Home
News

YouTube கிரியேட்டர்கள் குஷி.. இனிமே AI மூலம் ஷார்ட்ஸ் வீடியோ.. கிரியேட்டிவிட்டி பிச்சிக்கும்.. எப்போது வருது?

ஒட்டுமொத்த யூடியூப் கிரேயேட்டர்கள் (YouTube Creators) மட்டுமல்லாமல், ஷார்ட்ஸ் வீடியோக்களை (Shorts Videos) அப்லோட் செய்யும் யூடியூப் பிரியர்களும் குஷியில் திக்கு முக்காடும்படியான அப்டேட் வந்திருக்கிறது. இனிமேல் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களில் கூகுளின் (Google) வியோ 2 ஏஐ மாடல் (Veo 2 AI Model) கிடைக்க இருக்கிறது. இந்த ஏஐ மாடல் மூலம் டெக்ஸ்ட்-டூ-வீடியோ ஜெனரேட் செய்து கொள்ள முடியும். இந்த யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ பீச்சர் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்தியா உள்பட ஒவ்வொரு நாட்டிலும் கோடிக்கணக்கான யூசர்கள் மற்றும் லட்சக்கணக்கான கிரியேட்டர்களை யூடியூப் நிறுவனம் கொண்டிருக்கிறது. யூடியூப் வீடியோக்களுக்கு நிகராக இப்போது யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்கள் அதிகம் பார்க்கப்படுகிறது. இதனால், யூடியூப் நிறுவனம் அதில் அடிக்கடி அப்டேட்களை கொண்டு வருகிறது. இதில் ட்ரீம் ஸ்கிரீன் (Dream Screen) பீச்சர் முக்கியமானது.

YouTube கிரியேட்டர்கள் குஷி.. இனிமே AI மூலம் ஷார்ட்ஸ் வீடியோ வருது!

ஏனென்றால், யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களில் ஏஐ பேக்கிரவுண்ட்களை உருவாக்க இந்த பீச்சர் கொடுக்கப்பட்டது. டெக்ஸ்ட் மூலம் டைப் செய்தால் போதும் அதற்கான பேக்கிரவுண்ட்டை பெற்று கொள்ளலாம். இப்படிப்பட்ட ட்ரீம் ஸ்கிரீன் பீச்சரில் புதிய அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. அதாவது, கூகுள் டீப்மைண்ட்டின் (Google DeepMind) வியோ 2 (Veo 2) மாடல் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுவொரு ஏஐ வீடியோ ஜெனரேட் மாடலாகும். இதன் மூலம் ஏஐ வீடியோ கிளிப்பை ஜெனரேட் செய்து கொள்ள முடியும். உங்களது கன்டென்ட்களுக்கு ஏற்ற கிளிப்கள் இல்லை என்றாலும், அதை ஏஐ மூலம் ஜெனரேட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இது கிரியேட்டிவிட்டிக்கும் நல்ல தீனிப்போடக் கூடியாக பீச்சராகவே இருக்கிறது. அதேபோல ஜெனரேட் ஸ்பீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, முன்பு ட்ரீம் ஸ்கிரீனில் ஜெனரேட் செய்யும்போது, ஏற்பட்ட கால நேரத்தைவிட அதிவேகமாக வீடியோ கிளிப்கள் உங்களுக்கு கிடைக்கும். அதேபோல ரியாலிஸ்டிக் டீடெயில்களுடன் உங்களுக்கு கிளிப்கள் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த வியோ 2 ஏஐ மாடலில் என்னென்ன அவுட்புட்களை எதிர்பார்க்கலாம்? இதை எப்படி யூடியூப் யூசர்கள் பயன்படுத்த முடியும்?

ஷார்ட்ஸ் வீடியோ பேக்கிரவுண்ட்கள் (Shorts Video Backgrounds): உங்களது யூடியூப் ஷார்ட்ஸ் கேமராவை ஓப்பன் செய்து, பிறகு கிரீன் ஸ்கிரீன் ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அதன்பிறகு ட்ரீம் ஸ்கிரீனுக்கு செல்லுங்கள். உங்களது போட்டோவை ஆட் செய்து கொள்ளுங்கள். இப்போது, உங்களது கிரியேட்டிவிட்டுக்கு ஏற்ப டெக்ஸ்ட்டை டைப் செய்து பேங்கிரவுண்ட்டை பெற்று கொள்ளுங்கள்.

ஷார்ட்ஸ் கிளிப் வீடியோ (Shorts Clip Video): இதிலும் ஷார்ட்ஸ் வீடியோ கேமராவை ஓப்பன் செய்து கொள்ளுங்கள், மீடியா பிக்கர் (Media Picker) ஆப்ஷனை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இப்போது, கிரியேட் ஆப்ஷன் தோன்றும். அதை கிளிக் செய்தால், வீடியோவுக்கான டெக்ஸ்ட்டை டைப் செய்ய சொல்லும். இதில் உங்களது கிரியேட்டிவிட்டிக்கு ஏற்ப டைப் செய்து கிளிப்களை பெறலாம்.

இதில் கிளிப் லென்த் தேர்ந்தெடுக்க முடியும். இந்த பீச்சர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் விரைவில் கிடைக்க இருக்கிறது. இதை, யூடியூப் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. ஆகவே, யூடியூப்பில் ஷார்ட்ஸ் வீடியோ போடும் ஒட்டுமொத்த யூசர்களுக்கும் இந்த பீச்சர் வரப் பிராசாதமாக இருக்கப் போகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
YouTube Shorts Supports Veo 2 AI Users Create AI Generated Videos With Dream Screen
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X