Home
News

யூடியூபர்களுக்கு ஷாக் கொடுத்த புதிய விதிகள்.. Monetization பெற இனி கடும் சவால்! முழு விவரம் இதோ..

இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் முன்னணி ஆன்லைன் வீடியோ தளமாக யூடியூப் உள்ளது. பொழுதுபோக்கு, கல்வி, செய்தி, தொழில்நுட்பம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த வீடியோக்களை மக்கள் YouTube மூலம் எளிதாகப் பார்க்க முடிகிறது. அதேபோல், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது கருத்துகள், தகவல்கள் மற்றும் திறமைகளை உலகளவில் பகிர்ந்து கொள்ளவும் YouTube முக்கியமான தளமாக விளங்குகிறது.

இந்நிலையில் யூடியூப் நிறுவனம் தனது கண்டென்ட் கிரியேட்டர்களுக்கான YouTube Partner Program தகுதி விதிகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. இந்த புதிய விதிமுறைகள் பிப்ரவரி 1, 2027 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, விளம்பரங்கள் மற்றும் YouTube Premium மூலம் வருமானம் பெற விரும்பும் புதிய படைப்பாளிகள், முன்பை விட கடுமையான தகுதி இலக்குகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.

யூடியூபர்களுக்கு ஷாக் கொடுத்த புதிய விதிகள்..

புதிய விதிமுறைகளின்படி, புதிய படைப்பாளிகள் கடந்த 12 மாதங்களில் குறைந்தது 8,000 மணிநேரப் விவ்ஸ் (Watch hours) பெற்றிருக்க வேண்டும் அல்லது 90 நாட்களில் 20 மில்லியன் ஷாட்ஸ் (Shorts) விவ்ஸ் கடந்திருக்க வேண்டும். குறிப்பாக இவை இரண்டும் தற்போதுள்ள 4,000 மணிநேரப் விவ்ஸ் மற்றும் 10 மில்லியன் ஷாட்ஸ் விவ்ஸ் என்ற அளவுகோல்களை விட இரண்டு மடங்காகும்.

அதேபோல் குறைந்தபட்சம் 1,000 சந்தாதாரர்கள் (Subscribers) இருக்க வேண்டும் என்ற விதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் ஷாட்ஸ் வீடியோக்கள் மூலம் தொடர்ச்சியாக விளம்பர வருமானம் பெறுவதற்கு அவர்கள் 90 நாட்களில் 10 மில்லியன் ஷாட்ஸ் விவ்ஸ் தக்கவைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒருவேளை இந்த இலக்கை தவறவிடும் சேனல்கள் Long-form videos மூலம் தொடர்ந்து பணம் சம்பாதிக்கலாம். மீண்டும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஷாட்ஸ் வருமான பகிர்வு தானாகவே தொடங்கிவிடும். ஷாட்ஸ் வீடியோக்களுக்கான தகுதிகளை கடினமாக்கினாலும் சிறிய சேனல்கள் பணம் ஈட்ட யூடியூப் நிறுவனம் மாற்று வழிகளைக் கொண்டுவர உறுதி அளித்துள்ளது.

அதாவது YouTube Shopping போனஸ்கள், பிராண்ட் கூட்டாண்மைக்கான சலுகைகள் மற்றும் புதிய டிரெண்டுகளை உருவாக்கும் படைப்பாளிகளுக்கான சிறப்புச் சலுகைகள் உள்ளிட்ட கூடுதல் வருமான வழிகளை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

யூடியூப் பார்ட்னர் புரோகிராமின் (YouTube Partner Program) குறைந்தபட்ச Fan-funding தகுதி விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 500 சந்தாதாரர்கள், கடந்த 90 நாட்களில் குறைந்தது 3 வீடியோக்கள் மற்றும் 3,000 மணிநேர வீவ்ஸ் அல்லது 3 மில்லியன் Shorts பார்வைகளைப் பெற்றுள்ள படைப்பாளிகள், Fan-funding மற்றும் YouTube Shopping போன்ற கருவிகள் மூலம் தொடர்ந்து வருமானம் ஈட்ட முடியும். இருப்பினும், இந்த தகுதி நிலையில் விளம்பர வருமானத்தைப் பெற முடியாது.

யூடியூபர்களுக்கு ஷாக் கொடுத்த புதிய விதிகள்..

குறிப்பாக பொதுவெளியில் பதிவேற்றப்பட்ட Long-form videos விவ்ஸ் மட்டுமே 8000 மணிநேரக் கணக்கில் சேர்க்கப்படும். மேலும் ஷாட்ஸ் ஃபீடில் பெறப்பட்ட விவ்ஸ் மட்டுமே ஷாட்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பிரைவேட் (Private), அன்லிஸ்டெட் (Unlisted) அல்லது நீக்கப்பட்ட வீடியோக்களின் பார்வைகள் இதில் சேர்க்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர யூடியூப் நிறுவனம் தனது Premium Lite சேவையை மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கம் செய்து, படைப்பாளிகளுக்கான கூடுதல் சந்தா வருமானத்தையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

English summary
YouTube Tightens Monetization Rules: Creators Face Higher View Targets
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X