விஸ்வரூபம் எடுத்த YouTube: இந்தியாவில் 1.7 மில்லியன் வீடியோக்கள் டெலிட்! இனி தேடினாலும் சிக்காது..

|

2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தனது விதிமுறைகளை மீறியதற்காக இந்தியாவில் 1.7 மில்லியன் வீடியோக்களை YouTube நீக்கி இருக்கிறது. யூடியூப்பில் இந்தியாவில் மீறிய விதிமுறைகள் என்ன, எதற்கு தடை செய்யப்பட்டது என்பதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

1.7 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்கள் டெலிட்

1.7 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்கள் டெலிட்

யூடியூப் தனது மூன்றாம் காலாண்டு அறிக்கையில், தனது சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக இந்தியாவில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களை அகற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் YouTube உலகம் முழுவதும் 5.6 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

சமூகவழிகாட்டுதல்களை மீறியதாக அறிவிப்பு

சமூகவழிகாட்டுதல்களை மீறியதாக அறிவிப்பு

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் கடந்த செவ்வாய் கிழமை மூன்றாம் காலாண்டிற்கான அறிக்கையை வெளியிட்டது. அதில் சமூகவழிகாட்டுதல்களை மீறியதற்காக இந்தியாவில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களை அகற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

94 சதவீதத்திற்கு காரணம் இயந்திரங்கள்

94 சதவீதத்திற்கு காரணம் இயந்திரங்கள்

அதேபோல் ஸ்ட்ரீமிங் தளம் அதன் சமூகவழிகாட்டு நெறிமுறைகளை மீறியதற்காக உலகளவில் 5.6 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களை அகற்றி இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த வீடியோக்களில் 94 சதவீதத்துக்கும் அதிகமானவைகள் இயந்திரங்கள் மூலமாகவே கண்டறியப்பட்டிருக்கின்றன.

10 வியூவ்ஸ்கள் மட்டுமே

10 வியூவ்ஸ்கள் மட்டுமே

உலகளவில் சுமார் 5.6 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோக்கள் நெறிமுறைகள் மீறப்பட்டிருக்கிறது என்பதை 94 சதவீதம் இயந்திரம் தான் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீக்கப்பட்ட வீடியோக்களில் 31 சதவீதம் 1 முதல் 10 வியூவ்ஸ்களை மட்டுமே பெற்றதாக இருந்திருக்கிறது. அதேபோல் 67 சதவீதத்திற்கும் அதிகமான விதிமுறை மீறல் வீடியோக்கள் 10 பார்வைகளை பெறுவதற்கு முன்பே அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

728 மில்லியனுக்கும் அதிகமான comments

728 மில்லியனுக்கும் அதிகமான comments

தவறான மெட்டா டேட்டா, மோசடி தகவல், ஸ்பேம் தகவல் உள்ளிட்ட பல வகையில் கொள்கைகளை மீறிய வீடியோக்கள் யூடியூப்பில் நீக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் இல் இருந்து மூன்றாம் காலாண்டில் மட்டும் 728 மில்லியனுக்கும் அதிகமான commentகளை அகற்றி இருப்பதாக தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானவை ஸ்பேம் நோக்கங்கள் உடன் பகிரப்பட்ட கமென்ட்ஸ் ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பாக பயன்படுத்துவது அவசியம்

பாதுகாப்பாக பயன்படுத்துவது அவசியம்

உலகம் முழுவதும் யூடியூப் தளத்தை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த தளத்தில் வருமானம் வரும் என்பதால் தினசரி அதிக வீடியோக்களை பதிவிடுகின்றனர். அதேபோல் யூடியூப் தளத்தில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. பொழுதுபோக்கு முதல் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் வரை அனைத்துக்கும் நாம் யூடியூப்பை தான் பயன்படுத்துகிறோம். யூடியூப் இல் பதிவேற்றப்படும் பெரும்பாலான வீடியோக்கள் இது குழந்தைகளுக்கானது அல்ல எனத் தான் குறிப்பிடப்படுகிறது. எனவே யூடியூப் போன்ற சமூகவலைதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது அவசியம்.

பின்ச்-டு-ஜூம் அம்சம்

பின்ச்-டு-ஜூம் அம்சம்

யூடியூப் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் தகவலின்படி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலியில் பல அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது பின்ச்-டு-ஜூம், பிரிசைஸ் சீக்கிங், ஆம்பியண்ட் மோட், டார்க் மோட் மற்றும் பல புதிய பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது வழங்கப்பட்ட யூடியூப் பின்ச்-டு-ஜூம் என்ற அம்சத்தைக் கொண்டு வீடியோவை அருமையாக ஜூம் செய்து பார்க்க முடியும். மேலும் இந்த அம்சம் முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது. தற்போது இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்பியண்ட் மோட்

ஆம்பியண்ட் மோட்

அடுத்து யூடியூப் தளத்தில் வெளிவந்துள்ள ஆம்பியண்ட் மோட் அம்சம் ஆனது குறிப்பிட்ட வீடியோவில் உள்ள நிறத்தை அப்படியே ஆப் பேக்கிரவுண்டில் செயல்படுத்தி விடும். மேலும் ஏற்கனவே இருந்த டார்க் மோட் அம்சம் இப்போது அதிக இருளாக மாறி இருக்கிறது. குறிப்பாக இந்த அம்சம் டிவி, மொபைல், வெப் போன்றவற்றில் செயல்படுத்தப்பட்டுள்ளது. AMOLED டிஸ்ப்ளே வைத்திருக்கும் பயனர்களுக்கு இந்த அம்சம் கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
YouTube Takes Strict Action: Now Removes 1.7 million Videos in India! Do You Know the Reason?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X