இந்தியா: டிக்டாக் செயலிக்கு போட்டியாக யூட்யூப் ஷார்ட்ஸ் அறிமுகம்.!

|

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் டிக்டாக் உலகப்புகழ் பெற்ற செயலியாகத் தான் இருக்கிறது, உலகம் முழுக்க சுமார் ஒரு டன் பயனர்களைத் தன்வசம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் இருபது கோடி டிக்டாக் பயனர்களை தன்பக்கம் இழுக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது யூடியூப் ஷார்ட்ஸ் என்னும் பெயரில் புதிய வீடியோ பகிர்வு செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

 எல்லையில் சீனா நாட்டுடன்

குறிப்பாக லடாக் எல்லையில் சீனா நாட்டுடன் நடந்த மோதலையடுத்து டிக்டாக்,ஷேர்சாட் உள்ளிட்ட பல சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. மேலும் இந்தத் தடையால் அதிகம் பாதிக்கப்பட்டது டிக்டாக் என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் இந்தியாவில் மட்டும் சுமார் இருபதுகோடி பயன்பாட்டாளர்களை கொண்டிருந்தது. பின்பு இந்தத் தடையால் ரூ.45,000 கோடிக்கும் மேல் டிக்டாக்

செயலியின் தாய் நிறுவனமான பைட்டான் மிகப் பெரிய நஷ்டமடைந்தது.

மட்டும் களத்தில் இறங்கவில்லை

டிக்டாக் பயன்பாட்டிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் மட்டும் களத்தில் இறங்கவில்லை, முன்னிலிருந்தே பேஸ்புக் நிறுவனம் ரீல்ஸ் என்ற இரண்டு ஷார்ட் வீடியோ பொழுதுபோக்கு அம்சத்தை தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் தற்போது கூகுளின் யூட்யூப் தளத்தில் புதிதாக ஷார்ட்ஸ் வீடியோ பயன்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.

யூட்யூப்  ஷார்ட்ஸ் வீடியோ

மேலும் இந்தியாவிலும் சிங்காரி மித்ரன் உள்ளிட்ட செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது கூகுள் நிறுவனம் யூட்யூப் ஷார்ட்ஸ் வீடியோ பகிர்வு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் 15வினாடிகள் வரையிலான வீடியோக்களை பகிரமுடியும்.

வீனஸ் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான அடையாளம்! விஞ்ஞானிகள் போட்டுடைத்த உண்மை!

யூட்யூப் ஷார்ட்ஸ்

மேலும் யூட்யூப் ஷார்ட்ஸ் தளத்தில் கேமரா மற்றும் வீடியோ எடிட்டிங் வசதிகளும் உள்ளது. பின்பு வெர்டிக்கல் வீடியோக்கள் ஒரு நிமிடம் வரை ஓடக்கூடிய வசதி விரைவில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்கப்படுகிறது.

டியூப் தளத்திலிருந்து

இதன் பெயர் அர்த்தமே இந்த பயன்பாடு ஷார்ட் வீடியோ பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஷார்ட்ஸ் கூடிய விரைவில் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டிக்டாக்-ஐ விட ஷார்ட்ஸ் பல மடங்கு பெரியதாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, யூட்யூப்-ன் இந்த வீடியோ தளம் பயனர்களுக்குத் தேவையான பாடல்களும், இசையும், திரைப்படங்களின் வசனங்களும் இவர்கள் யூடியூப் தளத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்து

பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதிர்ச்சி தகவல்: மோடி, கருணாநிதி என 10,000 ஆளுமைகளை உளவு பார்த்த சீனா: அம்பலமான உண்மை!

 டிக்டாக் செயலியை விற்க

பைட்டான்ஸ் நிறுவனம் டிக்டாக் செயலியை விற்க முடியாமல் தவித்து வரும் நிலையில், போட்டியாக கூகுள் நிறுவனம் யூட்யூப் ஷார்ட என்ற பெயருடன் களமிறங்கியுள்ளதால், டிக்டாக் செயலியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
YouTube Shorts launched in India And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X