தெரியுமா சேதி-வந்தாச்சு யூட்யூப் டிவி.!
யூட்யூப் டிவி எனும் பெயரில் தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கவிருப்பதாக யூட்யூப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி வீடியோ இணையத்தளமான யூட்யூப் கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.இது உலகின் அதிகப்படியான விடீயோக்களைக் கொண்டிருக்கிற இணைய தளமுமாகும்.வாடிக்கையாளர்கள் தமக்கென தனியான சேனல்களை உருவாக்கி அதன் வழியாக தமது விடீயோக்களை பிறரிடத்தே பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிப்பதோடு மட்டுமன்றி,பிறரின் விடீயோக்களை பகிரவும் வாய்ப்பளிக்கிறது.
இன்றைய உலகின் இணைய வளர்ச்சி காரணமாக அதிகப்படியான புதுப்புது அம்சங்களை தனது வலைத்தளத்தில் சேர்த்தும்,புதிய முயற்சிகளினை மேற்கொண்டும் வருகிறது.அதனடிப்படையில்,சில காலமாகவே யூட்யூப் ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சி சேவையினை உருவாக்கி வழங்கவிருப்பதாக பேச்சு நிலவிக்கொண்டிருந்த சூழலில் தற்போது யூட்யூப் டிவி என்கிற பெயரில் தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவையினை வழங்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதுகுறித்த தகவல்கள் கீழே.

யூட்யூப்:
14 பிப்ரவரி 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவினைத் தலைமையிடமாகக்கொண்டு துவங்கப்பட்ட யூட்யூப் வீடியோ வலைத்தளமானது உலகின் அதிகப்படியான தகவல்களைக் கொண்டிருப்பதும்,முன்னணி இணைய உலவிகளுள் ஒன்றுமான கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.சற்றேறக்குறைய யூட்யூப்பில் 6.1 மில்லியனுக்கும் அதிகமான விடியோக்கள் இருக்குமென கருதப்படுகிறது.

பயனாளர்களுக்கான சேனல்:
உலகில் அதிகப்படியான நிகழ்படங்களை கொண்டிருக்கிற இணையத்தளம் என்பதனைத் தவிர்த்து பயனாளர்கள் தங்களுக்கென்று தனியாக சேனல் ஒன்றினை துவக்கி அதன் வழியாக தமது விடீயோக்களை யூட்யூப் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் அதனை பிறருக்கு பகிர்ந்திடவும் இயலும்.இத்தகைய சிறப்பம்சங்களை யூட்யூப் அதிகப்படியான பயனாளர்களைக் கொண்டிருக்கிறது.

காட்சி ஊடகங்கள்:
இன்றைய காலகட்டத்தில் இணையத்தின் பெருவளர்ச்சியினுக்கு பிறகு அச்சு ஊடகங்களும்,காட்சி ஊடகங்களுமே தமக்கான இணையத்தளங்களை உருவாக்கிடத் துவங்கின.முன்றைய காலம் போல் அல்லாமல் உலகின் எங்கோ ஓர் மூலையில் நடைபெறுகிற நடைபெற்ற நிகழ்வினை அடுத்த நொடியில் உலகின் எந்த மூலையிலிருந்து தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புகளை இணையமும் யூட்யூப் போன்ற சமூகவலைத்தளங்களும் செய்கின்றன.அதன் காரணமாகத்தன் காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் தமக்கான பக்கங்களை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி அதன் வழியே மக்களை விரைவாகச் சென்றடைகின்றன.

யூட்யூப் டிவி:
மேற்கண்டவாறு தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் தமது வலைத்தளத்தில் தமக்கான பக்கங்களை துவக்கி அதன் வழியாக செய்திகள் உள்ளிட்ட அத்துணை நிகழ்ச்சிகளையும் வழங்குகையில்,நாமே டிவி சேனல்களின் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பினால் என்னவென்ற யூட்யூப் நிறுவனத்தின் முடிவுதான் யூட்யூப் டிவி.இதன் மூலம் பயனாளர்கள் அனைத்து பிரபல சேனல்களின் நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பினை நேரடியாக காண இயலும்.

மாதம் 35 டாலர்கள்:
யூட்யூப் டிவியின் மூலமாக அனைத்து பிரபல தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை நேரலையில் காண இயலும்.முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'யூட்யூப் டிவி' மாதம் 35 டாலர்கள் (ரூ.2,340) செலுத்தி இந்த சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் படிக்க
கூகுள் டிஜிட்டல் அசிஸ்டன்ட்-இனி எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும்.!


Click it and Unblock the Notifications