Home
News

பலூனில் இதையெல்லாம் கட்டி பறக்க விடுவாங்களா? யூடியூபர் கைது.! வைரல் வீடியோ.!

உலகின் மிகப்பெரிய வீடியோ ஷேர் சேவை தளமான ஒரே தளம் யூடியூப் மட்டும் தான் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. நம்மில் பெரும்பாலோனோர் யூடியூப் தளத்தை அவர்-அவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வலைத்தளம் அல்லது ஸ்மார்ட்போன் பயன்பாடு மூலம் தினசரி இந்த வீடியோ சேவையை பயன்படுத்தி வருகிறோம்.

இதைப் பெரும்பாலானோர்

அடிப்படையில் இதைப் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தினாலும் கூட, யூடியூப் தளத்தில் நாம் புதிதாகக் கற்றுக்கொள்ள ஏராளமான பயனுள்ள தகவல்களும் உள்ளது. அதேபோல் இந்த யூடியூப் தளத்தில் வருமானம் கிடைக்கும் என்பதால் பல்வேறு மக்கள் தினசரி புதிய புதிய வீடியோக்களை வெளியிடுகின்றனர்.

 GauravZone என்ற பெயரில்

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த 32 வயதாகும் கவுரவ் என்ற இளைஞர் GauravZone என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். குறிப்பாக 40 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்ட இவருடை சேனலில் அண்மையில் ஒரு சர்சை வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

ண்மையில் தனது செல்லப்பிரானியை

கவுரவ் அண்மையில் தனது செல்லப்பிரானியை பறக்க வைக்கும் வீடியோவை பதிவேற்றியதால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு கடும் எதிரப்பு கிளம்பியது. அத்துடன் கைது நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுரவ் வளர்த்து வரும் "டாலர்" என்ற நாய்க் குட்டி மீது சில ஹைட்ரஜன் பலூன்களை கட்டி அதனை பறக்க வைத்திருக்கிறார். குறிப்பாக பஞ்ச்ஷீல் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் கார் மீது அமர்ந்துள்ள கவுரவ் அவர் வளர்த்து வரும் டாலர் என்ற நாய்குட்டியின் மீது சில ஹைட்ரஜன் பலூன்களை கட்டி அதனை கீழ்தளத்தில் இருந்து பறக்க விடுகிறார்.

பின்பு அதே அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் இருக்கும் பால்கனி வரை அந்த நாய் காற்றில் பறக்கிறது. மேலும் அருகில் இருந்த கவுரவின் தாயார் நாய்க்குட்டி பறப்பதால் மகிழ்ச்சியில் கை தட்டி ஆர்பரிக்கிறார்.

இந்த வீடியோவை

கடந்த மே 21-ம் தேதி கவுரவ் இந்த வீடியோவை தனது சேனலில் வெளியிட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. பின்பு விலங்குகள் நல அமைப்புகளும் கவுரவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதிக எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கவுரவ் தனது செயலுக்கு மன்னிப்பு கொரி வீடியோவும் வெளியிட்டார்.

மீது மால்வியா

இருந்தபோதிலும் People for Animal (PFA) என்ற விலங்குகள் நல அமைப்பினர் கவுரவ் மற்றும் அவருடைய தாயார் மீதுமால்வியா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். எனவே கவுரவ் மீது விலங்குகள் கொடுமைச்சட்டத்தின் கீழ்வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
YouTuber arrested for tying a puppy to a hydrogen balloon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X