யுடியூப்பில் ஒலிம்பிக் நேரடி ஒளிபரப்பு!

வரும் ஜூலை 27ந் தேதி முதல் ஆகஸ்ட் 12ந் தேதி வரை லண்டனில் ஒலிம்பிக் திருவிழா கோலகலமாக நடைபெறவிருக்கிறது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அவர்களில் சிலர் நேரடியாகவே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று போட்டிகளை கண்டு ரசிப்பார்கள். ஆனால் பலர் டிவிகளில்தான் ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டு ரசிப்பார்கள். ஒலிம்பிக் ரசிகர்களின் வசதிக்காக உலக ஏராளமான டிவி சேனல்கள் ஒலிம்பிக் போட்டிகளை ஒலிபரப்ப தயாராகி வருகின்றன.
அந்த வகையில் ரசிகர்களின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட ஐஒசி யுடியூப் சேனலும் தனது ரசிகர்களுக்காக ஒலிம்பிக் போட்டிகளை ஒலிபரப்பு முடிவு செய்திருக்கிறது. அதுவும் ஒலிம்பிக் போட்டிகளை எச்டியில் ஒலிபரப்ப இருக்கிறது. இதன் மூலம் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க ரசிகர்கள் இந்த ஒலிம்பிக் போட்டிகளை யுடியூப்பில் இலவசமாக கண்டு ரசிக்கலாம்.
குறிப்பாக இணையதள வசதியுள்ள சாதனங்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் யுடியூப் வசதியுள்ள சாதனங்கள் மூலமாக ஒலிம்பிக் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை ஒலிம்பிக் ரசிகர்கள் ரசிக்கலாம்.
ஆசியாவி்ல் உள்ள இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து போன்ற 22 பகுதிகளில் ஒலிம்பிக் போர்டிகளை ஒலிபரப்பும் உரிமையை யுடியூப் வழங்கி இருக்கிறது. அதுபோல் ஆப்பிரிக்காவில் உள்ள அங்கோலா, கானா மற்றும் நைஜீரியா போன்ற 42 பகுதிகளில் ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை வழங்கி இருக்கிறது. அதனால் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க ஒலிம்பிக் ரசிகர்கள் ஒலிம்பிக் போட்டிகளின் நேரடி நிகழ்வுகளை யுடியூப்பில் பார்த்து மகிழ முடியும்.
மேலும் லண்டன் நேரப்படி காலை 9 முதல் இரவு 11 மணி வரை இந்த நேரடி ஒளிபரப்பு இருக்கும். அதுபோல் 24 மணி நேர ஒலிம்பிக் செய்திகளையும் யுடியூப் ஒளிபரப்பு இருக்கிறது. அதன் மூலம் ஒலிம்பிக்கின் அனல் பறக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications