யூடியூப் வீடியோவில் 10,000 பார்வையாளர்கள் இல்லையா? அப்ப இனிமேல் விளம்பரம் கிடையாது

By Siva
|

வீடியோ இணையதளங்களில் உலகின் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் யூடியூப் இணையதளத்தில் வீடியோவை பதிவேற்றி பலர் அதில் கிடைக்கும் விளம்பரம் மூலம் வருமானம் பார்த்து வந்த நிலையில் தற்போது யூடியூப் நிறுவனம் விளம்பரம் வெளியிடுவதில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூப் வீடியோவில் 10,000 பார்வையாளர்கள் இல்லையா? அப்ப இனிமேல் விளம்ப

இதன்படி 10000 பார்வையாளர்களுக்கு குறைவான பார்வையாளர்களை பெற்று வரும் வீடியோக்களுக்கு இனி விளம்பரத்தை நிறுத்த யூடியூப் முடிவு செய்தது. இதனால் காப்பி செய்த வீடியோக்கள் மூலம் வருமானம் பார்த்தவர்களை முற்றிலும் ஒதுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருசில நிறுவனங்கள் தங்கள் பிராண்டை விளம்பரப்படுத்துவதற்காக வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றி வருவதாகவும், அந்த வகை வீடியோக்களால் வாடிக்கையாளர்கள் வெறுப்பு அடைவதாகவும், இதுபோன்ற விளம்பர யுக்தி மற்றும் பிறருடைய வீடியோவை காப்பி செய்து பதிவு செய்யப்படும் வீடியோக்களை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து யூடியூப் நிறுவனத்தின் உயரதிகாரிகளில் ஒருவரான ஏரியல் பார்டின் என்பவர் கூறியபோது, 'இந்த நடவடிக்கையின் மூலம் தகுதியான சேனல்கள் மட்டுமே யூடியூப்பில் அனுமதிக்கப்படும் நிலை வரும் என்றும், அந்த வகையான சேனல்கள் யூடியூபின் சட்டதிட்டங்களை சரியாக மதித்தாலே போதும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கூகுள் ப்ளே மியூசிக்: வெறும் ரூ.89-ல் மில்லியன் கணக்கான பாட்டு கேட்க வேண்டுமா?

மேலும் ஏரியல் இதுகுறித்து கூறியபோது, யூடியூபில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அந்த குழு யூடியூபில் பதிவாகும் வீடியோக்களில் எந்த வீடியோ 10000 பார்வையாளர்களுக்கும் மேல் பெறுகின்றதோ, அந்த வீடியோக்களை ஆய்வு செய்து, அந்த வீடியோக்கள் யூடியூபின் சட்டதிட்டங்களை சரியாக பின்பற்றுகின்றதா என்பதை ஆய்வு செய்த பின்னரே அந்த வீடியோக்களில் விளம்பரங்கள் அனுமதிக்கப்படும் என்று கூறினார்.

இந்த புதிய நடவடிக்கையால் சட்டதிட்டங்களை ஒழுங்காக மதிக்கும் உண்மையான கிரியேட்டர்கள் பயன்பெறும் வகையில் அமையும் என்றும், சேனல்களும் தரம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த நடவடிக்கை விளம்பரதாரர்களுக்கும், வீடியோவை பதிவேற்றுபவர்களுக்கும் இடையிலான ஒரு நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னரே கூகுள் நிறுவனம் யூடியூபில் பதிவு செய்யப்படும் வீடியோக்களுக்கு புதிய விதிகளை விதித்தது.. இந்த விதிகள் அமலுக்கு வந்தவுடன் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவு செய்வோர்களின் எண்ணிக்கை பலமடங்கு குறைந்தது. தற்போது விளம்பரம் குறித்த புதிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதால் யூடியூபில் இனிதேவையில்லாத சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கு இடமில்லாமல் போகும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
YouTube has come up with a major tweak to its ad strategy in order to curb content stealing. YouTube will no more place ads on those channels that have less than 10,000 views. This way the service will be able to make sure channels adhere to the preset rules and policies.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X