Home
News

அடி தூள்: அடுத்த மாதம் முதல் யூடியூப்பில் "அந்த" தொல்லை இருக்காது.!

யூடியூப் தளத்தை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஒரு விஷயம் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்படுவதை விட யூடியூப் போன்ற சமூகவலைதளங்களில் பதிவிட்டால் அது அதிக பார்வையாளர்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அதேபோல் இந்த யூடியூப் சேனல் மூலம் பணம் ஈட்டி பிரபலமடைந்தவர்கள் ஏராளம்.

அதேபோல் யூடியூப் தளத்தில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு புதிய அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. ஆனாலும் முன்பு ஏதாவது ஒரு யூடியூப் வீடியோக்களில் விளம்பரங்கள் பிளே ஆன நிலையில் தற்போது அனைத்து வீடியோக்களிலும் 2 முதல் 6 விளம்பரங்கள் வரை ஒளிபரப்பாகி வருகின்றன.

 அடி தூள்: அடுத்த மாதம் முதல் யூடியூப்பில்

பின்பு விளம்பரங்களின் தொல்லை இல்லாமல் யூடியூப் வீடியோக்களை கண்டு ரசிக்க விரும்பும் பயனர்களுக்கு யூடியூப் பிரீமியம் சந்தாவைக் கொண்டுவந்தது கூகுள். அதாவது இந்த சந்தா திட்டத்தின் கீழ் பயனர்கள் ரூ.129-ஐ செலுத்துவதன் மூலம் விளம்பரமில்லா வீடியோக்கள், ஆஃப்லைனில் வீடியோவை டவுன்லோடு செய்து பார்ப்பது போன்ற வசதிகளை வழங்கி வருகிறது அந்நிறுவனம்.

இந்த நிலையில் யூடியூப் வீடியோவில் வரும் ழஎநசடயல யனள என்ற விளம்பர ஆப்ஷனை அடுத்த மாதம் முதல் நீக்க உள்ளது கூகுள் நிறுவனம். அதாவது யூடியூப்பில் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் போது வீடியோவின் கீழ்பகுதி அல்லது மேல்பகுதியிலோ செவ்வக வடிவில் சில விளம்பரங்கள் வந்து தொல்லை தரும். குறிப்பாக பயனர்களுக்கு அசவுகரியத்தைக் கொடுப்பதாகப் பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.

 அடி தூள்: அடுத்த மாதம் முதல் யூடியூப்பில்

எனவே இதனை ஒப்புக்கொண்டுள்ள யூடியூப் வரும் ஏப்ரல் 6 முதல் அந்த விளம்பரங்கள் வராது என்று தெரிவித்துள்ளது. அதேபோல் ஏற்கனவே போன்களில் இந்த விளம்பரத்தை நீக்கியுள்ள நிலையில் தற்போது கம்யூட்டர் வெர்ஷனிலும் நீக்கி வருகிறது. ஆனாலும் நிறுவனத்திற்கு வருமானத்தை தரும் விளம்பரங்களை நீக்குகிறார்களா என ஒரு பக்கம் இருந்தாலும், அந்த விளம்பரத்தை விரைவில் வேறு வடிவில் கொண்டு வந்து யூடியூப் நிச்சயம் காசு பார்க்கும் என்பதே உண்மை.

இணையம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவுக்குக் குறிப்பிடத்தக்க இடம் இருக்கிறது. சமூகவலைத்தள பயன்பாட்டில் பிரதானமாக இருப்பது யூடியூப் தான். மேலும் இப்போது யூடியூப்-ல் சேனல் தொடங்கும் வழிமுறைகளை விரிவாகப் பார்க்கலாம்.

 அடி தூள்: அடுத்த மாதம் முதல் யூடியூப்பில்

வழிமுறை-1

யூடியூப்பில் சேனல் தொடங்குவதற்கு பணம் எதுவும் தேவையில்லை. உங்கள் மெயில் ஐடி மூலமாகவே சேனல் தொடங்கலாம். யூடியூப்பில் உங்கள் மெயில் ஐடி கொண்டு முதலில் லாக்-இன் செய்ய வேண்டும். பின் உங்கள் மெயில்ஐடி ஐகானுக்கு அருகில் மெயில் ஐடி புகைப்படத்தோடு இருக்கும் வட்ட வடிவ ஐகானை கிளிக் செய்யவும். இதில் Create Your Channel என்று காண்பிக்கும்.

வழிமுறை-2

இதை கிளிக் செய்தவுடன் உங்கள் சேனலுக்கு பெயரை வைக்க வேண்டும். நீங்கள் எந்த மாதிரியான வீடியோ பதிவேற்ற திட்டமிட்டுள்ளீர்களோ அதற்கு ஏற்ப பெயரை வைப்பது சிறந்தது. பின் மொபைல் எண்ணை பதிவிடவும். அந்த எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். இதன் கீழே காட்டப்பட்டும் டெக்ஸ்ட் மெசேஜ் என்ற ஆப்ஷனை டிக் செய்து கொள்வது சிறந்தது. பின் கிரியேட் என்று கொடுத்த உடன் சேனல் கிரியேட் ஆகி விடும்.

 அடி தூள்: அடுத்த மாதம் முதல் யூடியூப்பில்

வழிமுறை-3

யூடியூப்பில் சேனலை உருவாக்கும் வழிமுறை இவ்வளவுதானா என்று சிந்திக்கலாம். சேனலை உருவாக்குவது என்பது எளிது அதை பிரபலமடைய வைப்பது தான் சற்று சிரமம். பொதுவாக யூடியூப்பில் பணம் ஈட்டும் நோக்கத்தோடு சேனலை உருவாக்கி வளர்ந்தவர்களை விட பிரபலமடைய வேண்டும் என்று சேனலை உருவாக்கி வளர்ந்தவர்களே அதிகம்.

photo courtesy: au.pcmag.com

More from GizBot

Best Mobiles in India

English summary
YouTube will remove the overlay ads option in April : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X