யூடியூப் சேனலுக்காக ரிஸ்க் எடுத்த இளைஞர்கள் உயிரிழப்பு.!

ஆனால் அந்தசமயம் எதிர்பாராத விதமாக மேகன் ஸ்க்ரேப்பர் நீர் வீழ்ச்சிக்குள் வழுக்கி விழுந்துள்ளார், அவரை காப்பாற்ற ரைகர் மற்றும் அலெக்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து நீர்வீழ்ச்சிக்குள் குதித்துள்ளனர்.

|

உலகின் பிரபல வீடியோ ஷேரிங் தளமாக யூடியூப் இருக்கிறது. ஒரு வீடியோவை பார்க்க துவங்கினால் குறைந்தபட்சம் சில மணி நேரங்களை காவு வாங்கி, உங்களை தொடர்ந்து வீடியோ பார்க்க தூண்டும் தளமாகவும் யூடியூப் இருக்கிறது. ஆனாலும் இந்த யூடியூப் சேனலுக்காக ரிஸ்க் எடுத்த சில இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்க்கது.

யூடியூப்  சேனலுக்காக ரிஸ்க் எடுத்த இளைஞர்கள் உயிரிழப்பு.!

கடந்த 3-ம் தேதி அன்று கனடாவில் இருக்கம் ஷானன் நீர்வீழ்ச்சியில், பிரபல 'ஹை ஆன் லைஃப்' என்ற யூடியூப் சேலுக்காக ஒரு ரிஸ்க் வீடியோவை எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் 1பெண் எதிர்கபாராத விதமாக வழுக்கி வழுந்து உயிரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹை ஆன் லைஃப்:

ஹை ஆன் லைஃப்:

குறிப்பாக உலகின் அழகான மற்றும் அதே நேரத்தில் ஆபத்தான பகுதிகளுக்குச் சென்று சாகசங்கள் நிகழ்த்துவது இந்த ‘ஹை ஆன் லைஃப்'
சேனலை சேர்ந்த இளைஞர்களின் வழக்கம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு பார்வையாளர்களை
கொண்டுள்ளது இவர்களது யூடியூப் சேனல்.

ஆபத்தான பகுதிகள்:

ஆபத்தான பகுதிகள்:

மேலும் இந்த இளைஞர்கள் ஆபத்தான பகுதிகளுக்கு சென்று சாகசங்கள் நிகழத்துவது வழக்கம், அதன்படி அவர்கள் நிகழ்த்தும் சாதனைகளை வீடியோ எடுத்து தங்களது யூடியூப் சேனலில் அப்லோட் செய்வது மட்டுமே முழு நேர வேலையான வைத்திருக்கின்றனர் என்பது
குறிப்பிடத்க்கது.

 ஷானன் நீர்வீழ்ச்சி:

ஷானன் நீர்வீழ்ச்சி:

இந்த ‘ஹை ஆன் லைஃப்' சேனலுக்கு வேண்டி மேகன் ஸ்க்ரேப்பர், ரைகர் கேம்பல், அலெக்ஸி லியாக் என்ற இளைஞர்கள் கனடாவில் இருக்கும்
ஷானன் நீர்வீழ்ச்சியில் ஒரு அபாயகரமான டைவிங்கிற்கு தயாரிகி வந்துள்ளனர்.

நீர்வீழ்ச்சிக்குள் குதித்துள்ளனர்:

நீர்வீழ்ச்சிக்குள் குதித்துள்ளனர்:

ஆனால் அந்தசமயம் எதிர்பாராத விதமாக மேகன் ஸ்க்ரேப்பர் நீர் வீழ்ச்சிக்குள் வழுக்கி விழுந்துள்ளார், அவரை காப்பாற்ற ரைகர் மற்றும்
அலெக்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து நீர்வீழ்ச்சிக்குள் குதித்துள்ளனர், இதையடுத்து மூன்று பேரும் நீர்வீழ்ச்சியின் சக்திக்கு
ஈடு கொடுக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சமூக வலைதளங்கள்:

சமூக வலைதளங்கள்:

மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும், மேலும் ஹை ஆன் லைஃப்
சார்பில் புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது, அதில் நேர்மறை சிந்தனைக்கும், தைரியத்துக்கும் பக்கமாக நின்று ஒரு மிகச் சிறந்த வாழ்க்கையை மூவரும் நடத்தினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யூடியூப் சேனலின் பெயரை மாற்ற இதை செய்தாலே போதும்

யூடியூப் சேனலின் பெயரை மாற்ற இதை செய்தாலே போதும்

தொழில்நுட்ப யுகத்தின் அதீத வளர்ச்சியால் நமக்கு தேவையான தகவல்களை பார்ப்பதும், அவற்றை பார்க்கும் விதமும் பலமடங்கு மாறிவிட்டது எனலாம். இன்று நமக்கு பார்க்க பல-லட்சம் வித்தியாசமான திரைப்படங்கள், இசை, நகைச்சுவை நிகழ்ச்சிகள் என பலவற்றுக்கு நாம் விரும்புவதை தேர்வு செய்ய பல ஆப்ஷன்கள் உள்ளன.

யூடியூப்

யூடியூப்

யூடியூப் போன்ற சேவையை வழங்கும் பல்வேறு இதர தளங்களை விட யூடியூப் அதீத பிரபலமாக இருக்க ஒற்றை காரணம், இதை பயன்படுத்த
எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது தான். உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குவதில் இருந்து, மற்றவர்களின் சேனல்
வீடியோக்களை பார்ப்பது வரை அனைத்துமே இலவசம் தான்.

நகைச்சுவை

நகைச்சுவை

கடந்த மூன்று ஆண்டுகளில் லட்சக்கணக்கான யூடியூபர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். யூடியூப் தளத்தில் சொந்தமாக சேனல் வைத்திருப்போரை
தான் யூடியூபர்கள் என்கின்றோம். இவர்கள் இசை வீடியோக்கள், நகைச்சுவை அல்லது உரையாடல்கள் என ஏதேனும் வகையில் வீடியோக்களை வழங்கி
வருகின்றனர். இவை அனைத்தும் யூடியூபின் விதிமுறைகளின் கீழ் சீராக இயங்கி வருகின்றன.

 சுலபமான தகவல்

சுலபமான தகவல்

இவ்வாறு வீடியோக்களை பதிவிடும் அனைவரும் தங்களின் வீடியோக்களுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இவர்கள் பதிவிடும் வீடியோக்கள்
மற்றவர்களிடம் இருந்து திருடப்பட்டு இருக்க கூடாது. இதனை செய்வது மிகவும் எளிமையான காரியம் தான். உங்களின் சேனலுக்கு அருமையான பெயர் ஒன்றை தேர்வு செய்து, மிகவும் சுலபமான தகவல்களை வழங்கினாலே போதும். பின் உங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை பதிவிட்டால் வேலை முடிந்தது. அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டால், உங்களது சந்தாதாரர் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்களின் வீடியோக்களை அடிக்கடி பார்க்க விரும்புவோரை சந்தாதாரர் என்கிறோம்.

என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

சில சமயங்களில் ஒருவர் தேர்வு செய்யும் பெயர், சில காலம் கழித்து மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம். இவ்வாறு செய்ய என்ன செய்ய வேண்டும்
என்பதை தொடர்ந்து பார்ப்போம்:

- பிரவுசரை திறந்து யூடியூப் (www.youtube.com.) வலைத்தளம் செல்ல வேண்டும்.

- இனி சைன்-இன் (Sign In) பட்டனை க்ளிக் செய்து அங்கு கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
இங்கு உங்களின் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டு பதிவிட வேண்டும்.

- உங்களது கணக்கில் சைன்-இன் செய்ததும், வலதுபுறம் காணப்படும் தம்ப் (Thumb) புகைப்படத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

- அடுத்து க்ரியேட்டர் ஸ்டூடியோ (creator studio) ஆப்ஷனில் வியூ சேனல்-ஐ (view channel) க்ளிக் செய்ய வேண்டும்.

- சேனல் பெயருக்கு அடுத்து காணப்படும் செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்து பின் சேனல் செட்டிங்ஸ் (Channel Settings) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இனி புதிய வலைப்பக்கம் திறக்கும் இதில் ‘Edit on Google' ஆப்ஷனை க்ளிக் செய்து பெயரை மாற்றலாம்.

- இறுதியில் நீங்கள் மேற்கொண்ட மாற்றங்களை சேவ் செய்தால், புதிய பெயரை பார்க்க முடியும்.

Best Mobiles in India

English summary
YouTube star Ryker Gamble dies after falling from waterfall: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X