடியாக விபத்து ஏற்படுத்தி சோதித்திருக்கிறார்.

அப்படி அவர் என்ன செய்தார், அதில் என்ன ரிசல்ட் கிடைத்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

யூடியூபர் நடத்திய சோதனை..

யூடியூபர் நடத்திய சோதனை..

டெக்ராக்ஸ் என்ற யூடியூபர் இந்த சோதனை வீடியோவை தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் ஐபோன் 14 ப்ரோ கார் இருக்கையின் ஹெட்ரெஸ்ட் உடன் இணைக்கப்பட்ட நிலையில் உள்ளது.

ஆள் இல்லாமல் காரை அதிவேகத்தில் இயக்கி ஆளில்லாத மற்றொரு கார் மீது மோதச் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையின் ஆரம்பத்தில் ஐபோன் 14 சில தோல்விகளை சந்தித்தாலும் அடுத்தடுத்த சோதனையில் தொடர் வெற்றியை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

TechRax என்ற யூடியூபர்..

TechRax என்ற யூடியூபர்..

விபத்து ஏற்பட்ட பத்து வினாடிகளில் இந்த விபத்து கண்டறிதல் அம்சம் செயல்பட்டதாக TechRax தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து முயற்சிகளிலும் சரியாக 10 வினாடிகளில் இந்த அம்சம் செயல்பட்டிருக்கிறது. வெட்டவெளியில் ஆள் இல்லாத கார் ஒன்றை வேகமாக இயக்கி மற்றொரு கார் மீது மோதச் செய்து வீடியோ எடுத்துள்ளனர்.


இதன்மூலம் இந்த அம்சம் எப்படி செயல்படுகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.

10 வினாடி கவுண்ட்டவுன்..

10 வினாடி கவுண்ட்டவுன்..

கார் விபத்துக்குள்ளானதை கண்டறிந்த ஐபோன் 14 பத்து வினாடி கவுண்ட்டவுனைத் தொடங்குகிறது. இந்த 10 வினாடிக்குள் உரிமையாளர் கவுண்ட்டவுனை ரத்து செய்ய வேண்டும். அப்படி ரத்து செய்யாதபட்சத்தில் அது தானாகவே அவசர சேவைகளை அழைக்கத் தொடங்குகிறது.

இதன்மூலம் உங்களுக்கான உதவி தானாக கிடைக்கத் தொடங்குகிறது.

நேரடியாக சோதனை செய்து விளக்கிய யூடியூபர்..

2019 ஆம் ஆண்டு வெளியான பிக்சல் போன்களில் இதே போன்ற அம்சம் இடம்பெற்றிருந்தது. இந்த அம்சத்தின் செயல்முறை, பாதுகாப்புத் தன்மை குறித்து எல்லாம் படித்திருப்போம். ஆனால் இங்கு டெக்ரேக்ஸ் என்ற யூடியூபர் ஐபோன் 14 இன் விபத்து கண்டறிதல் அம்சத்தை நேரடியாக சோதித்து பார்த்து எப்படி செயல்படும் என்பதை விளக்கி உள்ளார்.

iPhone 14 விபத்து கண்டறிதல் அம்சம்

iPhone 14 விபத்து கண்டறிதல் அம்சம்

ஆப்பிள் இந்த விபத்து கண்டறிதல் அம்சம் குறித்து கூறுகையில், இந்த அம்சத்தின் தேவை யாருக்கும் இருக்கக்கூடாது என்பது நம்பிக்கை. கார் விபத்தில் சிக்குவதற்கு யாரும் திட்டமிடுவதில்லை.

இருப்பினும் நீங்கள் மயக்கமடைந்தாலோ அல்லது ஐபோனை அணுக முடியாத நிலையில் இருந்தாலோ இந்த அம்சம் உங்கள் உயிரை காப்பாற்ற உதவும் என ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Courtesy: TechRax

More from GizBot

Best Mobiles in India

English summary
YouTuber conducts real car crash to test iPhone 14's Crash detection feature
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X