யூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: சில வீடியோக்களுக்கு இன்று முதல் தடை.!

|

யூடியூப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்த வண்ணம் உள்ளது,அதன்படி இன்று அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் இனவெறி மற்றும் பாகுபாடுகளை தூண்டும் வீடியோக்களை தடைசெய்யப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெறுப்பு பேச்சுகளுக்கு எதிரான கொள்கை

வெறுப்பு பேச்சுகளுக்கு எதிரான கொள்கை

குறிப்பாக யூடியூப் நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிரான கொள்கையை எப்போதுமே கொண்டுடிருப்பதாக அந்த நிறுவனம் சார்பில் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சமூகவலைதளத்தில்  ஆதரவு

சமூகவலைதளத்தில் ஆதரவு

மேலும் தற்போது பாகுபாட்டை ஊக்குவிப்பதற்காக ஒரு இனம் உயர்ந்தது என சித்தரிப்பது போன்ற வீடியோக்களை தடை செய்ய முடிவெடுத்திருப்பதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது, யூடியூப் நிறுவனத்தின் இந்த கருத்துக்கு பல்வேறு மக்களும் சமூகவலைதளத்தில் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

சில மாதங்கள் ஆகலாம்

சில மாதங்கள் ஆகலாம்

இந்த புதியை கொள்கையை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ள யூடியூப் நிறுவனம் அது படிப்படியாக முழுமையாக அமல்படுத்தப்பட சில மாதங்கள் ஆகலாம் என தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தில் மசூதி ஒன்றில் நடைபெற்ற தாக்குதல்

நியூசிலாந்தில் மசூதி ஒன்றில் நடைபெற்ற தாக்குதல்

பின்பு நியூசிலாந்தில் மசூதி ஒன்றில் நடைபெற்ற தாக்குதல் யூடியூப்-ல் நேரலையாக ஒளிபரபப்பானதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என உலகத் தலைவர்க் குரல் கொடுத்தனர், அதை தொடர்ந்துதான் சமூகவலைதளங்கள் தாமாக முன்வந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

Best Mobiles in India

English summary
YouTube to ban hateful videos all over the world : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X