செப்டம்பர் 18-முதல்: யூட்யூபில் இந்த வசதி நீக்கப் படுகிறது.! ஏன்?
கூகுள் நிறுவனத்திற்கு கீழ் செயல்படும் யூட்யூப் தளமானது உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும், குறிப்பாக பல்வேறு மக்களின் தினசரி அதிக நேர பொழுதுபோக்காக இந்த யூட்யூப் செயலி பயன்படுகிறது.

சில அம்சங்களை நீக்கியும் வருகிறது ..
குறிப்பாக வீடியோக்களுக்கு வேண்டி செயல்படும் இந்த யூட்யூப் தளமானது மேம்படுத்தப்பட்ட பல்வேறு அம்சங்களை கொண்டும் வருகிறது, அவ்வப்போது சில அம்சங்களை நீக்கியும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 18-ம் தேதி முதல்
அதன்படி யூட்யூப் நிறுவனம் சார்பில் இப்போது புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால், குறிப்பிட்ட அம்சம் ஆனது வருகிற செப்டம்பர் 18-ம் தேதி முதல் அணு கிடைக்காது என்றும், அதை பார்க்கவும் முடியாதும்
என்று தெரிவித்துள்ளது.

மெசேஜ் (Messages) அம்சம்
யூட்யூப் நிறுவனம் நீக்கக் கூடிய அந்த வசதி என்னவென்றால், மெசேஜ் (Messages) அம்சம் ஆகும், இது யூட்யூப் சேனலின் இன்பாக்ஸை திறந்தால், அங்கே உங்களுக்கான ஒரு நோட்டிபிக்கேஷன் காட்சிப்படும். இப்போது
கூறிய அறிவிப்பின் படி மெசேஜ அம்சம் செப்டம்பர் 18-ம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வரவேற்ப்பு இல்லாத காரணத்தால் ..
யூட்யூப் நீக்கவுள்ள இந்த மேசேஜிங் அம்சம் பொறுத்தவரை சேனல்களில் இருந்து வீடியோக்களை பகிரவும், பின்பு அதுபற்றி பேசுவதற்கும் அல்லது விவாதிப்பதற்குமான ஒரு சிறந்த வசதியாக இருக்கிறது. இருந்தபோதிலும் இந்த வசதி தனிப்பட்ட மற்றும் க்ரூப் சாட்டிங்கையும் அதரிக்கிறது. இருந்தபோதிலும் இந்த வசதிக்கு மக்களிடையே அதிக வரவேற்ப்பு இல்லாத காரணத்தால் நீக்கப்படுகிறது.

கமெண்ட்ஸ் போஸ்ட் மற்றும் ஸ்டோரீஸ்
குறிப்பாக யூட்யூப் வாடிக்கையாளர்கள் தங்களது கமெண்ட்ஸ் போஸ்ட் மற்றும் ஸ்டோரீஸ் போன்றவைகளை பொதுவெளியில் நிகழ்த்த ஊக்குவிக்கவுள்ளது, எனவே இந்த மெசேஜ் அம்சம் நீக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தகக்து.

ஸ்டோரீஸ் போன்ற அம்சத்தை சேரக்கும்
யூட்யூப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், விரைவில் இந்நிறுவனம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் ஸ்டோரீஸ் போன்ற அம்சத்தை சேரக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications